IPAD அப்ளிகேஷன் புரோகிராம்கள்
Wed Mar 06, 2013 2:34 pm
புதியதாக
ஐபேட் அல்லது ஐபேட் மினி வாங்கியிருக்கிறீர்களா? அதன் பளபளப்பின்
தன்மையில் இன்னும் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயன்படுத்திப்
பார்க்கையில் ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அதன் பயன்பாடு, அந்த ஐபேட் அல்லது மினி ஐபேடில் அவ்வளவு சிறப்பாக,
பல்முனையாக இருப்பதில்லை. அதில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் தான்
அதன் பயனை பல மடங்கு உயர்த்துகின்றன.
எந்த அளவிற்கு அதிக அப்ளிகேஷன் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிந்து
இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு ஐ பேட் அதிகப் பயனுள்ளதாகத் தெரியும். எனவே,
ஐபேட் ஒன்றில், நாம் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய அப்ளிகேஷன்
புரோகிராம்களை இங்கு காணலாம்.
1. ட்ராப் பாக்ஸ் (Dropbox):
க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், ஸ்டோர் செய்திட வசதி தரும் ட்ராப்
பாக்ஸ் நிச்சயம் ஐபேடில் தேவை. இது ஓர் இலவச சேவை. அதிக நண்பர்களை
பரிந்துரைத்து அவர்களும் பதிந்து கொண்டால், நீங்கள் 16 ஜிபி வரையில்
அளவிலான பைல்களைப் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.
இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் வசதி என்றாலும், உங்கள் ஐபேடில்
வைத்துக் கொள்வதில் சிக்கல் எழாது. இதன் பிரபலமான தன்மையினாலேயே, ஆப்பிள்
நிறுவனமும் இதே போல ஒன்றை உருவாக்கியது. ஆனால், மக்கள் அதனை விரும்பவில்லை.
2. பிளிப் போர்ட் (Flipboard):
உங்களுக்கான டிஜிட்டல் பக்கங்களை மிகச் சிறப்பாக உருவாக்க, பிளிப்
போர்ட் உதவுகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நாம் நமக்கென ஓர் இதழை
இதன் உதவியுடன் தயாரித்து வெளியிடலாம். இதனைப் பெற https://itunes.apple.
com/us/app/flipboardyoursocialnews/id358801284?mt=8 என்ற முகவரியில் உள்ள
இணைய தளம் செல்லவும்.
3. பேஸ்புக் (Facebook):
நீங்கள் பேஸ்புக் தளத்தை அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால், நிச்சயம்
இந்த அப்ளிகேஷன் உங்கள் ஐபேடில் இருக்க வேண்டும். இலவசமாகக் கிடைக்கும்
இந்த அப்ளிகேஷன் 2011 ஆம் ஆண்டில் இடையேதான் கிடைக்கத் தொடங்கியது. இதனைப்
பெற இணைய தளத்தில்
https://itunes.apple.com/us/app/facebook/id284882215?mt=8 என்ற
முகவரிக்குச் செல்லவும்.
4. எய்ம் (AIM for IPAD):
பெரிய அளவிலான டச் கீ போர்டுடன், இன்ஸ்டண்ட் மெசேஜ் சாதனமாக ஐ பேட்
இயங்குகிறது. சிறிய அளவிலான செய்திகள், அதற்கான பதில்களை மிக எளிதாக இதில்
மேற்கொள்ளலாம். இருப்பினும் ஐ பேட் சாதனத்திற்கான எய்ம் அப்ளிகேஷன்
பலருக்கு பிடித்துள்ளது.
இதில் உரையாடல்களைக் கையாள்வது மிக எளிது. இதன் மூலம் பேஸ்புக் மற்றும்
கூகுள் டாக் நண்பர்களுடன் உறவாடலாம். டெக்ஸ்ட் மெசேஜ் எடுத்துக் கொள்ளும்
போன்களுக்கு, வை பி மூலம் இணைக்கப்பட்ட ஐ பேட் சாதனம் வழியாக, இந்த
அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம்.
இதுவும் இலவசமே. இதனைப்பெற https://itunes. apple.com/us/app/
aimforipad/id364193698?mt=8 என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினை அணுகவும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum