இதெல்லாம் எங்க போய் முடியபோவுதோ???
Sat Dec 27, 2014 1:01 pm
ஓநாய்களையெல்லாம் இயேசுவுக்கும் தேவனுடைய ஊழியக்காரர்களுக்கும் ஒப்பிடுகிறார்களே அதைப்போன்று அரசியல்கட்சிகளிலுள்ளவர்களும் பொதுவாழ்க்கையில் ஊழல் செய்கின்றவர்களை இயேசுவுக்கும் தியாகிகளுக்கும் ஒப்பிட ஆரம்பித்துவிட்டனர் ...
இதுதான் இப்போதைய டிரெண்டு ... இதெல்லாம் எங்க போய் முடியபோவுதோ???
நன்றி: பொன்னுதுரை ஜோசப் - முகநூல்
Re: இதெல்லாம் எங்க போய் முடியபோவுதோ???
Sat Dec 27, 2014 1:08 pm
ஆசீர்வாத தட்டு
வியாபாரத்தில அநியாயமா சம்பாதிக்கிகற பணத்தையும் அரசாங்கத்த ஏமாத்தி லஞ்சமா வாங்கின பணத்தையும் லம்பா அடிக்க அங்கிகள் கண்டுபிடிச்ச அட்டகாசமான கண்டுபுடிப்புதான் இந்த ஆசீர்வாத தட்டு.
நாலே நாலு ஆப்பிள் பழம் கணக்குக்கு ரெண்டு ஆரஞ்சி பழம் பெரிசா காட்ட ஒரே ஒரு அன்னாச்சி பழம் நடுவுல ஒரு பைபிளு அதுக்கு மேல ஒரே ஒரு கிராம்ல சின்ன தங்க மோதிரம் பேக்கிங்கு மட்டும் அட்ராக்ஷனா இருக்கும்.
இத வெல குடுத்து வாங்க முடியாது போட்டி போட்டு ஏலத்திலதான் எடுக்கணும். இந்த வருசத்தில யார் யாரெல்லாம் அதிகமா அநியாயமா ஏமாத்தி சம்பாதிக்கிறாங்களோ அவங்கதான் இந்த ஏலத்தில கலந்துக்கணும் .... அநியாமா சம்பாதிப்பிங்களோ அல்லது ஊர ஏமாத்தி சம்பாதிப்பிங்களோ அதபத்தி பிரச்சனையே இல்ல ... ஏலத்த எந்த அளவுக்கு ஏத்திவுட்டு அதிக வெல குடுத்து ஏலம் எடுக்கிறீங்களோ அதுதான் மிகமிக முக்கியம்.
அப்பதான் நம்ம அங்கிகள் மத்தியில உங்களுக்கு அந்த அளவுக்கு மரியாதை ஓஹோன்னு இருக்கும் உங்கள பத்தி பிரசங்கத்துல புகழ்ந்து தள்ளிடுவாங்க ... சப மக்கள் மத்தியிலும் உங்களுக்கு ஒரு ஸ்டேட்டசு நல்ல பெயர் இருக்கும். பெருந்தலைகளை பொருத்து இதன் விலை ரூ.50,000/- முதல் 5 லட்சம் கூட தாண்டும் .... லீவுல வெளிநாட்ல வேலை செய்ற யாராவது ஊருக்கு வந்திருந்தா ஏலத்த வேடிக்க பார்க்க நின்னுட்டிருந்தா அங்கிகள் அதை நோட் பண்ணி நல்ல ரேட்ட ஏத்திவுட்டு அவங்க தலைல இந்த சாபத்தட்ட கட்டிடுவாங்க ... போன தடவை சாபத்தட்டு ஏலம் எடுத்த நபர் இந்த தடவை ஏலத்துல கலந்துக்கலைன்னா அவருக்கு கொள்ளை வருமானம் கொஞ்சம் டல்லுன்ன அர்த்தம்.
இந்த (சாப)ஆசீர்வாத தட்ட சர்ச்சில ஏலத்துல எடுத்தா வருசம்பூரா உங்க வியாபாரம் ஓகோன்னு நடக்கும்
அந்த ஒரு கிராம் நகய எடுத்து லாகர்ல உள்ள தங்க வைர நகயோட வச்சி புட்டி வச்சா ஒரே வருசத்தில ரெண்டு மடங்கா ஆயிடும்
இளிச்ச வாய ஏமாளிங்க வருசம்பூறா சிக்கிட்டே இருப்பானுக ... ரெகுலரா துட்டு கறந்துட்டே இருக்கலாம்
ஆசீர்வாத தட்ல இருந்த பைபிள எடுத்து ஆபீஸ்ல வச்சா வருமான வரி காரங்க கிட்டயோ அல்லது லஞ்ச ஒழிப்பு ஆபிஸர் கையிலயோ சிக்கவே மாட்டீங்க
சபைல நடக்கிற எலக்ஷன்ல தொடர்ந்து ஜெயிச்சிட்டே இருக்கலாம்...
அப்புறம் என்ன !!! கோலப்போட்டியில கலந்துக்கலன்னாலும் இந்த ஏலப்போட்டியிலாவது கலந்துக்கங்க ...
நன்றி: பொன்னுதுரை - முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum