ஆனந்தக் கண்ணீர் - ஒரு விளக்கம்
Mon Mar 16, 2015 6:18 am
ஒரு மனிதனின் உடலில் அவன் ஒழுங்கான உடற்பயிற்சி செய்பவனாக இருந்தால், அவனது இரத்தத்தில் 'என்டோர்பின்'(Endorphin) என்ற நன்மை செய்யும் ஹோர்மோன் அதிகமாகக் காணப் படும்,
அதேபோல நல்ல மனநிலையோடும், மகிழ்ச்சியோடும், நேர்மறையான(positive thinking) எண்ணங்களோடும் வாழுகின்ற, தியானம் போன்ற வழிமுறைகளால் தனது 'உளச் சமநிலையை' பேணுகிற மனிதர்களின் உடலிலும் இது காணப் படும். அதேபோல நாம் அளவுக்கதிகமாகச் சிரிக்கும்போதும், வெற்றி அல்லது எதிர்பாராத விதத்தில் அடையும் அதீத மகிழ்ச்சியில் நாம் 'திக்குமுக்காடிப்' போகும்போதும்(surprise) எமது உடல்நிலையில் சமநிலையை பேணும் முகமாக உடலானது திடீரென்று, கோடிக்கணக்கில் 'என்டோர்பீன்களைச்' சுரக்கிறது. இத்திடீர் மாற்றத்தை எமது உடல் வெளிப்படுத்தும் மொழியே 'ஆனந்தக் கண்ணீராகும்'
இத்தகைய ஆனந்தக் கண்ணீர் எப்போதும் நாம் வெற்றியை அடையும் தருணங்களிலும், இன்ப அதிர்ச்சியின்போதும் மட்டுமே ஏற்படுவதில்லை என்று கூறும் பியர் , ஆனந்தக் கண்ணீர் ஏற்படும் வேறு சில தருணங்களையும் குறிப்பிடுகிறார்,
உதாரணமாக ஒரு விளையாட்டு வீரன் அல்லது வீராங்கனை தனது உடலை மிகவும் கடுமையாக வருத்திப் பயிற்சி செய்யும் தருணங்களிலும், ஒரு ஆணோ/பெண்ணோ பாலுறவில் முழுத் திருப்தியை(satisfaction) அல்லது உச்சக்கட்டத்தை(orgasm) எய்தும்போதும் இத்தகைய ஆனந்தக் கண்ணீர் வருவது இயற்கை என்கிறார்.
மகிழ்ச்சியின் காரணமாக மட்டுமே ஆனந்தக் கண்ணீர் வரும் என்பதில்லை, நகைச்சுவையின் கனம் தாங்காது 'விழுந்து விழுந்து' சிரிப்பவர்களுக்கும், ஏன் கடுங்கோபம் போன்ற உள்ளார்ந்த உணர்ச்சியின்போதும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நன்றி: அந்தி மாலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum