தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மிஷனரி Dr.ஜான் ஸ்கடர் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மிஷனரி Dr.ஜான் ஸ்கடர் Empty மிஷனரி Dr.ஜான் ஸ்கடர்

Tue Aug 20, 2013 6:44 am
மிஷனரி Dr.ஜான் ஸ்கடர் John_Scudder
1793 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜான் ஸ்கடர் என்பவர் பிரீஹோல்ட்டிலுள்ள நியூ ஜெரி என்னும் நகரில் ஜோசப் மரியா என்னும் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பழைய ஏற்பாட்டில் அன்னாள் தனக்குப் பிறந்த மகனைத் தேவனுக்கென்று ஒப்புக்கொடுத்தது போன்றே மரியாவும் தனது மகனைக் குழந்தைப்பிராயத்திலேயே தேவனுக்கென்று ஒப்புக்கொடுத்தார். 1809ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்திற்குள் பிரவேசித்த இவர் 1813ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் சிறந்த பேரோடு பட்டப் படிப்பை நிறைவு செய்தார். சுவிசேஷ ஊழியராகுவதே இவருடைய வாழ்வின் இலட்சியமாக இருந்தது.இவரது தகப்பனார் இவர் மிஷனரியாவதை விரும்பாததன் நிமித்தம் இவர் மருத்துவத்துறைக்குத் திரும்பினார். 1818 இல் பட்டப் படிப்பைமுடித்துவிட்டு நியூயார்க் நகரில் மருத்துவராக செயற்பட்டார்.
தீர்மானம்
இவர் ஒருநாள் நோயாளி ஒருவரை சந்திக்கப்போகின்ற வேளையில் அங்கு மேஜையின்மேல் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கண்டார். அதிலே உலகின் மனமாற்றம் அல்லது 600,000,000 மக்களை மதிக்கும் சபைக்குள்ள திறமையும் கடமையும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பகுதியை வாசிக்கும்போது உலகெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து நோயாளிகளைக் குணமாக்குங்கள்என்ற ஆண்டவரின் கட்டளைக்குப் பிரதியுத்தரமாகத்தான் மிஷனரியாக அழைக்கப்பட்டதை உணர்ந்தார். இத் துண்டுப் பிரதியின் உணர்வுபூர்வமான அறை கூவலால் அசைக்கப்பட்டுமருத்துவ மிஷனரியாகப் போக முடிவெடுத்தார். அந்த காலக் கட்டத்தில்அமெரிக்க மிஷன் சுவிசேஷ ஊழியத்தோடு இணைந்து மருத்துவ ஊழியம் செய்யக்கூடிய ஒருவரைத் தமது இரண்டாவது மிஷனரி அணியோடு இலங்கைக்கு அனுப்புவதற்குத் தேடிக்கொண்டிருந்தது. அக்கால கடற்பிரயாணத்தினாலும், கொடிய நோய்களினாலும் அவர்கள் தங்கள் நாட்டுக்கோ குடும்பங்களிடமோ, திரும்புவோம் என்பதை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. நான் கடைசியாக என் அன்புத் தாயாரைப் பிரிந்து சென்றவேளையில் அவர் என்னை உற்சாகமாக முழுமனதோடு விட்டுக்கொடுத்ததைக் கண்டிருந்தால் நீங்களும் திருப்தியடைந்திருப்பீர்கள்என எழுதினார்.
திருமணம்
இவர் நியூயார்க்கில் சூழ்நிலையைப் புரிந்து நடக்கக்கூடிய மகிழ்ச்சி மிக்க நல்ல குணம் கொண்ட ஹரியட் வோட்டர் பரி என்னும் ஒரு பெண்ணை 1818ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். அவர்களுடைய திருமணப் பந்தம் முழுவதும் ஜானும்-ஹரியட்டும் அன்பின் ஐக்கியத்துடனும் விசுவாசத்துடனும் தங்களை முழுமையாக அர்ப்பணித்த மிஷனரி தம்பதிகளாக வாழ்ந்தனர். அவர் நியூயார்க்கிலிருந்து கடற்பிரயாணமாக கல்கத்தா சென்று வில்லியம் கேரியைச் சந்தித்தார். அவர்களது மகள் கல்கத்தாவில் கடும் வயிற்றுப்போக்கினால் நோய் வாய்ப்பட்டு மூன்று நாட்களுக்குள் மரித்தார். அவர் யாழ்ப்பாணத்தை வந்து சேர்ந்த பின் அமெரிக்காவிலுள்ள தனது நண்பர்களுக்கு எழுதியதாவது, நாங்கள் இந்த அந்நிய தேசத்துக்கு வந்தபிறகு மனம் வருந்துவதாகவும், வராமல் சொந்த நாட்டில் இருந்தால் குறைவாக உபத்திரவப்பட்டிருப்போம் என்றும், சிலவேளை எங்கள் பெற்றோர் நினைக்கலாம். நாங்கள் வந்ததைக் குறித்து வருந்தவில்லை; தகுதியற்ற கருவியாக இருந்த என்னைப் பிரியமான இரட்சகரிடம் ஆத்துமாக்களைக் கொண்டு வரும் கருவியாக மாற்றியதற்கு கடவுளுக்கே மகிமையுண்டாவதாக! என்று எழுதினார்.
ஹரியட் ஸ்கடர் சிறந்த மிஷனரியின் மனைவியென நிரூபித்தார். அவர்களது மூன்றாவது குழந்தை யாழ்ப்பாணத்தில் மரித்த போதிலும் உற்சாகமாகத் தனது கணவருக்கு உதவி செய்பவராக இருந்தார். அவர் இன்னும் பத்துப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அவர்கள் அனைவருமே தங்கள் பெற்றோரின் முன்மாதிரியின்படி மிஷனரி சேவைக்காகத்தங்களை ஒப்புக்கொடுத்தனர். அதில் ஒருவர் அமெரிக்காவில் இறையியல் கல்லூரியில் கல்வி கற்கும்போது நீரில் மூழ்கி இறந்தார்.
வந்து சேர்தல்
பல பிரச்சனைகள் மத்தியிலும் துணிவை இழக்காமல் 1819ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8 ஆம் தேதி அவர் தனது மனைவி ஹரியட்டுடனும்,பிள்ளைகளுடனும் (மரியா, ஏமி) தரையிறங்கினார். அவர் மருத்துவ சேவை செய்த போதிலும், சுவிசேஷம் அறிவிப்பதே அவரது பிரதான கரிசனையாக இருந்தது. கிழக்கிற்குப் போகும் போதெல்லாம் குரு நியமனத்திற்காகத் தன்னை ஆயத்தப்படுத்துவதற்காக அவர் இறையியலைக் கற்றார். 1820 ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு அனுமதியைப் பெற்றார். மெதடிஸ்டு, பாப்டிஸ்ட் மிஷனரிகளாலும் அமெரிக்க சபை சங்கக்குழுவினராலும்நல்லூரிலுள்ள வெஸ்லியன் சிறு ஆலயத்தில் 1821இல் இவர் குரு நியமனம் பெற்றார். யாழ்ப்பாணத்திற்கு வந்தபின் தமிழ் மொழியைக் கற்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தினார். அவரது தமிழ் கற்றுகொள்ளுதலானது அவர் பிரசங்கிப்பதற்குத் தேவையானதைவிட மிகவும் திறமையானதாக இருந்தது என்பதை அவரது மிஷனரிப் பயணங்களின் போது அவர் கொண்டு சென்ற துண்டுப்பிரசுரங்கள் சுட்டிக் காட்டியது. அவர் ஆங்கிலத்துக்கு மேலாகத் தமிழ் மொழி கற்றது மாத்திரமல்ல; யாழ்ப்பாண மக்களையும் அவர்களது மொழியைக் குறித்துப் பெருமைப்படவும் ஊக்குவித்தார்.
ஊழியப்பணி
ஜான் ஸ்கடர் 1836 ஆம் ஆண்டு வரை 17 வருடங்களாக இலங்கையில் பணிபுரிந்தார். அவர் தனது மருத்துவப்பணியைப் பண்டித் தரிப்பில் ஒரு சிறிய கட்டிடத்தில் ஆரம்பித்தார். அது பிற்காலத்தில் ஒரு மருத்துவமனையானது. அங்கே தனது மருத்துவப் பயிற்சிகளுடன் சுவிசேஷப்பணியையும் இணைத்து செயற்படுத்தினார். இம்மருத்துவ சிகிச்சை மூலம் அநேக நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க வாய்ப்புகளுண்டு, அநேக நன்மைகளை செய்யலாம். மருத்துவத் துறையினூடாக இதனை செய்யாமல் வேறு வழியினூடாக செய்ய முடியாது என அவர் தனது வாழ்க்கைக் குறிப்புகளில் எழுதினார். அவர் சுவிசேஷப் பணிக்காக யாழ்ப்பாணம் முழுவதுமாகப் பயணம் செய்தார். அவர் எழுதிய கைப்பிரதிகள் அவரது பிரசங்கத்துக்குத் துணையாக இருந்தன. அவர் சரீர அழுத்தங்களிலிருந்து விடுதலையளிக்கும் மருந்துவகைகளையும், அறுவை சிகிச்சைக்குரிய மருத்துவ உபகரணங்களையும் தன்னுடன் எடுத்துச்சென்றார். இந்த மார்க்கமாகத் தேவன் மனிதனின் ஆன்மீகத் திற்கு வழிகளைத் திறக்கலாம் என அவர் விசுவாசித்தார்.
ஒவ்வொருநாள் அதிகாலையிலும் நான் ஒரு நோயாளியினுடைய தேவைகளைச் சந்திக்கும் முன் அவர்களுடன் சேர்ந்து ஜெபிப்பேன், உரையாடுவேன் என அவர் எழுதினார். யாழ்ப்பாணத்தைச் சுற்றியிருக்கும் தீவுகளுக்கு கடற்பிரயாணமாக மிஷனரிப்பயணமாக செல்லும்போது அவரது மாணவர்கள் இருவர் அல்லது மூவரை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அவர் தீவுகளில் ஒரு சில நாட்கள் என அடிக்கடி தங்கிய சந்தர்ப்பங்களைத் தனது மாணாக்கர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் பயன்படுத்தினார்.
பாடசாலைகள்
ஜான் ஸ்கடர் பண்டித்தரிப்பில் அடிப்படைக் கல்விக்கான ஒரு சில பாடசாலைகளை ஆரம்பித்தார். அமெரிக்க மிஷனரிகளால் பாடசாலைகள் நடத்தப்படும்படியாக அவர்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்களுடைய கல்வி நிகழ்ச்சியில் முன்னிலைப் பள்ளிகளுக்கடுத்ததாக விடுதிப் பாடசாலைகள் அமைந்தது. இத்தோடு அநேக சுதேசிப் பாடசாலைகளையும், சபைகளையும் அவர் ஆரம்பித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் அவரது மனைவி ஹரியட் பண்டித்தரிப்பிலுள்ள ஆண் பெண் இரு பாலரையும் உள்ளடக்கிய சிறிய விடுதிப் பாடசாலைக்குப் பொறுப்பாக இருந்தார். அந்த விடுதியில் ஏறக்குறைய நாற்பது மாணவர்கள் இருந்தனர். பெண்களுடைய கல்விக்கு விரோதமாக மக்களுடைய சிந்தனை அமைந்திருந்ததால் பெண்பிள்ளைகளைப் பாடசாலைக்குச் சேர்ப்பது கடினமாக இருந்தது. யாழ்ப்பாண சமுதாயத்தில் பெண்களின் நிலையை விருத்தி செய்வதற்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்புக்கு பெண்களின் கல்வி ஒரு சாட்சியாக அமைந்தது. திருமதி ஸ்கடர் மதிய நேரங்களில் பெண்களுக்குத் தையல் கற்றுக்கொடுத்தார். காலை நேரங்களில் ஆண்கள் ஆங்கில வாய்ப்பாட்டை ஒப்புவிப்பதைக் கேட்பார். மூன்று வித்தியாசமான வகுப்புகளைத் தினமும் நடத்தினார். யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழின மக்களுக்குப் பெண்களுக்கான பாடசாலை முன்மாதிரியாக இருந்ததுடன் அவர்களது தரத்தை உயர்த்துவதுமாயும் அமைந்தது.
மருத்துவப்பயிற்சி
அவர் இரண்டாவது மருத்துவமனையை 1832ஆம் ஆண்டில் சாவகச்சேரியில் நிறுவினார். முதலாவது மருத்துவமனையைப் பண்டித்தரிப்பில் நிறுவினார். தொடர்ந்தும் சேவைகள் நடைபெற்று வந்தன. யாழ்ப்பாண வாலிபர் களுக்கு மருத்துவக் காரியங்களைச் செயற்படுத்தும் முறையினை அவர் கற்றுக் கொடுத்தார். மக்களுடைய உடல் நலத்துக்கான அவரது போராட்டத்தைத் தனிமையாகச் செலவிடுவது முட்டாள்தனம் என்பதை உணர்ந்தார்.
வேலை
இலங்கையில் 17வருட மிஷனரிப்பணி செய்ததன் பின் அவர் இந்தியாவுக்குச் சென்றார். மருத்துவ சுவிசேஷ ஊழியத்துக்கு உதவியாக மருத்துவ ஊழியம் எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர் நம்பச் செய்தார். ஜான் ஸ்கடர் மருத்துவ மிஷனரிப் பணியின் ஒரு முன்னோடியாக இருந்தார். இலங்கையில் 17 வருட காலமாகச் செய்த ஊழியம் தனித்து விளங்கியதற்குக் காரணம் இவர் மருத்துவத்தையும் சுவிசேஷத்தையும் ஒன்று சேர்த்துச் செயற்பட்டதேயாகும். 1824 இல் ஜான் ஸ்கடர் அவர்களது சரீர சுகம் பாதிப்படைந்ததோடு அதிலிருந்து தொடர்ச்சியாக இவரது சரீர சுகம் நிலையானதாக இருக்கவில்லை. அவரோடிருந்த மற்ற மிஷனரிகள் அவரது குடும்பத்தினரை வெப்ப நிலையான இலங்கையிலிருந்து இந்தியாவின் நீலகிரி மலைப்பிரதேசத்துக்குச் செல்லும்படி சொன்னார்கள். அவரும் அவரது மனைவி ஹரியட் உட்பட எஞ்சியிருந்த ஆறு ஆண்பிள்ளைகளும், 2 பெண்பிள்ளைகளும் இலங்கையை விட்டு 1836இல் ஊழியப்பணிக்காக தென்னிந்தியாவை வந்தடைந்தார்கள்.
இலக்கியம்
தெற்காசியாவில் சமய சம்பந்தமான துண்டுப் பிரதிகளை விநியோகிப்பவர்களில் மிகவும் விடாமுயற்சியுள்ளவரான ஒருவராக ஜான் ஸ்கடர் இருந்தார். இத் துண்டுப்பிரதிகள் அவரது பிரசங்கத்துக்குத் துணையாக இருந்தது. மதுரையை அடைந்ததும் அவரது முதல் அனுபவமே சந்தோஷமான அனுபவமாக இருந்தது. ஏனெனில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இலங்கையில் அவர் கொடுத்த துண்டுப்பிரசுரத்தை வாசித்து இரட்சிப்படைந்த பெண்ணை அங்கு சந்தித்தார். அவர் எழுதியவையாவன: கிழக்கிலிருந்து வரும் கடிதங்கள்’ (பொஸ்டன் 1833), ‘அந்நியர்கள் சார்பில் வாலிபர்களுக்கான முறையீடு’ (1846), ‘பக்தியான இளம் வாலிபருக்கான கடிதங்கள்’ (1846), ‘யோர்தானைக் கடப்பதற்கான சந்திப்புகள்’ (நியூயார்க் 1852) என்பனவாகும். அநேகமான இவரது துண்டுப்பிரதிகளும் பத்திரிக்கைகளும் பின்னர் மிஷனரி ஹரல்ட் என்னும் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது.
மரணம்
அவர் தனது உடல் நலத்துக்காகத் தென் ஆப்பிரிக்காவிலுள்ள குட் கோப் எனும் நகரத்திலுள்ள வயின் பேக் என்னும் இடத்துக்குப் பிரயாணப்பட்டுப் போனார். அவர் ஆப்பிரிக்கா வில் 1855ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவர் மருத்துவ அருட்பணியை மாத்திரமன்றி மிஷனரிகளின் குடும்பத்தினரையே பின் வைத்துப்போனார். அவரது ஆறுமகன்மாரும், இரண்டு மகள்களும் அவரது முன்மாதிரியைப் பின்பற்றினர். ஒருவர் இலங்கையில் பணிசெய்தார். அது மாத்திரமல்ல, தெற்காசியாவில் கிறிஸ்தவ மருத்துவ மிஷனரிப் பணிக்கென குடும்பத்தில் நான்கு தலைமுறைகளில் 42 அங்கத்தவர்களை அர்ப்பணித்த ஸ்கடர், வருடங்களை ஒன்றிணைத்துப் பார்க்கும்போது 1100-க்கும் அதிகமான வருடங்களில் செய்யக்கூடிய கிறிஸ்தவ மருத்துவ ஊழியத்தை செய்திருக்கிறார். இவரது பேத்தியான ஐடா ஸ்கடர் வேலூர் மருத்துவமனையை ஸ்தாபித்தார்.
குடும்பத்தினரின் அர்ப்பணம்
டாக்டர் ஜான் ஸ்கடர் அவர்களின் மூன்று மகன்கள் 1853ஆம் ஆண்டுஆர்கொட் மிஷனை ஸ்தாபித்தனர். டாக்டர் ஐடா சோபியா ஸ்கடர்இந்தியப் பெண்களின் நிலைமைக்காகவும் தொழுநோய், காலரா, பிளேக் ஆகிய நோய் களைக் குறித்தும் எதிர்த்து செயற்பட்டார். இவரது பேத்தி 1918இல் ஆசியாவில் மருத்துவக் கல்லூரி ஒன்றினையும் ஆரம்பித்தார். இது உலகிலேயே மிகவும் பெரிய மருத்துவமனையாகும்.
மீளாய்வு
ஜான் ஸ்கடர் அவர்களது வேலை, தரிசனம், அர்ப்பணம், சுவிசேஷ வெளிக்களப் பணியில், களைப்படையாத பிரயாசம் என்பவற்றை எவரும் அளவிட முடியாது. புத்தூரின் மிகப் பிரபல்யமான கிரீன் ஞாபகார்ந்த மருத்துவமனை இம்மகத்தான மனிதரால் கட்டப்பட்டது. கல்விக்கு, மருத்துவத்திற்கு, பிரசங்கத்திற்கு, துண்டுப்பிரதிகள் எழுதுவதற்கு சபைகளை ஸ்தாபிப்பதற்கு இவையனைத்திற்குமான இவரது பங்களிப்பு, ஊழியம் என்பன மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், அவருக்குப் பின்வந்த மிஷனரிகளுக்கும் உதவியது. ஜான் ஸ்கடர் மற்றவர்களை சேவிப்பதன்மூலம் தன் எஜமானை சேவித்துவந்தார். அவர் வாழ்க்கையும் இதற்கு முன்னுதாரணமாய் இருந்தது. இவர் பின்வைத்துப்போன காரியமானது அடுத்த சந்ததியிலுள்ளவர்களைப் பயிற்றுவிக்கும்படி மற்றவர்களைப் பயிற்றுவித்தலாகும்.

(தொகுத்து வழங்கியவர்: பேராசிரியர்.சோமரத்ன, இலங்கை)


நன்றி: சத்தியவசனம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum