கண்ணீர் - ஒரு விளக்கம்
Mon Mar 16, 2015 6:24 am
பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர் களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?
ஆம், நிச்சயமாக, அழாத குழ ந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி.
மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.
லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படு கிறது.
இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட் டாயப்படுத்தாதீர்கள்.
மேலும் பெண்களின் கண்ணீர் பற்றிய மேலும் சில தகவல்கள்:
ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண் களின் கண்ணீருக்கு உண்டு
ஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண் களின் கண்ணீருக்கு உள்ளதாக இஸ்ரேலிய வீஸ்மான் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று தமது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது.
பெண்களின் கண்ணீரில் அடங்கியுள்ள சில வேதியற் பொருட்களே இதற்கான காரணமென அவர்கள் தெரிவித்துள் ளனர்.
இதேவேளை எலிகள் போன்ற சில உயிரினங்கள் கண்ணீரின் மூலம் இரசாயன ரீதியாக தொடர்பாடலில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக ஆண் எலிகளின் கண்ணீரானது ஒருவகை புரதத்தினை கொண்டுள்ளதாகவும் இதுபெண் எலிகளை புணர்ச்சியில் ஈடுபடுவதற்குத் தூண்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பெண்களின் கண்ணீரின் மணமானது அவர்களை ஆண்களிடத்தில் கவர்ச்சியற்றவர்களாக உணர வைத்ததாகவும், ஆண்களின் இதயத்துடிப்பு வீதம், தோலின் உஷ்ணம், தெஸ்தெஸ்தரோன் சுரப்பு வீதம் ஆகியவற்றைக் குறைத்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக ஆண்களுடைய மூளையின் குறிப்பிட்ட சில பகுதி களான ஹைப்போதலமஸ், பியுசிபோர்ம் ஜயிரஸ் ஆகியவை காம உணர்வின் போது தூண்டப்படுவதாகவும், ஆனால் பெண்களின் கண்ணீரை நுகர்ந்தபோது மூளையின் இப்பகுதி நரம்புகளின் செயற்பாடுகள் குறைவடைந்ததாகவும் அவர்கள்தங்களது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டியுள் ளதாக அவர்கள் மேலும் தெரிவி க்கின்றனர்.
பெண்களின் கண்ணீர் வேஷமா இல்லை ஆயுதமா
கண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வரு கின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறுகிறார்கள். கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என் றால்’ கூப்பாடு போட் டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.
ஆனால் ஒரு சில வீடுகளில் ‘இந்தச் செயலுக்கு இடங்கொடுக்க மாட்டார் கள்.
அழுத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங்காட்டி, ‘இன்னைக்கு ஒருவாட்டி இவன் அழும் போது, அவனது கோரிக்கைக்கு நாம செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’
’அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான்’ என்று ஏசி, அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.
மேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க் கின்ற போது, எமக்குரிய தேவை கள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயு தமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது. பாடசாலை படி க்கும் போது, சக நண்பர்களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூல மாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிணடல் பண்ணுவார்கள்.
சில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கி றார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி ‘என் அத்தானெல்லே, என் மாமாவெல்லே, பக்கத்து வீட்டுப் பரிமளம் புதுசா வந்த ஹன்சிகா சாரி வாங்கிக் கட்டி யிருக்கா’ அதே மாதிரிப் புடவை ஒன்னு எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டுப் பார்ப்பார்கள். இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமனாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்கு வதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரிய வில்லை.
கணவன் கொஞ்சம் மசிந்து கொடுக்கா விட்டால்,
‘நீங்களும் தான் இருக்கியளே, உங்களைக் கலியாணம் கட்டி இத்தனை வருசத்திலை என்ன பிரயோசனம்?
நம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை புருஷன் எப்பூடி அழகான ஹன்சிகா சாரி வாங்கிக் கொடுத்திருக்கான்! நீங்களும் தான் இப்படி இருக்கிறீங்களே? இப்பவே நான் உங்களை விட்டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவா பாருங்க.
அதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். {அனுபவப்பட்ட பெரிய வங்க சொல்லி வேதனைப்பட்ட விடயம்.}
இங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா? அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது,கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா? என்பது புரியாத விடயமாக இருக்கின்றது.
இத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாட சாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால், தம்மால் முடிந்த வ ரை வாய் வீரத்தினைப் பெண் கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். இல்லையேல் இறுதி அஸ்திர மான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த் தைகள் சொன் னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகி விடுவார்கள்.
*பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.
*பெண்களின் கண்ணீரானது ஆண்க ளைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறு கிறார்கள்.
நன்றி: விதை2 விருட்சம்
Re: கண்ணீர் - ஒரு விளக்கம்
Mon Mar 16, 2015 6:34 am
இந்தக் கண்ணீருக்கு என்ன பெயர்கள் சூட்டலாம்?
1. திருச்சி வாலிபர் மலேசியாவில் வெட்டிக் கொலை... கண்ணீருடன் உதவி கோரும் தாயார்!
2. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நாளில் கண்ணீருடன் காலில் விழுந்த கோஹ்லி: சச்சின் நெகிழ்ச்சி
3. 50 வருட அடிமைத் தளையை விடுவித்தபோது கண்ணீர் விட்ட யானை- நெஞ்சை நெகிழ்த்தும் சம்பவம்
4. பதவி விலக மறுப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் கதறியழுத தாய்லாந்து பிரதமர்!
5. மும்பை மைதானத்தை தொட்டு வணங்கி கண்ணீருடன் வெளியேறிய சச்சின்!!
6. எக்ஸ்க்ளூசிவ் இண்டர்வியூ கேட்டு மீடியா டார்ச்சர்.. வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி கதறல்!
7. ரத்த கண்ணீர் வடிக்கும் சிலி பெண்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்
8. கர்நாடக தேர்தலில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கலையே: குமாரசாமி கண்ணீர்
9. தேர்தல் களப்பணியாளர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய ஒபாமா
10. வெங்காய விலை-கண்ணீர்விடும் விவசாயிகள்
11. பிரபாகரன் இல்லாவிட்டால் இனி தமிழர்கள் மீண்டும் அடிமைகள்தான் - அகதிகள் கண்ணீர்
12. 84 வயதில் எனக்கு இது தேவையா? கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை
13. 'இலங்கை': பொதுக் கூட்டத்தில் அழுத வைகோ!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum