நம் தேவைகளை அவர் அறிந்திருக்கிறார்
Fri Jul 17, 2015 9:24 pm
போதகர் ஒருவர் சாலையில் நின்று கொண்டு கர்த்தரின் அன்பைக் குறித்துப் போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்
பலரும் நின்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு இளைஞன் குறுக்கிட்டான்.
" நீங்கள் போதிக்கும் கடவுளால் எனக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை. ஏழையாய்ப் பிறந்தேன். இன்னும் ஏழையாகவேதான் இருக்கின்றேன். கர்த்தர் எனக்கு எந்த உதவியுமே செய்யவில்லை. எனக்காக எதையுமே செய்யாத கடவுளை எதற்காக நான் மதிக்கவேண்டும்?
இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே நின்றால் உம்மை என்ன செய்வேனென்று எனக்கே தெரியாது"
என்று கத்தினான்.
போதகர் பதறவில்லை. அவனைப் பார்த்துக் கேட்டார் " ஆக உனக்கு இப்போது பணம் தேவைப்படுகிறது அல்லவா? "
இளைஞன் ஆமென்று தலையசைத்தான்.
"கவலைப்படாதே. என்னுடைய நண்பர் ஒருவர் டாக்டராக இருக்கிறார். அவரிடம் போ. அவர் உன்னுடைய இரண்டு கைகளையும் தோள்பட்டை வரை வெட்டி எடுத்துக் கொண்டு உனக்கு பத்து லட்சம் ரூபாய் தருவார். போதுமா? " என்றார்.
இளைஞன் சூடானான்
" யோவ். லூசா நீ " என்றான்.
"கையை வெட்ட வேண்டாம்னா கால்களை இடுப்பு வரை வெட்டி எடுத்துக் கொண்டு இன்னும் ஐந்து லட்சம் சேர்த்து பதினைந்து லட்சமாக தரச்சொல்லவா?" என்றார்.
இளைஞன் கொதித்துப் போனான்.
"பாத்தா பெரிய மனுஷன் மாதிரி இருந்துகிட்டு இப்படி பைத்தியம் மாதிரி உளர்றியே! விலை மதிப்பே இல்லாத கையையும், காலையும் எவனாச்சும் காசுக்காக வெட்ட விடுவானாய்யா? " என்றான்.
போதகர் கேட்டார்,
" இத்தனை விலைமதிப்பில்லாத கையையும், காலையும் கொடுத்த கர்த்தரையா பிரயோஜனமற்றவர் என்று சொன்னாய் ?"
இளைஞன் வெட்கித் தலை குனிந்தான்.
செல்லமே! கர்தருக்கு நன்றி செலுத்தும்படியான எவ்வளவோ நன்மைகளை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவற்றை மட்டுமே எண்ணி அவருக்கு நன்றி செலுத்துவோம்.
நம் தேவைகளை அவர் அறிந்திருக்கிறார்.
John Saravanan

Permissions in this forum:
You cannot reply to topics in this forum