விந்தையான கிறிஸ்தவர்கள்.....!!!
Wed Aug 03, 2016 10:32 am
1) ஆலயத்தில் காணிக்கைப் பாடலின் போது சட்டைப்பையில் 10ரூ இல்லாததால், 50ரூபாயை எடுத்துப்போடும் போது, நமக்கு அந்த பணம் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் நண்பர்களுடன் ஷாப்பிங் மாலுக்கு போகும்போது அதே தொகை மிகவும் அற்பமாக தெரிகிறதே!
2) ஆலயத்திற்கு சென்று 2.1/2 மணிநேரம் ஆராதனையில் உட்காரும்போது அது மிக நீண்ட நேரமாகத் தெரிகிறது. ஆனால் சினிமா பார்க்கும்போது அதே 2.1/2 மணி நேரம் மிக குறைவாகத் தெரிகிறதே!
3) வேதாகமத்தில் ஒரு அதிகாரத்தைப் படிப்பதற்குள் போரடித்து விடுவதைப் போலிருக்கிறது. ஆனால் நாவல்கள், கதை புத்தகங்களில் நூற்றுக்கணக்கான பக்கங்களைப் படிக்கும்போது போரடிக்காமல் இருக்கிறதே!
4) சபையில் ஒரு ஸ்பெஷல் மீட்டிங்கை குறித்த அறிவிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்பே கேள்விப்படுகிற நாம், கடைசி நேரத்தில் தெரியவரும் ஒரு பார்ட்டிக்காக கூட்டத்தை தவிர்த்து விடுகிறோமே!
இது விந்தையல்லவா?
5) கல்லூரி முடிந்தவுடன் 15நிமிடம் ஜெபக்குழுவிற்கு அழைக்கும் தோழியிடம் “பஸ் போய்விடும்” என்று கூறி தோளில் பையைப் போட்டு வேகமாகச் செல்லும் நாம், தோழி கொடுக்கும் பிறந்தநாள் ட்ரீட் அன்று மட்டும் அப்படி சொல்வதில்லையே!
6) செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை அப்படியே நம்புகிற நாம், வேதத்தில் சொல்லப்பட்டவைகளுக்கு மட்டும் சந்தேகத்தோடு கேள்வி எழுப்புவது விந்தையல்லவா?
7) ஒரு பஸ் டிரைவரை நம்பி, தைரியமாய் பஸ்ஸில் ஏறும் நாம் நம்மை உருவாக்கிய தேவனை நம்பி நம் வாழ்வை அவர் கைகளில் கொடுக்கத் தயங்குகிறோம்!
வீட்டு செலவிற்காக எப்போதாவது கேட்கும் அம்மாவிடம் 100ரூ கொடுக்க அத்தனை முறை யோசிக்கும் நாம், ஹெல்மெட், அணியாததற்காக, போலீசாரிடம் “டக்” என்று 100ரூபாயை எடுத்துக் கொடுக்கிறோமே!
9) ஆலயத்தில் ஒருவர் ஒரு ஆவிக்குரிய புத்தகத்தை வாங்கச் சொல்லும்போது, “வீட்டில் எக்ஸ்ட்ரா காசு கொடுக்கமாட்டார்கள்” என்று சொல்லும் நாம், லேட்டஸ்ட் மாடலில் ட்ரெஸ் தைக்க 500, 600 என்று கொடுக்கிறோமே!
10) பரலோகத்தில் எப்படியாவது ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பும் நாம், மரிக்க விரும்புவதில்லையே!
இது விந்தையிலும் விந்தையல்லவா?
11) ஆலயத்தில் youth rally வருவதற்கு சாக்கு போக்கு அல்லது எதுவுமே சொள்ளம்மல் 3 நாள் tour என்று சொன்னவுடன் அதை விரும்புவது விந்தையல்லவா ?
12) ஆலயத்துக்கு நேரத்திற்கு செல்லாமல் வேலைக்கும் பள்ளிக்கும் சரியான நேரத்தில் செல்வது விந்தையல்லவா ?
13) இரவு நேரத்தில் ஜெபிக்க அல்லது பாட புத்தகங்களை வெகு நேரம் படிக்க விரும்பாமல் whatsapp இல் இரவு 12 மணி அதற்க்கு மேல் இருப்பது விந்தையல்லவா ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum