இந்தியப் பிரதமர் மாண்பு மிகு. நரேந்திர மோடி அவர்களுக்கு,
Mon Jun 22, 2015 7:10 am
பெங்களூரிலிருந்து பால் பிரபாகர் எழுதும் கடிதம். புதுடெல்லியில் ராஜவீதியில் 35,000 பேர்களுடன் கின்னஸ் சாதனைக்காக நீங்கள் கடுமையாக யோகாசனம் செய்து பல டிவி சேனல்களில் விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். யோகா செய்தால் மன ஆரோக்கியம் வரும், ஆத்மபலன் வரும் ஜனங்கள் ஆரோக்கியம் அடைவார்கள் என்றும் உங்களுடைய தலைமையில் உள்ள அரசு பலகோடியில் விளம்பரம் செய்கிறது.இன்னும் மிச்சமிருக்கும் உங்களுடைய நான்கு வருட ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் சாககம் பண்ணப்போகிறீர்கள் என்பதைக்காண ஆவலாக உள்ளேன். வாழ்த்துக்கள் பல..
சாராயம் மற்றும் பல மதுபானங்களாலும், பான் மசாலா, சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருள்களை உபயோகிப்பதாலும் இந்தியாவில் உள்ள 80 கோடிக்கும் அதிகமானவர்கள் பல வித உடல் உபாதைகள், கேன்சர் வியாதிகள் மற்றும் பல வியாதிகளால் செத்துக்கொண்டிருப்பதையும், பல இளம் பெண்கள் விதவைகளாகி நிற்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
யோகாவை பிரபலப்படுத்த புது டெல்லியில் தரையில் விழுந்து விழுந்து உருண்டு புரண்டு சுருண்டு துடித்து எழுந்து மறுபடியும் விழுந்து உருண்டு புரண்டு சுருண்டு துடித்து எழுந்து மக்களுக்காக பயங்கரமாக யோகா செய்து பாடுபடும் பிரதமராகிய நீங்கள் இந்தியா முழுவதிலும் புகையிலைப் பயன்பாட்டை தடை செய்து, மதுவிலக்கையும் கட்டாயமாகக் கொண்டுவர முயற்சி செய்வீர்களா ?
பான் மசாலா, சிகரெட், பீடி உற்பத்தி செய்யும் பெரும்முதலாளிகளிடம் இருந்து அரசியல் கட்சிகள் தேர்தல் நிதியாக பணம் வாங்கியிருந்தால் அது ஏழைகளின் சாபமாக இருக்கும். அதனால் இனி மக்களின் ஆரோக்கியத்தை கெடுத்து சம்பாதிக்கும் கம்பெனிகளிடம் இருந்து தேர்தல் நிதியாக உங்கள் கட்சி எந்த நன்கொடையையும் வாங்காது என்று உறுதியளிக்கமுடியமா ?
இந்தியா முழுவதிலும் புகையிலைப் பயன்பாட்டை தடை செய்து, மதுவிலக்கையும் கட்டாயமாகக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள் உங்களை நான் மனதார பாரட்டுவேன். இந்தியர்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுங்கள்.
மீதி அடுத்த கடிதத்தில்..
அன்புடன் பால் பிரபாகர் - பெங்களூர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum