வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்வது எப்படி???
Wed Feb 18, 2015 6:50 pm
வெள்ளிப் பொருட்களை பாலீஷ் செய்தால் தரம் குறைந்து விடுமா? வெள்ளிப் பொருட்கள் ஏன் கறுத்துப் போகின்றன? அவற்றை சுத்தம் செய்வது எப்படி?
பொருட்களை பாலீஷ் செய்வதற்கும் தரம் குறைந்து போவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கறுத்து, அழுக்காகத் தோன்றும் நகைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதால் எந்தப் பாதிப்பும் வராது. ஆனால், பல மாதங்களாக சுத்தம் செய்யாமல், அதிக அழுக்கு தேங்கி இருந்தால், அவற்றைக் கடினமான முறைகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். அதனால் சில மில்லிகிராம் அளவுக்குத் தேய்மானம் ஏற்படும்... அளவு குறையும். காற்றில் உள்ள ஆக்ஸைடு காரணமாகவே வெள்ளிப் பொருட்கள் கறுத்துப் போகின்றன.
உடல் வெப்பம் காரணமாகவும் வெள்ளி நகைகள் கறுக்கும். அதற்காக வெள்ளிப் பொருட்களைப் பயன் படுத்தாமலே பூட்டி வைத்தாலும் கறுத்துதான் போகும். இவற்றை வீட்டிலேயே எளிமையான முறையில் பாலீஷ் செய்யலாம். மைல்டான ஷாம்பு வுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து, அந்தக் கலவையில் வெள்ளிப் பொருட்களை நனைத்து பிரஷ்ஷால் சுத்தம் செய்தாலே பளிச் ஆகிவிடும். டிடர்ஜென்ட் பவுடரை பயன் படுத்தக் கூடாது...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum