முதலைக் கண்ணீர் - ஒரு விளக்கம்
Mon Mar 16, 2015 6:05 am
மற்றவர்களுக்காக போலியாக கவலைப்படுவதை முதலைக் கண்ணீர் வடிப்பதாக கூறுவர் முதலை உண்மையில் கண்ணீர் வடிக்குமா.
குழந்தை அழுவது போல் ஓசை எழுப்புவது முதலைகளின் அசிங்கமான வழக்கம். அதைக் கேட்டு மனிதர்கள் அருகில் வந்தால் அதற்கு இரையாவார்கள்.
பெரிய புற்களிடையே தன்னை மறைத்துக் கொண்டு முதலை அசைவில்லாமல் இரைக்காக காத்திருக்கும்.
அப்போது அதன் வாய் திறந்திருக்கும். அதனால் அதனுடைய கண்ணீர் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படுவதால் கண்களிலிருந்து நீர் சுரக்கும்.
அது அழுவது போல் இருக்கும். அதற்கு சமமான ஏமாற்றுப் பேர்வழிகளான மனிதர்களைப் போல் இரக்கம், வருத்தம் எதுவும் இல்லாமல் முதலையும் கண்ணீர் வடிக்கும்.

Re: முதலைக் கண்ணீர் - ஒரு விளக்கம்
Mon Mar 16, 2015 6:06 am
முதலை இரையை விரும்பி உண்ணும்போது கண்ணில் இருந்து நீர் வரும். கண்ணீர் என்பது பொதுவாகத் துன்ப வேளையில் வரும் ஒன்றாகக் கருத, முதலையோ மகிழ்வான தருணத்தில் கண்ணீர் வடிக்கிறது. மனத்தில் மகிழ்வாக இருந்து கொண்டு முதலையைப் போல் கண்ணளவில் நீர் வடித்தல் முதலைக் கண்ணீர் எனப்படுகிறது.
Re: முதலைக் கண்ணீர் - ஒரு விளக்கம்
Mon Mar 16, 2015 6:10 am
13 ஆம் நுற்றாண்டில் ' முதலைக் கண்ணீர்' என்ற பதம் பாவனையில் இருந்ததற்கு ஒரு புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறது. பின்னர் 14 ஆம் நுற்றாண்டில் ' Mandeville's Travels' என்ற புத்தகத்தில் முதன் முதலாக தற்போதைய கருத்தை வலியுறுத்தும் வகையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.அதற்குப் பின்னர் வந்த ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளில் போலித்தனமான அழுகைக்கு ' முதலைக் கண்ணீர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கலிபோனியாவில் செய்த ஒரு ஆய்வின்படி முதலைகள் இரையைக் கவ்வ வாயைத் திறக்கும் போது இதன் கண்ணீர் வெளிவருவதை கவனித்துள்ளனர்.
அண்மையில் கலிபோனியாவில் செய்த ஒரு ஆய்வின்படி முதலைகள் இரையைக் கவ்வ வாயைத் திறக்கும் போது இதன் கண்ணீர் வெளிவருவதை கவனித்துள்ளனர்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum