ஐ.டி.: மன உளைச்சல். அதை எப்படி சரி செய்வது?
Sat Mar 07, 2015 7:27 am
ஐ.டி. துறையில் பணிபுரியும் பலருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்னை மன உளைச்சல். அதை எப்படி சரி செய்வது? காம்கேர் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் கே.புவனேஸ்வரி வழிகாட்டுகிறார்.
* ''அத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தும் இவர்கள் மனம் உற்சாகமாக இல்லை என்பதால்தான் ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன உளைச்சல் உண்டாகிறது. இதை விரட்டும் ஆயுதம் அவர்கள் கைகளில்தான் உள்ளது.
* வேலை பிடிக்கவில்லை, ஸ்ட்ரெஸ், பிழிந்து எடுக்கிறார்கள் என்பதைப் போன்ற வார்த்தைகளுக்குக்கூட உங்கள் மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவை உங்களை அரித்துத் தின்றுவிடும்.
* குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளுங்கள்
* இரவு அலுவலகத்தில் இருந்து வந்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்துவிட்டு, சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டு பாருங்கள். உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆவது உறுதி.
* இரவு எத்தனை மணிக்கு அலுவலகத்தில் இருந்து வந்தாலும், அடுத்த 1 மணி நேரத்துக்குள் தூங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* அதுபோல வீட்டுக்கு வந்ததும் செருப்பை அல்லது ஷூவை வெளியே வைத்துவிட்டு வருவதைப்போல, மற்ற எல்லா நினைவுகளையும் வெளியே விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைய வேண்டும். வீட்டையும் இரண்டாவது அலுவலகமாக மாற்றிக்கொள்ளக் கூடாது.
* இரவு 9 மணிக்கு மேல் வீடு திரும்பினால், மொபைல், லேப்டாப் ஆகியவற்றை தூர வைத்துவிடுங்கள்.
* கூடுமானவரை அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பும்போது குறைந்தபட்சம் சக ஊழியர் யாருடனாவது பேசிக்கொண்டே வீடு திரும்பலாம். அன்றைய தினம் அலுவலகத்தில் நடந்த மனதை நெருடும் விஷயங்களை பகிர்ந்துகொண்டாலே, பாதி ஸ்ட்ரெஸ் குறையும். தயவுசெய்து பர்சனல் விஷயங்களைத் தவிர்க்கவும்.
* ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மது, சிகரெட்டுக்கு இணையாக போதை ஏற்றுபவை. அதில் உட்கார்ந்துவிட்டால் எழுவது என்பது மிகவும் கடினம். எனவே, கூடுமானவரை இரவு 9 மணிக்குப் பிறகு அவற்றில் நாட்டம் கொள்ள வேண்டாம்.
* தினமும் ஏதேனும் ஒரு புத்தகம் படிக்கலாம். அல்லது பிடித்த ஹாபியைச் செய்யலாம். பாடுவது, பாட்டு கேட்பது, எழுதுவது என்று எதையாவது ஒன்றை கட்டாயமாக்கிக்கொள்ளலாம். இதன் காரணமாக மனதில் ஒரு நிறைவு ஏற்படும். நல்ல தூக்கம் வரும்.
* வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பா, கணவன், மனைவி இவர்களில் ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
* கடவுள் பக்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாரம் ஒரு சர்ச்சுக்கு சென்று வரலாம். அந்த அமைதி மனதில் மாற்றத்தை உண்டு செய்யும். வாரம் ஒரு சினிமா அல்லது பீச் எங்காவது செல்லலாம். எதுவாக இருந்தாலும் வீட்டு மனிதர்களுடன் செல்லவும். அலுவலக நண்பர்களைத் தவிர்த்து விடவும்.
* மாதம் ஒருமுறை நம் விருந்தினர்கள் வீடுகளுக்குச் சென்றுவரலாம். அக்கா, சித்தி, பெரியப்பா, மாமா, மாமி என்று உறவு முறை சொல்லி அழைத்துப் பேசுவோம்.
* அதுபோல வார விடுமுறை நாட்களில் மாறுதலுக்காக வீட்டு வேலைகளைச் செய்யலாம். மனம் ஒன்றிச் செய்யும்போது மனதில் உங்களை அறியாமல் ஒரு நிறைவும் சந்தோஷமும் உண்டாகும்.
* எனக்குத் தெரிந்த சிறிய அளவில் பிசினஸ் செய்யும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமையை 'ஒய்ஃப் டே’ என்று சொல்லுவார். ஏனெனில், அன்று முழுவதும் அவர் வீட்டுக்காகவே தன் நேரத்தை செலவழிப்பார். இது நல்ல ஐடியாவாக இருக்கிறதல்லவா?
* இங்கு நான் சொன்ன அத்தனை விஷயங்களையும் நான் என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். பலன் கிடைக்கும்போது சந்தோஷம் பலமடங்காகும்.''
- ஜூனியர் விகடன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum