10 நிமிடங்களில் மணியார்டர் பெற அஞ்சல் துறை புதிய சேவை அறிமுகம்.......
Fri Jan 31, 2014 12:49 pm
10 நிமிடங்களில் மணியார்டர் பணம் பட்டுவாடா செய்யும் மொபைல் மணியார்டர், இன்ஸ்டன்ட் மணியார்டர் ஆகிய சேவைகளை இந்திய அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.
அஞ்சல் நிலையங்களில் மணியார்டர், ஸ்பீடு மணியார்டர் போன்ற சேவைகள் இருந்தாலும் வங்கிகளின் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள், வரைவோலை போன்ற சேவைகளால் மணியார்டர்களுக்கு வரவேற்பு குறைந்தது. இந்தக் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்திடும் விதமாக மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ் (எம்எம்டி), இன்ஸ்டன்ட் மணியார்டர் ஆகிய சேவைகளை இந்திய அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் மணி டிரான்ஸ்பர் சர்வீஸ் திட்டத்தின் மூலம் பணம் மணியார்டர் செய்திட பணம் அனுப்புவர், பெறுபவர் அலைபேசி வைத்திருக்க வேண்டும். பணம் அனுப்புவோர் தபால் நிலையம் சென்று யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது பெயர், அலைபேசி எண், முகவரியை குறிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் தபால் துறை சார்பில் 6 இலக்க ரகசிய குறியீட்டு எண் வழங்கப்படும். அந்த ரகசிய குறியீட்டு எண்ணை பணம் பெறுபவருக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் பணம் அனுப்புபவர் தெரிவிக்க வேண்டும்.
தொடர்ந்து, பணம் பெறுபவர் அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று அலைபேசி எண், ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்து 10 நிமிடங்களில்ல் பணம் பெற்றுக் கொள்ளலாம். இந்தச் சேவையின் மூலம் 1000 முதல் 1500 ரூபாய் வரை பணம் அனுப்ப ரூ.45-ம், 1501 முதல் 5000 ரூபாய் வரை ரூ.79-ம், 5001 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ரூ.112-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தச் சேவையின் மூலம் ஒருவர் ஒருமுறையில் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை பணம் அனுப்பலாம். ஒருவரே தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டன்ட் மணியார்டர்..: இன்ஸ்டன்ட் மணியார்டர் சேவையின் மூலம் வெளியூரில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்பினால் தொகையை கணினியில் பதிவு செய்து 16 இலக்க எண் வழங்கப்படும். அந்த 16 இலக்க எண்ணை பணம் அனுப்புபவர் பணம் பெறுபவருக்கு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, பணம் பெறுபவர் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று 16 இலக்க எண்ணைத் தெரிவித்தால் பணம் பெற்றுக் கொள்ள முடியும். அத்தாட்சிக்காக அரசு அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை காட்ட வேண்டும்.
இதில் ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பலாம். இதற்கு ரூ.10 ஆயிரம் வரை ரூ.100-ம், அதற்குமேல் தொகைகேற்ப கமிஷன் மாறுபடும். இந்தச் சேவைக்கு அலைபேசி வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இந்த இரு புதிய மணியார்டர் சேவைகள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சல் நிலையங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் தலைமை அஞ்சல் அலுவலர் ஆர்.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum