கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய இஸ்லாம்
Mon Jul 13, 2015 8:03 am
உலகெங்குமுள்ள முஸ்லீம்கள் தங்கள் முக்கியமான பண்டிகையான இரம்ஜான் ஆசரிக்கும் இந்த மாதத்தில், கிறிஸ்தவராகிய நாம் அவர்களைக் குறித்து அவ்வளவு அறிந்திருக்கிறோம்? உலகின் இரண்டாவது பெரிய மார்க்கமான முஸ்லீம்கள் உலக மக்கள் தொகையில் சுமார் 23%. கிட்டத்தட்ட 50 நாடுகளில் இஸ்லாம் முதன்மை மார்க்கம். வாட்டிகன் நகரத்தைத் தவிர எல்லா நாடுகளிலும் முஸ்லீம்கள் உண்டு. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு முஸ்லீம்களைக் குறிந்த புரிதல் என்ன? அவர்களைக் குறிந்த ஒரு 10 முக்கியமான செய்திகளை, அவசியம் தெரிந்து கொல்ளவேண்டிய காரியங்களைப் பார்ப்போமா?
"முஸ்லிம்" என்ற வார்த்தையும் “அராபியர்” என்ற வார்த்தையும் ஒன்றல்ல.
முஸ்லிம் என்பது மதத்தையும், அரபு என்பது ஒரு மக்கள் இனத்தவரையும் குறிக்கும். அராபியர் அரபு மொழி பேசுபவர். இஸ்லாம் என்ற மதம் அராபியரிடையே தோன்றியது என்பதும், குரான் அரபு மொழியில் எழுதப்பட்டது என்பதும் சரியானதே. ஆனாலும், பழைமையான இஸ்லாமுக்கும் முந்தைய காலத்திய, கிறிஸ்தவத்தைத் சார்ந்த அராபியரும் உண்டு. இஸ்லாம் அராபியரிடம் மட்டுமின்றி குர்துக்கள், துருக்கியர், இரானியர், மலேசியர் மற்றும் பல இனத்தவரிடமும் அறியப்பட்ட மதம்.
2. இஸ்லாம் என்பதற்கு “சமர்பித்தல்” அல்லது “ஒப்படைத்தல்”என்று அர்த்தம்.
ஒரு முஸ்லிம் என்பவர் தன்னை இறைவனுக்குச் சமர்ப்பித்தவர் என்று பொருள்படுவார். கடவுள் என்பவர் முகம்மது கற்றுத்தந்த வண்ணம்
தொழுதுகொள்ளப்படவேண்டியவர் மற்றும் சேவை செய்யப்பட வேண்டியவர் ஆவார். இஸ்லாமின் அடிப்படை ‘கடவுள்’ அல்ல, 'கடவுளும் அவரது தூதரான முகம்மதுவும்” என்பதே.
3.முஸ்லீம்களில் இரண்டு மிகப்பெரிய பிரிவுகள் உண்டு
சன்னி மற்றும் ஷியா என்ற முக்கியமான இரு பெரும் பிரிவுகள் முஸ்லீம்கள் உண்டு. உலக முஸ்லிம்களில் 85% பேர் சன்னிக்கள். முகம்மது மரித்தபின் அவருக்குப் பின் யார்? என்ற பிரச்னையில் இரண்டு பிரிவுகளாக இஸ்லாமியரிடம் பிளவுண்டது. முஸ்லீம்களில் தங்கள் நம்பிக்கை அடிப்படையில் இன்று பல பிரிவுகள் இருந்தாலும், இவ்விரு பெரும் பிரிவுகளுக்குள் அல்லாவின் பெயரால் நடைபெறும் யுத்தமே நாம் பல நாடுகளில் காண்பது.
4.ஒரே கடவுளான அல்லா, தீர்க்கதரிசிகள் (முக்கியமாக முகம்மது), அவர்களது புனித நூலாகக் கருதப்படும் குரான் மற்றும் அது சார்ந்த புத்தகங்கள், இறைத்தூதர்கள் மற்றும் கடைசி நியாயத்தீர்ப்பு ஆகியவை முக்கியமான நம்பிக்கைகள்.
மனிதர் பிறக்கும் போது நன்மை தீமை அறியாதவர்களாகவும், கடவுளின் சித்தப்படி வாழத்தகுதியுடன் தான் பிறக்கிறார்கள் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. பாவம் செய்தாலும் இந்தத் தகுதி நீடிக்கிறது என்றும் இரட்சிப்பு அல்ல, நாம் செய்யும் நற்செயல்களே இறைவனிடம் கொண்டு சேர்க்கும் என்பது குரான் போதிக்கும் இஸ்லாமிய நம்பிக்கைகள். குரான் என்பது முகம்மதுவுக்கு காபிரியேல் தூதன் தந்த இறைவார்த்தை என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். இது கிறிஸ்தவத்தின் அடிப்படைக்கு முற்றிலும் மாறானது. சுய முயற்சிகளால் தேவ இராஜ்ஜியத்தை அடைய முடியாதது என்பது சத்திய வேதம் நமக்குக் கற்றுத் தரும் உண்மைல் சரீர முயற்சி அற்பப் பிரயோஜனமுள்ளது என்கிறது வேதம்.
5.இயேசுவை ஏற்றுக் கொள்கிறார்கள்
இயேசுவை ஒரு புனிதராக - கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்றும், புனித வாழ்வு வாழ்ந்தார் என்றும், உலகின் முடிவில் திரும்பவும் வருவார் என்றும் ஏற்றுக் கொள்ளும் இஸ்லாம், கிறிஸ்துவை இரட்சகராக, சிலுவையில் மரித்து உயிர்தெழுத்தவராக, இறைமகனாக ஏற்காமல் புறக்கணிக்கிறது. மாறாக, இயேசு மரிக்காமல் மேலேடுத்துக்கொள்ளப்பட்டார் என்று நம்புகிறார்கள்.
6.இஸ்லாமிய வாழ்வு ஐம்பெரும் தூண்களால் ஆனது
ஒரு முஸ்லீமாகப் பிறந்தவன் 5 பெரும் காரியங்களைத் தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்பது இஸ்லாமிய அடிப்படை. இதை இஸ்லாமின் ஐந்து தூண்கள் என்கிறார்கள். அவை - கடவுளை மட்டுமல்ல, கடவுளையும் அவரது தூதரும் தீர்க்கதரிசியுமான முகம்மதௌ ஏற்றுக்கொள்ளல், ஐந்து முறை ஒவ்வொரு நாளும் மக்காவை நோக்கித்தொழுதல், ஏழைகள் மீது இரக்கம் காட்டி வரியாக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை அவர்களுக்காகச் செலுத்துதல், இரமதான் மாதத்தில் தவறாது நோன்பிருத்தல், வாழ்நாளில் ஒருமுறையேனும் வசதியிருப்போர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளல் என்பவைகள்.
7. முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல
பெரும்பான்மை முஸ்லீம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதோ ஆதரிப்பதோ இல்லை. கொல்வதையும், தற்கொலை செய்வதையும் இஸ்லாம் ஆதரிப்பதில்லை. ஒரு சிறுபான்மை முஸ்லீம்கள் மட்டுமே தீவிரவாதிகளாக இருக்கின்றனர். முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்ற தவறான கண்ணோட்டத்தை நாம் ஒழிப்பது அவசியம்.
8.முஸ்லீம்கள் மிகுந்த நட்பு பாராட்டுபவர்கள், அன்பானவர்கள்
முஸ்லீம்கள் பழக இனிமையானவர்கள், சிலர் மிகவும் அன்பானவர்கள், நட்புடன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பவர்கள் என்பதை கிறிஸ்தவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம் முஸ்லீம்களுடன் நல்ல நட்பையும் நேசத்தையும் வளர்த்துக் கொள்வது முக்கியம்.
9. முஸ்லீம்களுக்கு கிறிஸ்துவின் மூலம் வரும் இரட்சிப்பு அவசியம்
மற்ற மதத்தினரைப் போலவே முஸ்லீம்களும் இரட்சிப்பு கிறிஸ்துவின் மூலம் மட்டுமே என்கிற சத்தியத்தை அறியாதவர்கள் ஆவர். நம் தேவன் அவர்களுக்கும் தேவன்! ஆனால், கிறிஸ்துவின் மூலம் வருன் இரட்சிப்பை புறக்கணிப்பவர்கள். கிருபையின் கடைசி நாட்களில் இருக்கும் நாம், முன்னெப்போதும் அல்லாத அளவு இக்காலத்தில்தான் முஸ்லீம்கள் இரட்சிப்புக்குள் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். மட்டுமல்லாமல், நாம் அவர்களுக்கு தேவ வார்த்தையை அறிவிக்க ஆயத்தமாக இருத்தல் அவசியம்.
தேவன் முஸ்லீம்களை நேசிக்கிறார்
நாம் அவர்களை நேசித்தல் வேண்டும். நற்செய்தியைப் பகர வேண்டும். அவர்களை நினைத்தல் வேண்டும். எல்லா ஜெபங்களிலும் நினைக்க வேண்டும். தேவனுடைய இராஜ்ஜியம் அவர்களுக்கும் உரியதல்லவா? அவர்களைப் புறக்கணித்தலோ, பகைத்தலோ தேவனுக்குப் பிரியமில்லாத காரியம். இதை நினைவில் கொள்வோம். இரட்சிப்புக்கு அருகாமையில் இருந்து கொண்டு கிறிஸ்துவின் அன்பை அறியாத அவர்களுடன் நம் அன்பையும் கிறிஸ்துவையும் பகிர்ந்து கொள்வோம்.
(Christian missions at South Seminary ஐச் சேர்ந்த ஸேன் பிராட் எழுதிய இஸ்லாமைப் பற்றி 10 விஷயங்கள் என்ற குறுங்கட்டுரையைச் சார்ந்து எழுதப்பட்டது - by Benny)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum