நீலிக் கண்ணீர் - ஒரு விளக்கம்
Mon Mar 16, 2015 5:59 am
பழையனூர் தென்னாற்காடு மாவட்டத்திலுள்ளது. இவ்வூர்கள் இரண்டில் ஏதோவொன்றில் இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வெர்ஷன்கள் உள்ளன.
கதை: 1
ஒன்றின் படி ஒரு வாணிகன் தன் வைப்பாட்டிக்கு மனைவி இடையூறாக இருக்கிறாள் என்பதற்காக அவளைக் காட்டு வழியில் அழைத்துச் சென்று கொன்று விட்டான்; இறந்த பெண் பேயாக அக்காட்டில் அலைந்து கொண்டிருந்தாள்; ஒருமுறை அவன் அக்காட்டின் வழியே செல்லும் போது அவள் மனித வடிவில் ஒரு கைக்குழந்தையுடன் அவனைத் தொடர்ந்து சென்றாள். அருகிலிருந்த ஊரை அடைந்தவுடன் அவ்வூராரிடம் தன் கணவன் தன்னைக் குழந்தையுடன் கைவிட்டு வந்து விட்டதாகவும் தன்னை அவனுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டுகிறாள். ஊரார் அவ்வாறே அவனை வற்புறுத்துகின்றனர். அவள் பேய் என்று வணிகன் மறுத்துக் கூறியும் பயனில்லாத நிலையில் தன்னுயிர்க்கு அவ்வூரிலுள்ள 64 தலைக்கட்டு வேளாளர்களும் தம்முயிரைப் பிணையாக்க வேண்டுமென்கிறான். அவ்வாறே அவர்கள் ஒப்புக் கொள்ள அவன் அப்பேயுடன் ஊர் விடுதியில் தங்குகிறான். பேய் அவனைக் கொன்று போட்டு விட்டுப் போய் விடுகிறது. மறுநாள் காலை அவன் இறந்திருப்பதை அறிந்த 64 தலைக்கட்டுக்காரர்களும் தீயில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கதை: 2
இன்னொரு கதையின்படி நீலி வணிகனின் மனைவியல்ல; அவனது காதற் கணிகை. அவளிடம் அவள் தன் பொருளனைத்தையும் இழந்து வறியவனாகிவிட்ட நிலையில் நீலியின் தாய் அவனைத் துரத்தி விடுகிறாள். வணிகனைப் பிரிய மனமில்லாத நீலியும் அவனைப் பின் தொடர்ந்து காட்டு வழியில் அவனை அடைகிறாள். வழியில் இரவில் தன் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த நீலியைத் தரையில் இறக்கிக் கிடத்துகிறான். எதிர்கால வாழ்வை நோக்கி அஞ்சியவனாக அவள் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று தானும் இறந்து போகிறான். மறு பிறவியில் வாணிகனாக அக்காட்டிலுள் வரும் போதுதான் நீலியின் பேய் அவனைத் தொடர்கிறது என்கிறது இக்கதை.
கதை: 3
காதல் இதழில் அரு. இராமநாதன் எழுதிய கதையில் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாணிகனின் மனைவி நீலி நிறை சூலி. அவள் கிணற்றிலுள் முழுகி இறக்கு முன்பே குழந்தையும் பிறந்து அவளோடு இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. முதல் கதையில் வாணிகனின் மனைவி என்று காட்டிக் கொள்வதற்காகக் கள்ளிச் செடியொன்றின் கொழுந்தைக் கிள்ளிக் குழந்தையாக்கிக் கொண்டது பேய் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தை இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் 64 தலைக்கட்டினர் மாண்ட பின்னர் அவ்வூரினர் பல்வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். அவர்கள் இன்றும் இக்கதையைக் கூறுவதுடன் நீலியை வழிபட்டும் வருகின்றனர். எனவே இக்கதையில் ஏதோ ஓர் உண்மை இருக்கக் கூடும். கொல்லப்பட்டவளாகக் கருதப்பட்ட நீலி உயிர் பிழைத்திருந்து தன் கணவனை அப்பிறவிலேயே பழிவாங்கியிருக்கக் கூடும்.
இவ்வாறு கணவனைப் பெண்கள் கொலை செய்வது நம் இலக்கியங்களில் ஒன்றும் புதிதில்லை. மலையிலிருந்து பிடித்துத் தள்ளிக் கொல்ல இருந்த தன் கணவனைத் தானே முந்தித் தள்ளிக் கொன்றாள் தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் கதைத் தலைவி.[1] இதனால் அவள் “தற்கொல்லியை முற்கொல்லி” என்ற பட்டமும். பெற்றாள்.
எது எப்படியாயினும் ஊர்ப் பெரியவர்களிடம் தன் கதையை கண்ணீர் சிந்தி கூறினாள் நீலி. அவர்களும் அதில் ஏமாந்து வணிகனை அவளிடம் ஒப்படைத்தனர். ஆக இம்மாதிரி பொயாக அழுவதைத்தான் நீலிக் கன்ணீர் என்று சொல்கிறார்கள்
நன்றி: டோண்டு

Re: நீலிக் கண்ணீர் - ஒரு விளக்கம்
Mon Mar 16, 2015 6:00 am
கவிஞர் வைரமுத்து இப்படிச் சொல்கிறார்.
காஞ்சி வணிகன் ஒருவன்
வஞ்சித்துக் கொன்றுவிட்டான்
தன் முதல் மனைவி நீலியை.
ஒருநாள் அவன் பழையனூர்
வழியாகப் பயணம் போகிறான்.
பேயாக மாறிய மனைவி
இப்போது பெண்ணுருவில் வந்து
அவனை வழிமறிக்கிறாள்.
இடுப்பில் மாயப்பிள்ளை
ஒன்று வைத்திருக்கிறாள்.
அவனை அப்பா என்று
அழைக்கவும் வைக்கிறாள்.
திருவாலங்காட்டு வேளாளர் சபைக்கு
வழக்கு வருகிறது.
‘‘என் கணவனோடு
என்னைச் சேர்த்து விடுங்கள்’’
என்று மன்றாடுகிறாள்.
‘‘இல்லை; இவள் என் மனைவி இல்லை;
என்னைக் கொல்ல வந்த பேய்’’
என்று வணிகன் மறுக்கிறான்.
அவள் அழுகிறாள்.
அவள் கண்ணிலிருந்து
திரண்டு வந்த கண்ணீரின் திடம்கண்டு
‘இவள் உன் உண்மையான மனைவிதான்;
அழைத்துப்போ’ என்கிறார்கள்.
‘‘இவளோடு சென்றால் இவள்
என்னைக் கொல்வது உறுதி’’
என்று அஞ்சுகிறான் வணிகன்.
‘‘இன்று ஒருநாள் வாழ்ந்துபார்;
ஒருவேளை அவள் உன்னைக்
கொன்று விட்டால் நாங்கள்
எழுபது பேரும் பொறுப்பு;
நீ மாண்டால் நாங்கள்
தீக்குளித்துச் சாகிறோம்.’’
என்கிறது தீர்ப்பு.
விடிந்து பார்த்தால் அவன்
இறந்து கிடக்கிறான்.
வேளாளர் எழுபது பேரும்
தீப்புகுந்து மாள்கிறார்கள்.
கொலை செய்த கணவனை மட்டுமல்லாமல்
நியாயம் சொன்ன நீதி மான்களையும்
கொன்று முடித்ததே _ அதுதான் நீலிக்கண்ணீர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum