சீக்கியர்களின் ஜெபம் - கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ளவே...
Thu Aug 22, 2013 9:22 pm
சீக்கிய குர்பானியிலிருந்து
ஜெபம்:
இறைவா! நான் நன்மை செய்யும் போது,
தவறிழைக்காமலிருக்க அருள் தாரும்!
நான் போர்க்களத்தில் இருக்கும் போது,
என் இதயத்தில்
அச்சம் உண்டாகாமலிருக்க அருள் தாரும்!
என் மனத்தில் எப்போதும்,
தூய்மையான எண்ணங்கள் இருக்கச் செய்யும்!
நான் பேராசைப்படாமல் இருக்கச் செய்யும்!
என் இறுதி நாள் நெருங்கும் போது
நான் போர்க்களத்தில் மடியச் செய்யும்!
குறிப்பு :
- 21-07-2008 அன்று, பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலளிக்கும் போது, பாரதப் பிரதமர், இந்த ஜெபத்தைச் சொல்லியே, தன் உரையை முடித்தார் .
- பஞ்சாப் ரெஜிமென்டிலுள்ள சீக்கியப்படை வீரர்கள், இந்த ஜெபத்தை தினமும் கட்டாயமாக சொல்வர்.
தகவல்: HINDU .p.10 -22-07-2008
நன்றி: கத்தோலிக்க பெந்தெகொஸ்தே மிஷன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum