கான்கிரீட்டை மிச்சப்படுத்த 10 வழிகள்!
Thu Jul 02, 2015 3:10 am
கான்கிரீட்டை மிச்சப்படுத்த 10 வழிகள்!
----------------------------------------------------------------------
1. கான்கிரீட் தளங்களை அமைக்கும்போது உபயோகிக்கும் வைப்ரேட்டர் நீடில்களை அடிக்கடி மாற்ற வேண்டியது இருக்கும் எனவே, அவற்றை கூடுதலாக ஸ்டாக் வைத்துக்கொண்டால் வேலை நிற்காது. கான்கிரீட் ஸ்லாபுகளை அமைக்கும் போது புதிய நீடில்களை மாற்றுவதற்கான நேரம் மிகக் குறைவாகவே இருக்கும் இந்த நேரத்தில் நீடில்கள் ஸ்டாக் இருந்தால் வேலை நிற்காது. 25 மி.மி. முதல் 60 மி.மி. வரையிலான அளவுகளில் இந்த நீடில்கள் உள்ளதால் பொதுவாக 40 மி.மி அளவுள்ள நீடிலை பொருத்தும் வைப்ரேட்டரை தேர்வு செய்தல் நலம்.
2. கான்கிரீட்டை காம்பேக்ட் செய்யும்போது, வைப்ரேட்டர் நீடிலை செங்குத்தாக வைக்க வேண்டும். நீடிலால் கான்கிரீட் கலவையை தள்ளுதல் கூடாது. வைப்ரேட்டர் நீடிலை கான்கிரீட்டில் குறுக்காக பயன்படுத்தக் கூடாது. கான்கிரீட்டை நன்றாக காம்பாக்ட் செய்வதற்கு நீடிலை முடிந்த வரை செங்குத்தாக வைப்பதே சிறந்தது. நீடிலை கான்கிரீட்டில் முழு வதும் செலுத்தியபின் வைப்ரேட்டரை இயக்கவும். கான்கிரீட் காம்பாக்ட் ஆகிவிட்டால் அதன் மேற்பரப்பில் சில விநாடிகளில் குமிழிகள் வருவது நின்றுவிடும். அதன் பிறகு நீடிலை மற்றொரு பாயிண்டில் வைத்து இதே போல் இயக்க வேண்டும்.
3. கான்கிரீட் கலவை கெட்டியாக இருந்தால் காம்பாக்ட் ஆவதற்கு சற்று கூடுதல் நேரம் எடுக்கும். ரீ-இன்போர்ஸ்மெண்ட் ஸ்டீல் போன்றவற்றை வைப்ரேட்டிங் நீடிலால் தொடக்கூடாது. அது நீடிலை சேதப்படுத்திவி டும். கான்கிரீட் கலவையை அதிகமாக வைப்ரேட் செய்யக் கூடாது. இது கான்கிரீட்டின் நீர்ப்புத் தன்மையை அதிகமாக்கி கான்கிரீட்டை ஒழுக வைத்து விடும்.
4. கான்கிரீட் தளத்தை போட்ட பிறகு, தளத்தை ஈரப்படுத்துவது மிக முக்கியமான வேலையாகும். இது கான்கிரீட்டின் பலத்தை குறைந்த செலவில் அதிகப்படுத்தும். விரிசல்கள் தோன்றாமலும் தடுக்கும்.
5. தளத்தை ஃபினிஷிங் செய்யும் போது ஓரத்தில் இருந்து ஃபினிஷ் செய்ய ஆரம்பிக்க வேண்டும். மட்டப்பலகையை வைத்து சமன் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் எக்ஸ்ட்ரா சிமெண்டை சேர்க்கக் கூடாது. தளத்தின் மேல் பரப்பு வழவழப்பாக இருக்கக் கூடாது. இதனால் மயிரிழை விரிசல்கள் விழ நேரும். ஒரு துடப்பத்தினால் தேய்த்து விட்டோமானால் பரப்பு சீராகிவிடும். வேலை முடிந்த பின் பிளாஸ்டிக் ஷீட்டினால் மூடிடவும்.
6. பீம்கள், காலம்கள் போன்றவற்றை 16 முதல் 48 மணி நேரத்திற்கு க்ஷஷட்டர் போட்டு வைத்திருக்க வேண்டும். கான்கிரீட் காயாமல் இருக்கும் பட்சத்தில், ஷட்டரிங் எடுக்கும் போது சேதமாகாமல் எடுக்க வேண்டும். ஷட்டரிங்கை எடுக்கும் போது அதனுடன் கான்கிரீட் ஒட்டிக்கொண்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய ஷக்ஷட்டர்களை மழைக்காலத்தில் அதிக நேரமும் கோடையில் குறைவான நேரத்திலும் எடுக்கலாம்.
7. மரச்சட்டங்களை எடுக்கும் போது தளத்தின் மூலைகளும், முனைகளும் சேதமாகாமல் எடுக்க வேண்டும். ஸ்கப்ஹோல்டிங் பைப்களை அகற்றும் போது தளத்தின் நடுவில் இருந்து துவக்க வேண்டும். பின்னர்தான் ஓரங்களுக்குச் செல்ல வேண்டும்.
8. கான்கிரீட்களை இடும் போது, சிலாப் மற்றும் பீம்கள் போன்றவற்றில் கட்டுமான ஒட்டுதல்களை தவிர்த்தல் நலம். வெளிச்சமின்மை, மின்தடை, மழை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் அவ்வாறு செய்ய நேர்ந்தால் இத்தகைய ஒட்டுதல்கள் நடுப்பகுதியில் அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
9, பால்கனிகள் போன்று வெளியே நீண்டிருக்கும் கட்டுமானங்கள் இடிந்து விழுவதை நாம் கண்டிருக்கிறோம். இதற்கு காரணம் அதன் மோசமான வடிவமைப்புதான். அதில் முறையாக பயன்படுத்தப்படாத ஸ்டீல், அதன் பலத்தைக் குறைக்கும். பால்கனி சிலாபுகளின் தடிமன் ஒரே அளவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கட்டுமானத்தோடு இணைக்கும் பகுதி அதிக தடிமனாகவும், அதன் முனை சற்றே குறைந்த தடிமனுடன் இருந்தால் நல்லது. இத்தகைய மாடங்களை அமைக்கும் போது கொத்தனாரின் ஆலோசனையை விட பொறியாளரின் ஆலோசனைப்படி நடப்பதே சிறந்தது.
10. மாடங்களின் அளவினைப் பொறுத்து அதன் தடிமன் மாற வேண்டும். அதன் தடிமனைப் பொறுத்து அதில் பயன்படுத்தப்படும் ஸ்டீலின் கனம் இருக்க வேண்டும். உதாரணமாக 3 அடி அகலமுள்ள மாடத்திற்கு 1:2:4 விகிதத்தில் கலவையிடப்பட வேண்டும். அதன் தடிமன் 90 மி.மி. அளவில் இருக்க வேண்டும். 10 மி.மி. தடிமன் கம்பிகள் 4.5 அங்குல இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும். இதே 5 அடிமாடமாயின் தடிமன் 130 மி.மி. அளவிலும், 10 அடி மாடத்திற்கு 300 மி.மி. தடிமனும் வேண்டும். 5 அடி மாடத்திற்கு 12 மி.மி. தடிமன் கம்பிகளை 7 அங்குல இடைவெளியில் வைத்து கட்டப்பட வேண்டும்.
In English : Jagveer Goyal
In Tamil : Subramanyam. P
- From Builders line Monthly.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum