தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் Empty இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள்

Tue Aug 20, 2013 12:44 pm
முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை
செப்ட‌ம்ப‌ர் 11 நிக‌ழ்வுக‌ளுக்குப் பிற‌கு நாட்டின் செய்தித் தொடர்பை பயன்படுத்துக் கொள்ளும் இஸ்லாமிய‌த் த‌லைவ‌ர்க‌ள், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்க‌மென்றும் முஹம்மதுவின் இந்த‌ மார்க்கத்தில் வ‌ன்முறைக்கு எந்த‌ அடிப்ப‌டையும் இல்லை என்றும் சொல்லி வ‌ருகிறார்க‌ள்.

அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் பிரிட்டனின் பிரதமர் பிளேர் ஆகியோரும் கூட இஸ்லாம் சில வன்முறை வெறியர்களால் "கடத்தப்பட்டுள்ளது" என இதே அறிக்கையை மறு மொழிந்துள்ளனர். இது உண்மை தானா?

இது உண்மையல்ல என்பது வருத்தத்திற்குரிய விஷயம். ஏனெனில், நடைமுறையில் நாம் காணக்கூடிய உண்மைகள் இஸ்லாம் அடிப்படையிலேயே - அதாவது முஹம்மதுவினுடைய வாழ்கையிலும் குர்‍ஆனிலுமே - வன்முறையினால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை ஐயமின்றி உறுதி செய்கின்றன‌.

எனவே இத்தகைய முஸ்லீம் ஆதரவாளர்கள், அவர்கள் மீது சந்தேகம் கொள்ளாத மேற்கத்திய நாட்டினரை தவறான வழியில் அவர்களை திசை திருப்பக்கூடாது, நேர்மையான முறையில் தங்களின் மார்க்கத்தினுடைய அடிப்படையைக் கருத்தில் கொண்டு எப்போதும் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும்.

இதோ இங்கு, இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல என்று விளக்கவல்ல, சரி பார்த்துக் கொள்ளத்தக்க‌, தெளிவான‌ பத்துக் காரணங்கள் உள்ளன‌ (Here are ten clear, verifiable reasons that explain why Islam is not the religion of peace).

தெளிவான காரணங்கள் என்றால் என்ன?(Clear?): முஸ்லீம் ஆதரவாளர்கள், வழக்கமான சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத மறுப்புகளை வெளியிடுவார்கள், அதாவது அவர்கள், "இந்த வசனம் "Out of Context" க்கு வெளியே விளக்கியுள்ளார் என்று சொல்வார்கள்.
இதை தடுப்பதற்காகவே, நான் ஒவ்வொரு குர்‍ஆன் வசனத்தின் சூழ்நிலை(Context) என்ன என்பதை இந்த கட்டுரையிலேயே விளக்கியுள்ளேன் அல்லது அதைப் பற்றி விவரிக்கும் இதர கட்டுரைகளின் தொடுப்பை தகுந்த இடத்தில் கொடுத்துள்ளேன்.

நான் விளக்கும் எந்த வசனமும் சூழ்நிலைக்கு வெளியே(Out of Context) விளக்கப்படவில்லை. மற்றும் இக்கட்டுரையில் இஸ்லாமியர்களின் குர்‍ஆன் மொழி பெயர்ப்பையே நான் பயன்படுத்தியுள்ளேன்.

சரி பார்த்துக் கொள்ள முடியுமா? (Verifiable?) : வாசகர்கள் குர்‍ஆன் வசனங்களை பல வகையான ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் அடங்கிய‌ www.quranbrowser.com என்ற தளத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, வசனம் 61:10 - 12 ( 61 என்பது சுரா, 10 - 12 என்பது வசனங்க‌ள்) என்ற முறையில் டைப் செய்து பார்த்துக் கொள்ளவும். (தமிழில்http://chittarkottai.com/quran/tamil என்ற தளத்தில் குர்‍ஆன் மொழிபெயர்ப்பு கிடைக்கும்.)

முத‌லில் நாம் முஸ்லீம்க‌ளின் அணுகு முறைக்கு ஒரு பதில் சொல்லியாக‌ வேண்டும். இஸ்லாம் தான் உலகிலேயே தலைசிறந்த மார்க்கம் என நம்பி அதனை உலகம் முழுவதும் பரப்ப விரும்பும் ஒரு முஸ்லீம் ஊழிய‌ர் அல்ல‌து எதிர்வாத‌ எழுத்தாளர் இந்த 10 காரணங்களை ம‌றுக்க‌ முனைய‌லாம்.

ஆனால் இந்த‌ப் ப‌த்துக் கார‌ண‌ங்க‌ள‌ட‌ங்கிய‌ ப‌ட்டிய‌லை ம‌றுக்க‌ முய‌ர்ச்சித்தால், அது ஒரு புத்த‌க‌த்தை இறுதி அத்தியாய‌த்திலிருந்து ஆராய‌ முய‌ல்வ‌து போன்ற‌தாகும். இந்த‌ ஆய்வாள‌ர், எல்லா அத்தியாயங்களையும் ப‌டிக்கும் க‌டின‌ வேலையைத் த‌விர்க்கும் ப‌டியாக‌வே அவ்வாறு செய்த‌து போலாகும்.

இதுபோன்றே, முஸ்லீம் மறுப்பு எழுத்தாளர்களும், ஊழியர்களும் இக்கட்டுரைகளுக்கும் தொடுப்புகளுக்கும் பின்னால் உள்ள கடின உழைப்பைப் புறக்கணிக்கிறார்கள்.

இந்த முக்கியமான பத்துக் காரணங்கள் கொண்ட பட்டியல் பல கட்டுரைகளை ஆராய்ந்து வடித்த சாரமும், இதை எழுதியோனும் வேறு பல எழுத்தாளர்களும் செலவழித்த கடின உழைப்புமாகும். முஸ்லீம்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் இவைகளில் உண்டு.

எனவே இதனை மேற்கூறியவாறு தவறாக ஆராய்பவர்களின் விமர்சனங்கள் கடின உழைப்பின்றி மேலோட்டமாக உள்ளதினால், வெறுமையானவையாயும் அவர்களின் ஆய்ந்துணர்தல் ஆழமற்றதாயும் உள்ளன.

அவர்கள் பைபிளை நிச்சயமாகவே புரிந்துகொள்ள‌மாட்டார்கள் என்பதுடன் தங்களின் மறுப்புகளினால் இஸ்லாமுக்கு வெள்ளை சுண்ணாம்பு அடித்துக் காட்டுகிறார்கள். இக்கட்டுரையில் கொடுக்கபப்ட்ட அதிகபடியான இதர கட்டுரைகளை இதனை விளக்கும்.

எவ்விதம் அவர்கள் இஸ்லாமுக்கு வேண்டுமென்றோ அல்லது அறியாமையினாலோ வெள்ளையடிக்கிறார்கள் என்பது விளங்கும்.

அதாவது அவர்களுடைய மதத்தைப் பற்றியே அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை அல்லது தெரிந்திருந்தும் வேண்டுமென்றே உண்மையை மறைக்க விரும்புகிறார்கள் என்றே அர்த்தமாகிறது. எது எப்படியாயினும் இஸ்லாமைப் பற்றிய‌ உண்மை வெளிப்படுதல் அவசியம்.


10. முஹம்மது தம் ஆயுதங்களுக்கு புனைப் பெயரிடுகிறார்Muhammad nicknames his weapons

த‌ப‌ரி (கி.பி. 839-923) என்ப‌வ‌ர் ஆராய்ச்சியாள‌ர்க‌ளால் இன்று மிக‌வும் ந‌ம்ப‌த்தகுந்த இஸ்லாமிய ச‌ரித்திர‌ ஆசிரிய‌ராய் க‌ருத‌ப்ப‌டுகிறார். உண்மையில், அவர் எழுதிய சரித்திரம் நியுயார்க் பதிப்பகத்தின் மாநில பல்கலைக் கழகத்தினால்(State University of New York Press ) 38 பாக‌ங்க‌ளாய் மொழிபெய‌ர்க்க‌ப்ப‌டத்‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

(Ismail K. Poonawala மொழிபெய‌ர்த்த‌ ந‌பியின் க‌டைசி வருடங்கள் 9:153-55 ஐ நாம் ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம்).

முஹம்மதுவின் இறுதி கால‌த்தில் தொகுக்க‌ப்ப‌ட்ட‌ ஆஸ்திக‌ளின் ப‌ட்டிய‌லில், (குதிரைக‌ள், ஒட்ட‌க‌ங்க‌ள், பால் கொடுக்கும் ஆடுக‌ள் போன்ற‌வைக‌ள்) த‌ப‌ரி, முஹம்மதுவின் ஆயுத‌ங்க‌ளின் புனை‌ப் பெய‌ர்க‌ளைப் ப‌திவு செய்கிறார்.

முஹம்மது, கெயின்கா(Qaynuqa) என்ற யூதக் கூட்டத்தை மதீனாவிலிருந்து ஏப்ரல் 624 ல் துரத்திவிட்டபோது எடுத்துக்கொண்ட மூன்று வாள்களுக்கு " பிடுங்குதல்" (Pluck Out), "மிகக் கூர்மை"(Very Sharp), "மரணம்"(Death) எனச் செல்லமாகப் பெயரிட்டிருந்தார்.

வேறு இரண்டு இடங்களிலிருந்து எடுத்த இரண்டு வாள்களுக்கு, " கூர்மை"(Sharp), "இது மிதக்காது" ("That is wont to sink" presumably into human flesh) எனப் பெயரிடப்பட்டது.

அவரது ஹிஜராவிற்குப் பிறகு அல்லது 622ல் மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயற்தலுக்கு பிறகு அவரிடம், "கூர்மை" (Sharp) மற்றும் "முதுகெலும்புள்ளது" (Having the vertebrae of the back) என்றழைக்கப்படும் இரு வாள்கள் இருந்தன.

இந்தக் கடைசி வாள் அவர், மார்ச் மாதம் 624 ல், பத்ரு போரில் (Battle of Badr) வெற்றியடைந்தபோது கொள்ளைப்பொருளாய் சேகரித்தது.

அடுத்து, முஹம்மது, கெயின்கா(Qaynuqa) கூட்டத்தினரிடமிருந்து மூன்று வில்களை எடுத்துக்கொண்டு அவைகளுக்கு "எளிதில் உபயோகிக்க ஏற்றது(Most conducive to ease) அல்லது அகலமானது(wide)", "வெண்மை(white)", மற்றும் "நாப் மரத்தினாலானது(of nab wood)" (வில் செய்ய பயன்படும் மரத்தின் வகை) எனப் பெயரிட்டிருந்தார்.

அவருடைய ஒரு மேலாடையின் பெயர் "போதுமானது"(ampleness) அல்லது "அளவுக்கதிகமான பகுதி"(redundant portions) என்று வைக்கப்பட்டு இருந்தது, முஹம்மது சற்று பருமனானவர் என்பதால் இப்பெயர்கள் வைக்கப்பட்டு இருக்கலாம். (cf. Ibn Ishaq, Life of Muhammad, trans. Guillaume, p. 383)

இறுதியாக‌,முஹம்மதுவுக்கும் கூட ஒரு புனைப்பெயர் இருந்தது. தபரி முஹம்மதுவை நல்லவராக காட்டும் பல பெயர்களை பட்டியலிட்டுவிட்டு, அவ்வளவாய் நல்லப்பெயர் என்று கருதமுடியாத‌ ஒரு பெயரையும் குறிப்பிடுகிறார்,

அந்தப்பெயர் "ஆதாரம் வைக்காமல் அழிப்பவர் -The obliterator" என்பதாகும், இதன் பொருள் ஒரு சுவடு கூட வைக்காமல் அழிப்பவர் என்பதாகும்.

இஸ்லாமிய ஆதரவாளர்கள் தபரியை அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்வதை ஆட்சேபிக்கலாம் (முஹம்மதுவை ஒரு வெற்றிச் சாதனையாளராகவும், வீரமிக்கவராகவும் அவ‌ர் காண்பிக்கும் போது தவிர). அவரின் ஆக்கம் குர்‍ஆனுக்கும் சில ஹதீஸ்களுக்கும் (குர்‍ஆனுக்கு அப்பாற்பட்டு, முஹம்மதுவின் வார்த்தைகளும் செயல்களும் அடங்கியவை) நிகராகக் கருதப்பட முடியாது என்றுச் சொல்வார்கள் இஸ்லாமியர்கள்.

இது உண்மையும் கூட. ஆனால், இஸ்லாமிய ஆதரவாளர்கள், முஹம்மதுவுடன் இத்தகைய ஆயுதங்களைப் பெயரிடுவதைக் குறித்த சம்பிரதாயங்களைத் தொடர்புபடுத்திக் கூறப்படுவது ஏன் என‌ விளக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

பிற்காலத்தில் இயேசுவைக் குறித்தும் கூட, ஆதாரபூர்வமற்ற, நடைமுறைகள் பற்றிய‌ செய்திகள் எழுந்தன. அவைகளும், அவர் ஆயுதங்களுக்குப் பெயரிட்டதாகக் கூட அல்ல, அவைகளை வைத்திருந்ததாகவே கூறவில்லை. முஹம்மதுவைப் பற்றிய இந்தக் கேள்விக்கு அடுத்த ஒன்பது காரணங்களில் பதில் உள்ளது.

இந்த‌த் தொடுப்பில் உள்ள‌ க‌ட்டுரையும் இது போன்றேஇத்தொடுப்பில் உள்ள கட்டுரையும், வாள் ப‌ற்றிய‌ இயேசுவின் க‌ருத்தை மிகத் தெளிவாக விவரிக்கிறன‌.

நிச்ச‌ய‌மாக‌வே அவ‌ர் வாளை உவகையுடன் கையாண்டோ, பெருமையாக அத‌ற்கு புனைப் பெயரிட்டு அழைத்தோ , அதினால் ம‌கிழ்வுற‌வோ இல்லை, வாள்களை பெருமையாக மற்றவர்களுக்கு காட்டி சந்தோஷப்பட்டதோ இல்லை.

இவ்வ‌ண்ண‌மாய், வ‌ன்முறை, முஹம்மதுவின் வாழ்க்கையிலும், ஆர‌ம்ப‌ம் தொட்டே, இஸ்லாமின் இதயத்திலும் அமர்ந்துள்ளது. அத‌னால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல‌.


9. குர்‍ஆனில், முஹம்மது விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நூறு ச‌வுக்கடிகள் தண்டனையாகப் பெற வேண்டும் எனக் கட்டளையிடுகிறார். Muhammad commands in his Quran that adulterers and adulteresses should receive a hundred lashes. 

குர்‍ஆன் சூரா: 24:2 விபசாரியும், விபசாரனும் இவ் விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.


சரித்திர பூர்வமாக இந்த குர்‍ஆன் சூரா(வசனம்) கொடுக்கப்பட்டது, டிசம்பர் 627 அல்லது ஜனவரி 628ல் முஹம்மது, ஒரு கூட்டத்தின் மீது நடத்திய தாக்குதலின் போதுதான்.

இதில் தான் முஹம்மது அவரது வலது கரம் போன்றிருந்த தளபதி அபு பக்கரின் மகளும் தனது பிரியத்திற்குரிய மிகவும் இளையவரான மனைவி ஆயிஷாவையும் உடனழைத்து வந்திருந்தார்.

முஸ்லீம்களின் வெற்றிக்குப் பிறகு அவர்கள் நூற்றைம்பது மைல் தொலைவில் உள்ள மதீனாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் இறுதியாக இராத்தங்கிய இடத்தில், ஆயிஷா, தன் இயற்கை உந்துதலுக்காக அருகில் சென்றிருந்தபோது இருட்டில் தனது நெக்லஸைத்(Necklace) தொலைத்துவிட்டார்.

அந்தப்படை விடிகாலையில் தங்கியிருந்த இடத்தினின்று புறப்படும் வேளையில், ஆயிஷா, தனது நெக்லஸைத் தேடுவதற்காக தனது ஒட்டகத்தின் மீது இருக்கும் அம்பாரியினின்று இறங்கி, தேடி அதைக் கண்டுபிடித்துவிட்டார்.

இதற்கிடையில், அந்த ஒட்டகத்தை நடத்துபவன், ஆயிஷா அந்த திரையிடப்பட்ட அம்பாரியினுள் தான் இருக்கிறார் என எண்ணி ஒட்டகத்தை நடத்திச் சென்றுவிட்டான். திரும்பிவந்த ஆயிஷா, தான் தனித்து விடப்பட்டுப் போனதை உணர்ந்தார்.

எனினும், சஃப்வான் (Safwan) என்ற ஒரு அழகான முஸ்லீம் வாலிபன், ஆயிஷாவைப் பார்த்து, மதீனா வரை அவருடன் சென்றான். அந்த இரு இளையவர்களும் ஒன்றாக நகருக்குள் நுழைவதைப் பார்த்த முஸ்லீம்களும், முஹம்மதுவின் எதிர்ப்பாளர்களும் அவர்களுக்கெதிராக வார்த்தைகளை வீசினார்கள்.

இதன்பலனாக சிறிது நேரம் சென்று, ஆயிஷா எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் தவறான நடத்தை அவர்மீது சுமரப்படவில்லை என்றும் வெளிப்பாடு தோன்றியது.

குர்‍ஆன் சூரா24, விபச்சாரத்திற்கு எதிராக சில அடிப்படை விதிகளை நியமித்துள்ளது. அதில் நூறு சவுக்கடி தண்டனையாக கொடுக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு விதி.

ஆச்சரியப்படும் விதமாக குர்‍ஆன் சூரா24:2 குற்றம் சாட்டுபவர்களும் தீர்ப்பிடுபவர்களும் கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுவதை இரக்கம் தடை செய்யலாகாது என வலியுறுத்துகிறது.

மேலும், ஆரம்பகால‌ நம்பிக்கைக்குரிய‌ பாரம்பரியங்கள், அதாவது மிகவும் நம்பத்தகுந்த ஹதீஸ்களை எழுதிய புகாரி (AD 810-870) மற்றும் முஸ்லீம் (AD 817-875) ஆகியோர் பதிவு செய்துள்ளபடி, முஹம்மதுவையும் அவரது முஸ்லீம்களையும் விபச்சாரம் செய்யும் ஆண்களையும் பெண்களையும் கல்லெரிந்து கொல்பவர்களாய்க் காண்பிக்கின்றன.


உமர் சொன்னது: இறைவன் முஹம்மதுவை சத்தியத்துடன் அனுப்பி, அவரிடம் புத்தகத்தை (குர்‍ஆன்) இறக்கினார். மகா மேன்மைபொருந்திய இறைவன் இறக்கியதில், கல்லெரிதல் என்கின்ற வசனமும் அடங்கியிருந்தது.

இறைவனின் தூதர் (முஹம்மது) மக்களை சாகும்வரை கல்லெரியச் செய்தார். அவரின் மரணம் வரை நாங்களும் அதைச் செய்தோம். தகாத உறவில் ஈடுபடும் மணமான ஆண்களையும் பெண்களையும் அது நிரூபிக்கப்படும் பட்சத்திலோ, கர்ப்பம் தரித்தாலோ அல்லது அதனை ஒப்புக்கொண்டாலோ, கல்லெரிதல் நம் கடமை என‌ இறைவனின் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

Umar said: God sent Muhammad with the truth and sent down the Book [Quran] to him, and the verse of stoning was included in what God most high sent down.God's messenger [Muhammad] had people stoned to death, and we have done it also since his death. Stoning is a duty laid down in God's Book for married men and women who commit fornication when proof is established, or if there is pregnancy, or a confession. Muslim no. 4194


உமர் என்பவர் முஹம்மதுவின் வலது கரத்தினைப் போன்ற தளபதியாவார் (அபு பக்கரும் கூட). முஹம்மதுவின் மரணத்திற்குச் சில காலம் பின்பும் கூட, குர்‍ஆனில் கல்லெரிவது தொடர்பான வசனங்களைப் பெற அவர் மிகவும் முயன்றார்,

ஆனால் அவர் அதில் வெற்றியடையவில்லை (Ibn Ishaq, Life of Muhammad, trans. Guillaume, p. 684). இப்படி இருப்பினும், கீழ்கண்ட ஹதீசும் அதற்கு அடுத்ததும் கல்லெறிவதை முஸ்லீம்கள் ஆதரிக்கப் போதுமானவைகளாய் இருக்கின்றன‌. [1], [2], [3], [4].

பின் விவ‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து தான் அனேக‌மாக‌ அதிக‌ப‌ட்சக்‌ கொடுமையாக‌ இருக்கிற‌து:

ஒரு பெண் ந‌பியிட‌ம் வந்து, த‌ன்னைச் சுத்திக‌ரிக்கும்படி (அவ‌ள‌து பாவ‌த்திற்காக‌ த‌ண்ட‌னை அடைவதன் மூலம்) கேட்டாள். அத‌ற்கு அவ‌ர், அவள் சென்று இறைவனிடம் பாவ ‌ம‌ன்னிப்புக்காக‌ வேண்டிக் கொள்ளும்படிச் சொல்லி அனுப்பிவிட்டார்.

அவள் நான்கு முறை மறுபடியும் மறுபடியும் வந்து, த‌காத‌ உற‌வின் மூல‌ம் தான் க‌ர்ப்ப‌வ‌தியான‌தை ஒப்புக் கொண்டாள். அவ‌ர் அவ‌ளிட‌ம் குழந்தை பிற‌க்கும்வ‌ரை பொறுத்திருக்க‌ச் சொன்னார்.

அத‌ன் பின்பு, முஸ்லீம் ச‌முதாய‌த்தினரிட‌ம் அவ‌ள் குழந்தை பால் ம‌ற‌க்கும் ம‌ட்டும் காத்திருக்குமாறு கூறினார். அக்குழ‌ந்தை, திட‌ உண‌வு உட்கொள்ளும் கால‌ம் வ‌ந்த‌ போது, முஹம்மது குழ‌ந்தையை ச‌முதாய‌த்தின‌ரிட‌ம் கொடுத்து விட்டு அந்த‌ப் பெண்ணை கல்லெரிந்து கொல்ல‌ ஆணையிட்டார்.


அவர் அவளுக்காக‌ க‌ட்ட‌ளை கொடுத்து, அவ‌ள் அவளது மார்பு வ‌ரை குழியில் புதைக்க‌ப்ப‌ட்ட‌வுட‌ன், மக்கள் அவள் மீது க‌ல்லெரியும்ப‌டிக் க‌ட்ட‌ளையிட்டார். கலித் பி. அல்வலித் என்ப‌வ‌ர் ஒரு கல்லுடன் முன்வந்து, அதை அவள் தலையை நோக்கி எறிந்தார். இரத்தம் முகத்திலிருந்து வெளிப்பட்ட போது அவர் அவளைச் சபித்தார்… 

And when he had given command over her and she was put in a hole up to her breast, he ordered the people to stone her. Khalid b. al-Walid came forwardwith a stone which he threw at her head, and when the blood spurted on his face he cursed her. (Muslim, no. 4206)


முஹம்மது, கலித்தை சற்று நிதானமாக(Gentle) இருக்க‌ச் சொன்னது உண்மைதான். ஆனால், மார்பு வரையிலும் புதைபட்டிருக்கும் ஒருபெண்ணை நோக்கி ஒரு கல்லை எறிபவர் எந்த அளவுக்கு நிதானமாக எறிய‌ முடியும்?

நாற்பது மைல் வேகத்தில் செல்லவேண்டிய கல் முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டுமா? ஒருவேளை, முஹம்மது கலித்தை அவளைச் சபிக்காதிருக்கும்படிச் சொல்லியிருக்கலாம்.

எது எப்படியாயினும், நபி, அந்தப் பெண்ணினுடைய இறந்த சடலத்தின் மீது துவா(ஜெபம்) செய்து, பின்பு அடக்கம் செய்தார். முஹம்மதுவும் அவரது சமுதாயத்தினரும் அந்தப் பெண்ணை இரக்கமின்றிக் கொலை செய்துவிட்டுச் செய்த‌ அந்த துவா(ஜெபம்) உண்மையிலேயே எந்த அளவுக்கு பலனுள்ளதாய் இருந்திருக்கும்?

அவர்கள் அவளை மன்னித்து தன்னுடைய குழந்தையை வளர்க்கச் செல்ல அவளை அனுமதித்திருக்க வேண்டும். 

இன்றுள்ள‌ முஸ்லீம் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சில‌ர், இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளாத போதிலும், அவர்கள் ஏன் உண்மையான இறைவன் குர்‍ஆன் சூரா24:2ல் உள்ளபடி சவுக்கடி கொடுப்பது போன்ற ஒரு கொடிய தண்டனையை இறக்க வேண்டும் என்பதினை விளக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில், புதிய ஏற்பாடு இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே கிறிஸ்தவர்கள், இந்த வசனத்தை அவசியம் நிராகரிக்க வேண்டும். ஏனெனில், கிறிஸ்து, விபச்சரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை மன்னித்து, இனிமேலும் பாவம் செய்யாதே எனக்கூறி அனுப்பிவிட்டார். ( யோவான் 8:1- 11).

அவர் நமக்கு நல்லதொரு வழியைக் காண்பித்து உண்மையான இறைவனின் சித்தத்தை நமக்கு விள‌ங்க‌ப் ப‌ண்ணினார். 

முந்தின தண்டனைகள் பற்றியும் அவைகள் இன்றைய நாளில் எவ்விதம் வழங்கப்படுகின்றன என்பன குறித்த‌ கூடுதல் தகவலுக்கு இந்த தொடுப்புக்குச் செல்லவும். இது முஸ்லீம் ஆதரவாளர்களுக்குப் பதிலளிப்பதுடன் யோவான் 8:1-11 ஐ முழுவதுமாக விளக்குகிறது.

ஆக‌, கொடுமையான வன்முறை ஆரம்பகால‌ இஸ்லாமின் இதயத்தில் வீற்றிருந்தது - முஹம்மதுவின் வாழ்விலும் அவரது குர்‍ஆனிலும் வன்முறை காணப்பட்டது. எனவே இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் அல்ல‌.


8. முஹம்மது அவரது குர்‍ஆனில் கணவன்மார்கள் அவர்களது மனைவிகளை அடிக்க அனுமதிக்கிறார்Muhammad in his Quran permits husbands to beat their wives


சூரா 4:34 (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;.

எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;.

(அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.


உஹுத் போரின் (மார்ச் மாதம் 625) சரித்திர பூர்வமான சூழலில், இஸ்லாம் 70 புனிதப் போர்வீரர்களை இழந்திருந்த தருவாயில் எழுதப்பட்ட பல வசனங்கள் அடங்கிய தொகுப்பில், இந்த வசனமும் அடங்கும்.

இவை குடும்ப‌ங்க‌ள் குறித்த‌, அதாவ‌து சொத்துக‌ளைப் பங்கிடுவ‌து ம‌ற்றும் அனாதைக‌ளின் ஆஸ்திக‌ளை நிர்வ‌கிப்ப‌து போன்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை விவ‌ரிக்கின்ற‌து(வசனங்கள் 1-35).

வெளிப்படையாகச் சொல்லப் போனால், குர்‍ஆன் சூரா4:34, கணவன்மார்கள் தங்களின் கீழ்ப்படியாத மனைவிகள் அத்துமீறினார்கள் என்று கருதினால் அவர்களை அடிக்கலாம் (அவர்கள் உண்மையிலேயே அத்துமீறினார்களா என்பது வேறு விஷயம்) என்று தெரிவிக்கிறது.

இது மனைவிகளின் நடத்தை பற்றிய கணிப்பு கணவர்களின் தீர்ப்பையே சார்ந்து இருப்பதாகவே அமைகிறது. எனவே இது மனைவிகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு (துஷ்பிரயோகத்திற்கு) வழிவகுப்பதாக உள்ளது.

இந்த வசனம் ஒரு மிகப்பெரிய பண்பாடு மற்றும் சமுதாயப் பின்னடைவினை உள்ளடக்கப்படுவதாய் உள்ளதால் சரியான நேர்மையான‌ சிந்தனையுள்ள மக்கள் எல்லாரும் இதனை நிராகரிக்க வேண்டும்.

முஹம்மதுவின் காலத்தில் இருந்த திருமணச் சட்டத்தினால் உண்டான குழப்பத்தினால், முஸ்லீம் பெண்கள், வீட்டில் நடக்கும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்று ஹதீஸ் கூறுகின்றது.

வினோதமான மறுமணச்சட்டமும் திருமணம் குறித்த குழப்பங்களும் நிறைந்த சந்தர்ப்பத்தில், ஆரம்பகால முஸ்லீம் சமுதாயத்தில் இருந்த மனைவிகள் குறித்த‌ இந்த நிகழ்ச்சி பற்றி புகாரி தெரிவிக்கிறார்.


ரிஃபா என்பவர் தன் மனைவியை விவாக ரத்து செய்தவுடன், அப்தூர்ரஹ்மான் பின் அஜ்ஜுபைர் அல்குராஜி அவளை மறுமணம் செய்தார். அந்தப் பெண் ஒரு பச்சை நிற முக்காட்டினைப் போட்டுக்கொண்டு ஆயிஷாவிடம் வந்து தன் உடம்பில் உள்ள அடித்ததினாலுண்டான ஒரு பச்சை நிற தடிப்பைக் காண்பித்து அவளது கணவனைப்பற்றி புகார் கூறியதாக ஆயிஷா தெரிவித்தார்.

பெண்கள் ஒருவரை ஒருவர் தாங்கி உதவுவது வழக்கம். எனவே இறைத்தூதர் வந்தபோது ஆயிஷா, " ந‌ம்பிகையாளராகிய இந்தப் பெண்போல ஒருவரும் துன்பப்பட்டிருக்க முடியாது. அவளது சருமம் அவளின் ஆடைகளைவிடப் பச்சையாக உள்ளது பாருங்கள்" எனக் கூறினார். (புகாரி)

Rifa'a divorced his wife whereupon 'AbdurRahman bin Az-Zubair Al-Qurazi married her. 'Aisha said that the lady (came), wearing a green veil (and complained to her(Aisha) of her husband and showed her a green spot on her skin caused by beating). It was the habit of ladies to support each other, so when Allah's Apostle came, 'Aisha said, "I have not seen any woman suffering as much as the believing women. Look! Her skin is greener than her clothes!" (Bukhari, emphasis added)


இந்த ஹதீஸ் முஹம்மது அவரின் வலது கரம் போன்றிருந்த தோழர் அபுபக்கரின் மகளும், தன் இள‌வயதுடைய‌ மனைவியுமான‌ ஆயிஷாவை (கீழ்கண்ட rule no.1ஐப் பார்க்கவும்) அடித்ததாகச் சொல்கிறது.

"அவர் எனக்கு (ஆயிஷா) வலி ஏற்படும்வண்ணமாக எனது மார்பில் அடித்தார்." (முஸ்லீம் 2127) 
"He [Muhammad] struck me [Aisha] on the chest which caused me pain." (Muslim 2127)


வலி ஏற்படும் விதமாக அடிப்பது குறித்த இந்தப் பழக்கத்தினைப் பற்றிய முழு ஆய்வு இந்தத் தொடுப்பில் உள்ளது, இதில் இத்தலைப்புப் பற்றி புதிய விவாதங்கள் உள்ளன(இறுதிவரை செல்லவும்). 

இந்த தொடுப்பில் உள்ள கட்டுரை நீண்டதாக இருப்பினும், இந்த ஹதீஸையும் ஆரம்பகால ஆவணங்களையும் ஆராய்ந்து மனைவியை அடிப்பது குறித்த தெளிவான விவரங்களை, அதனை எதிர்க்கும் இன்றைய‌ இஸ்லாமிய ஆய்வளர்களின் கருத்துடன் அறியத் தருகிறது.

இந்த தொடுப்பில் உள்ள கட்டுரை இது குறித்த இஸ்லாமியரின் மறுப்பிற்கு பதிலளிக்கிறது. இத்தொடுப்பில் உள்ள கட்டுரை இந்த விஷயத்தை நன்கு ஆராய்ந்து குர்‍ஆன் சூரா4:34 ன் பல்வேறு மொழி பெயர்ப்புகளுடன் பதில் தருகிறது.

அது இந்த ஹதீஸையும் முந்திய விளக்கங்களையும் குறிப்பிட்டு, சிறப்புமிக்க இஸ்லாமிய உரைகளை மேற்கோள் காட்டி, இன்றைய சமாளிப்புகளுக்கு மறுப்பளிக்கின்றது.

இறுதியாக‌, ஒரு அரபி கிறிஸ்தவரால் எழுதப்பட்ட‌ இத்தொடுப்பில் உள்ள கட்டுரை குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், இஸ்லாமிய வல்லுனர்களின் கருத்துக்களையும் முற்றிலுமாக ஆய்வு செய்து, குர்‍ஆன் சூரா4:34ன் பல மொழிபெயர்ப்புகளை நமக்குத் தருகிறது.

இவ்விதமாக வீட்டில் நடக்கும் வன்முறைகள் ஆரம்பகால இஸ்லாமின் இதயத்திலும், குர்‍ஆனிலும், முஹம்மதுவின் வாழ்க்கையிலும் அமர்ந்துள்ளது என்பது விளங்குகின்ற‌து. எனவே இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கமன்று.


7. முஹம்மது தன் குர்‍ஆனில் ஆண் அல்லது பெண் திருடர்களின் கைகள் வெட்டப்பட வேண்டும் எனக் கட்டளை இடுகிறார்Muhammad in his Quran commands that the hands of male or female thieves should be cut off


சூரா5:38 திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.

சூரா5:39 எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.


ஹதீஸ்களின் மூன்று பத்திகள் முஹம்மதுவின் கொள்கைகளையும் அதன் சூழலையும் விவரிக்கின்றன. புகாரியிலிருந்தும் முஸ்லிமிலிருந்தும் சில பத்திகளை தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.


இறைத் தூதர் சொல்லியதாக ஆயிஷா (முஹம்மதுவின் பிரியமான மனைவி) தெரிவித்தார்: "கால் தினாருக்கும் அதற்கு மேற்பட்டவைகளுக்கு மட்டுமே ஒரு திருடனின் கை வெட்டப்பட வேண்டும்" (Bukhari Volume 8, Book 81, Number 782: இந்த தொடுப்பில் இதற்கு கீழுள்ள இரண்டு ஹதீஸ்களையும் படிக்கவும்,).


ஒரு தினார் என்ப‌து ரோம‌ரின் "தினாரியஸ்" என்பதிலிருந்து வரப்பெற்றது; இது ஒரு சிறிய தொகை அல்ல, அதே நேரத்தில் ஒரு பெரிய தொகையும் அல்ல. ஆயினும் கால் தினார் என்பது முஹம்மதுவின் பார்வையில் ஒரு கையை இழக்கத்தக்க அளவு மதிப்புள்ளது.


இறைத்தூதர், மூன்று திர்ஹம் மதிப்புள்ள ஒரு கேடகத்திற்காக ஒரு கள்வனின் கையை வெட்டச் செய்தார் என இபின் உமர் தெரிவித்தார். (Volume 8, Book 81, Number 788புகாரியில் இதற்குக் கீழுள்ள மூன்று ஹதீஸ்களைப் பார்க்கவும்)


ஒரு கேடகம் சற்று விலையேறப்பெற்றது தான். முஹம்மதுவின் சேனையில் உள்ள ஏழையான ஒருவர் அதனை வாங்க இயலாது தான். ஆனாலும் ஒரு கேடகம் ஒரு கைக்கு இணையாகுமா?(http://debate.domini.org/newton/allah.html)


"ஒரு திருடன் ஒரு முட்டையைத் திருடி அவன் கை வெட்டப்பட்டும், ஒரு கயிற்றைத் திருடி, அதினால் அவன் கை வெட்டப்பட்டும் இருந்தால் அவன் கடவுளால் சபிக்கப் பட்டவன்" என இறைத்தூதர் சொன்னார் என்று அபூ ஹுரைரா தெரிவித்தார். (Volume 8, Book 81, Number 774, இதற்கு இணையான ஹதீஸ் இங்கு உள்ளது)


சில‌ உரையாளர்கள் ஒரு முட்டை என்ப‌து ஒரு த‌லைக்க‌வ‌ச‌ம் என்ப‌தாக‌வும், ஒரு க‌யிறு என்ப‌து க‌ப்ப‌லின் க‌யிறு என்ப‌தாக‌வும் கூறி, இவைகள் விலையேற‌ப்பெற்ற‌து என‌ச் சொல்கிறார்க‌ள்.

எனினும் மேலே க‌ண்ட‌ மொழிபெய‌ர்ப்பு பொதுவாக‌ ஏற்க‌ப்ப‌ட்டு சிறிய‌ திருட்டுக‌ளுக்கும் இத்த‌கைய‌ க‌டும் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌லாம் எனப் பொருள் கொள்ள‌ப்ப‌டுகிற‌து. ஆனால் அதிக‌ ம‌திப்புடைய‌ பொருட்க‌ள் என‌க் க‌ருத‌ப்ப‌ட்டாலும், அவைகள் கரங்களுக்கு சமமாக ஆகாது.

இந்தக் கொடிய வழக்கத்தினையும் அதனுடைய சரித்திரப் பின்னனியையும் பற்றிய கூடுதல் தகவலுக்கு இந்தத் தொடுப்பிற்குச் செல்லவும். இது இந்த வழக்கத்தினை ஆதரிக்கும் இஸ்லாமிய ஆதரவாளர்களுக்கு பதில் சொல்லி முஹம்மதுவினின்று இயேசுவை வேறுபடுத்திக் காட்டும்.

இயேசு இப்படிப்பட்ட தண்டனையை ஒருபோதும் ஆதரித்ததில்லை, இந்த விவரங்களே இப்போதைக்கு போதுமானது.

அப்போஸ்தலனாகிய பவுல், " திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன் ." என‌ எபேசிய‌ர் 4:28ல் கூறி அவ‌னுடைய‌ கை வெட்ட‌ப்ப‌டுத‌ல் கூடாது எனச் சொல்கிறார்.

இதன் மூலம் முஹம்மதுவை விட பவுல் மேலானவர் என்பதை வெளிப்படுத்துகிறார் (So Paul excels Muhammad).

இவ்வண்ணம், கடுமையான தண்டனையின் மூலமான வன்முறை இஸ்லாமின் இதயத்தில், அதாவது முஹம்மதுவின் வாழ்விலும் குர்‍ஆனிலும் வீற்றிருப்பதனால் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமன்று எனபது திண்ணம்.


6. முஹம்மது ஆண் கவிஞர்களையும் பெண் கவிஞர்களையும் கொலை செய்கிறார் Muhammad assassinates poets and poetesses


கீழ்கண்ட இரு கவிஞர்களையும் ஆரம்பகால‌ இஸ்லாமில் இருந்த மற்றவர்களின் சார்பாக உதாரணமாக‌ எடுத்துக்கொள்ளலாம்.


மார்ச் மாதம் கி.பி. 624: அக்பா பின் அபூமுயத்(Uqba bin Abu Muayt)

அக்பா மக்காவில் முஹம்மதுவை மதிப்புக் குறைவாக விமர்சித்து எழுதி கேலி செய்தார். அவ‌ர் பத்ரூ போரில் பிடிக்க‌ப்ப‌ட்ட‌போது முஹம்மது அவருக்கு ம‌ர‌ண‌ த‌ண்டனையை வழங்கினார்.

அப்போது அக்பா மிகுந்த ம‌ன‌ச்ச‌ஞ்ஞ‌ல‌த்துட‌ன் "முஹம்மதுவே! என் பிள்ளைக‌ளை யார் காப்பாற்றுவார்க‌ள்?" எனக் கதறினார். உனக்கு "நரகம்" தான் என்று நபி அமைதியாக கூறினார். அதன் பின்பு இறைத்தூதரின் அடியார்க‌ளுள் ஒருவ‌னின் வாள் அக்பாவின் கழுத்தை வெட்டியது.

மார்ச் மாதம் கி.பி. 624: அஸ்மா பின்ட் மர்வன் (Asma bint Marwan)
அஸ்மா (Asma) என்பவள் மதீனாவில் உள்ள ஒரு பழங்குடி மதக் கூட்டத்தினைச் சேர்ந்த பெண் கவிஞர் ஆவார்.

யாஜித் பி. ஜையத் என்பவன் அவளது கணவனாவார். அவள் மதீனாவின் தன் பழங்குடி மக்களை, அவர்கள் ஒரு புதியவரான முஹம்மதுவுக்கு அடிபணிந்து, அவர்மீது எதிபாராத தாக்குதல் நடத்தாமலிருந்ததாகக் குறை சொல்லி ஒரு பாடல் இயற்றினாள்.

அவள் சொன்னதைக் கேள்விப்பட்ட இறைத்தூதர், "எனக்காக அந்த மார்வானின் மகளை அழிப்பவர் யார்?" என்றார். அவளது கணவனின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன், முன்வந்து, அன்றிரவு அவளின் வீட்டிற்குள் பதுங்கிச் சென்றான்.

அவளுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தன; அவர்களில் கடைக்குட்டி அவளின் மார்பில் உறங்கிக்கொண்டிருந்தான். தாக்குதலுக்குச் சென்றவன் அந்தக் குழந்தையை மெதுவாக அவளின் மார்பிலிருந்து விலக்கிவிட்டு, அவனது வாளை உருவி அவள்மீது பாய்ச்சி அவளைத் தூக்கத்திலேயே கொன்றான்.
மறுநாள் காலையில் அந்தக் கொலைகாரன், அவன் மீது பழிவாங்குபவர்கள் யாரேனும் உள்ளனரா எனச் சவாலிட்டான். அவளது கணவன் உள்ளிட்ட ஒருவரும் அந்த சவாலுக்கு மறுமொழி கூறவில்லை. உண்மையில், அவனது கூட்டத்தில் இஸ்லாம் வலுப்பெற்றிருந்தது.

முன்பு இரகசியத்தில் மாறினவர்கள் கூட பகிரங்கமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டனர் என்று அறிவித்தனர். இந்தத் தாக்குதலை விவரிக்கும் ஆரம்பகால‌ இஸ்லாமியத் தகவல் ஆதாரம் ஒன்று, "இஸ்லாமின் வலிமையை அவர்கள் கண்டார்கள் – because they saw the power of Islam" என சொல்கிறது.


தாக்குதல்களைப் பற்றி விளக்குகின்ற மேலே கண்ட விவரங்கள் தவிர‌, குர்‍ஆனும், கேலி செய்பவர்களுக்கும் குறைகூறுபவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கப்படுவதை ஆதரிக்கிறது. (சூராக்கள் 3:186; 33:57; 33:59-61; மற்றும் 9:61-63).

குர்‍ஆனில் இல்லாத இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பற்றிய குறிப்புகளை முஸ்லீம்கள் மறுத்தாலும், பின்வரும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

1) இணக்கமான இஸ்லாமியச் சூழ்நிலையில்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum