கார்ப்பரேட் நிறுவனத்தின் பங்காளி நரேந்திர மோடி
Wed May 06, 2015 9:24 pm
துவார் பொன் சுப்பையா added 6 new photos.
கார்ப்பரேட் நிறுவனத்தின் பங்காளி நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இயங்கும் இந்திய அரசாங்கத்தின் மோசடி வேலையை பாருங்கள் .......!!!!!
படிக்கவே பகீர்னு இருக்கு. பிரதமர் என்கிற போர்வையில் ஒரு கார்பொரேட் சீஇஒ.
--------------------------------
மோடி அரசின் `சாதனை. ரூ.8500 மருந்து ரூ.1 லட்சம் ஆனது
========================================================
தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை’ பிரதமர் மோடி, அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக அந்நாட்டின் மருந்துக் கம்பெனிகளை மகிழ்விக்கும் விதமாக நீக்கினார். இதைத்தொடர்ந்து உயிர் காக்கும் மருந்துகளின் விலை மிகக் கடுமையாக, 14 மடங்கு உயர்ந்துள்ளது. புற்றுநோய் மருந்தின் விலை 8500ரூபாயிலிருந்து 1,10,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும் என சுகாதாரத்துறையில் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய்க்கான மருந்தான கில்வெக்’ மாத்திரையின் விலை ரூ.8500லிருந்து 1 லட்சத்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது
உலகில் எந்த நாட்டிலும் மருந்தின் விலை 14 மடங்காக உயர்ந்ததில்லை.
ரத்தக் கொதிப்பிற்கான பிளேவிக்ஸ்’ மாத்திரை 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
வெறி நாய்க்கடிக்கான ஊசியின் விலை 2,670 ரூபாயிலிருந்து 7000ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த 108 மருந்துகளின் விலைக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இந்திய நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய மற்றும் கவலைக்குரிய விசயம் என்னவெனில், அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 4.1 கோடி பேர் நீரிழிவு (சர்க்கரை) நோயினால் அவதியுறுகின்றனர்.
4 கோடியே 7 லட்சம் பேர் இதய நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
22 லட்சம் பேர் காச நோயினால் துயருகின்றனர்.
11 லட்சம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
25 லட்சத்திற்கும் மேலான ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.
இந்நிலையில் மருந்துகளின் விலையேற்றம் மக்களை கடுமையாக பாதிக்கும்.
ஏழை மக்களும் நடுத்தர மக்களும் நோய் வந்தால் உயிர் வாழ உரிமையே இல்லையா? உயிர் வாழும் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது பாஜக அரசின் செயல் என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள்.
இன்னொரு பக்கம்
மருந்து விலைகளின் கட்டுப்பாட்டை நீக்கியதைத் தொடர்ந்து சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் லாப விகிதம் 0.7 விழுக்காடு கூடியுள்ளது.
டோரண்ட் மற்றும் லுர்ப்பின் மருந்து கம்பெனிகளின் லாபங்கள் முறையே 1.5 விழுக்காடும் 0.7 விழுக்காடும் அதி கரித்துள்ளது.
அரசின் இந்த முடிவை தொடர்ந்து சன் பார்மா மற்றும் ரான்பாக்ஸி மருந்துக் கம்பெனிகளின் பங்குகளின் விலையும் 2 விழுக்காடு வரை கூடியுள்ளது.
ஜிஎஸ்கே பார்மா மற்றும் டேவிஸ் லேப் கம்பெனிகளின் பங்குகளின் விலை 1 விழுக்காடும் கிளென்மார்க் கம்பெனி யின் பங்கின் விலையும் கூடியுள்ளது.,மருந்துவிலை அதிகரிப்பை எதிர்த்து அரசியல் வேறுபாடின்றி அனைத்துத்தரப்பு மக்களும் குரலெழுப்ப வேண்டும்,
உங்களின் எதிர்ப்பை காட்ட இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யவும்.
Re: கார்ப்பரேட் நிறுவனத்தின் பங்காளி நரேந்திர மோடி
Wed May 06, 2015 9:28 pm
உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒருபங்கினர்
இந்தியாவில் வாழ்கின்றனர்........
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே 30 சதவீதம் மக்கள்...
46சதவீத குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றனர்.......
குடிநீர் இல்லாமல் இந்தியாவின் 37 சதவீதம் பேர் துன்புறுகின்றனர்......
கொள்ளை நோய்கள் சுகாதாரமற்ற குடிநீர் மூலம் மரணிப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.......
இந்திய அதிகார ஆளும் வர்க்கமோ இதையெல்லாம் கவனிக்க கேட்பாரற்று உலகநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறது....
- வசந்தன் ரகுநந்தன்
இந்தியாவில் வாழ்கின்றனர்........
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே 30 சதவீதம் மக்கள்...
46சதவீத குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றனர்.......
குடிநீர் இல்லாமல் இந்தியாவின் 37 சதவீதம் பேர் துன்புறுகின்றனர்......
கொள்ளை நோய்கள் சுகாதாரமற்ற குடிநீர் மூலம் மரணிப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.......
இந்திய அதிகார ஆளும் வர்க்கமோ இதையெல்லாம் கவனிக்க கேட்பாரற்று உலகநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறது....
- வசந்தன் ரகுநந்தன்
நன்றி: தமிழன் என்கிற திமிறு எனக்கும் உண்டு - முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum