புல்டன் ஜான் சீன் (Fulton John Sheen)
Tue May 05, 2015 6:41 pm
புல்டன் ஜான் சீன் (Fulton John Sheen) 18-ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க தேசத்தில் பிறந்தவர் ஆவார். அவர் அந்த நாட்களில் ரேடியோவிலும், டிவியிலும் இறை செய்தி அளிப்பதில் வல்லவாராக திகழ்ந்தார். ஜான் சீன் ஒருமுறை தென் ஆப்பிரிக்காவில் உள்ள தொழுநோயாளிகள் வசிக்கும் ஊருக்கு சென்றார். அவர்களுக்கு சிறிய பரிசு கொடுத்து உற்சாகப்படுத்தும் படியாக, இரண்டு அங்குலம் நீளம் உள்ள சில்வர் சிலுவையை தன்னுடன் எடுத்து சென்றார். தொழுநோயாளிகள் வசிக்கும் ஊருக்கு அவர் சென்றவுடன் அங்கிருந்த அநேகர் அவரைப்பார்க்கும் படியாக வந்தனர். ஜான்-ம் தான் கொண்டு வந்திருந்த சில்வர் சிலுவைகளை கையில் எடுத்துக் கொண்டார்.
முதலாவது அவரிடம் ஒரு மனிதர் வந்தார். தொழுநோயால் அவர் தனது இடது கையை இழந்திருந்தார். வலது கையும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு புண்களாக இருந்தது. அவருக்கு சிலுவையை பரிசளிக்க விரும்பிய ஜானுக்கு அவருடைய கைகளைப் பார்க்க அருவெறுப்பாக இருந்தது. ஆனால் சிலவர் சிலுவையை கொடுக்க வேண்டும். எப்படியாவது அந்த மனிதருக்கு சிலுவையை கொடுத்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜான், தொழுநோயால் புண்களாக இருந்த அவருடைய வலது கையை நீட்டச் சொன்னார். பின்பு அந்த மனிதனின் கைகளுக்கு சற்று உயரத்தில் அந்த சிலுவையை போட்டார். அந்த சில்வர் சிலுவை அந்த மனிதனின் தொழுநோய்ப் புண்களில் பதியும்படியாக விழுந்தது. தொழுநோயாளிகளுக்கு எவ்வித உணர்வும் வலியும் இருக்காது. ஆதலால் அந்த மனிதன் சிலுவை கிடைத்த சந்தோஷத்தில் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றான்.
தான் தவறு செய்வதாக ஜான் சீன் உணர்த்தப்பட்டார். “அவர் (இயேசு) மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள். அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்” என்ற மத்தேயு 8:1-3-ம் வசனங்களை நினைவு கூர்ந்தார். இயேசுவே தமது கையை நீட்டி அவனைத்தொட்டு சுகமாக்கியுள்ளார். நான் இந்த தொழுநோயாளிகளைத் தொடாமல் சிலுவையை கைகளில் போடுவது தவறு என்று உணர்த்தப்பட்டார். பின்பு அங்கிருந்த ஏறக்குறைய ஐநூறு தொழுநோயாளிகளின் கைகளை பிடித்து அன்புடன் குலுக்கி சிலுவையைக் கொடுத்தார். அவருக்குள் மகிழ்ச்சி பொங்கியது.
நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் அன்பைக் காண்பிக்க வேண்டும். இயேசுவின் அன்பை இருதயம் நொறுங்குண்டவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் யாதுமற்ற ஏழைகளுக்கும் நாம் காண்பிக்க வேண்டும். “நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்” (II தெச3:9) என்று பவுல் சொல்வதைப்போல, நாமும் இயேசு கிறிஸ்துவைப் போல ஏழை மக்களையும் நோயாளிகளையும் அதிகமாக நேசிக்க வேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum