இந்தியாவின் வெளியுறவுத் துறை புதிய மொபைல் அப்ளிகேஷன்!!!
Mon Sep 16, 2013 7:37 pm
இந்தியாவின் வெளியுறவுத் துறை புதிய மொபைல் அப்ளிகேஷன்!!! மூலம் நீங்கள் பாஸ்போர்ட், விசா போன்றவைகளை மொபைலிலே அறியலாம் .
இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களை பற்றி அறியலாம். உங்கள் பாஸ்போர்ட் அப்ளிகேஷனை பற்றி தெரிந்துகொள்ளலாம். அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்யலாம்.
ஹஜ் சேவைகள் இதில் உள்ளது. ஹஜ் செல்லபவர்கள் தாங்கள் தங்கும் இடம் மற்றும் விமான சேவை பற்றி அறியலாம். இந்திய விசா பற்றிய தகவலை இந்த அப்ளிகேஷனில் அறிந்துகொள்ளலாம்.
Ask your minister என்ற ஆப்ஷன் இதில் உள்ளது. இந்த ஆப்ஷன் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம். இதுவரை ஒரே ஒரு கேள்விதான் கேட்க பட்டுள்ளது அந்த ஒரு கேள்விக்கும் இன்னும் பதில் வரவில்லையாம்.
இதில் உள்ள முக்கியமான அம்சம் இது தான். பார்லிமென்டில் கேட்கபடும் கேள்வி மற்றும் பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் அறியலாம். இந்த மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.mea
மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி எங்கெல்லாம் சுற்றுபயணம் சென்றுள்ளார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதுவரை இந்த அப்ளிகேஷனை 50க்கும் கம்மியானவர்களே டவுன்லோட் செய்துள்ளார்களாம்.
நன்றி: ரசிகன் இயற்கை ரசிகன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum