புதிதாகத் தயாரிக்கப்படும் மணிக்காட்டிகள் ஏன் 10:10 எனும் நேரத்தையே குறிக்கும்படி தயாரிக்கப்படுகின்றன?
Mon Mar 04, 2013 8:32 pm
குறிக்கும்படி தயாரிக்கப்படுகின்றன? அந்த நேரத்தைக் காட்டுவது போல மாற்றம்
செய்து விற்பனைக்கு வைப்பதின் நோக்கம் என்ன?
இந்த வழக்கம் 1920-ஆம் ஆண்டு முதற்கொண்டே பேணப்பட்டு வருகிறது.
சிலர் இதற்கும் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் படுகொலைக்கும் தொடர்பு
இருப்பதாகக் கருதுகின்றனர். ஆபிரகாம் லிங்கன் அவர்கள் 1865-ஆம் ஆண்டு,
ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் இரவு 10:13 மணியளவில் சுடப்பட்டார். பின்னர்,
மறுநாள் காலை 7:22 மணியளவில் உயிரிழந்தார். எனவே, புதிய மணிக்காட்டிகளில்
10:10 எனும் நேரத்தைக் குறித்து விற்பனைக்கு வைப்பது, அவரின் இறப்பை
நினைவுறுத்தும் நோக்காகக் கருதப்படுகிறது.
மேலும், 10:10 என்று
மணிக்காட்டியில் வைப்பது மணிக்காட்டி ஒரு புன்னகை முகம் போல
தோற்றமளிக்கும். இது வாடிக்கையாளர்களின் மனதைக் கவரும் நோக்கில், அதே சமயம்
8:20 என்று வைத்தால் கவலையான முகத்தைப் போல தோற்றமளிக்கும்.
மேலும், 10:10 என்று காட்டும் மணி முள்கள், விடுதலையாகப் பறக்கும் பறவையைப் போல தோற்றமளிப்பதாலும் ஆகும்.
தொடர்ந்து, அவ்வாறு மணி முள்களைக் குறித்து வைப்பது மணிக்காட்டி தயாரிக்கும் ஆலைகளின் பெயர்களைத் தெளிவாகக் காட்ட உதவும்.
நன்றி: முகநூல் சுபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum