இதெல்லாம் எதனால்?
Tue Dec 15, 2015 11:45 pm
ஒரு சிலர் வேதாகமத்தில் தெளிவாக சொல்லப்படாத விஷயத்தைத் தரிசனத்தில் பார்த்ததாக சொல்லி விளக்கம் கொடுப்பர், இப்படி ஒருபோதும் தேவன் செய்ய மாட்டார்.
உதாரணத்திற்கு,
வில்லியம் பிரன்ஹாம் என்ற ஊழியரை உங்களுக்கு தெரிந்திருக்கும், 19ஆம் நூற்றாண்டில் அற்புத அடையாளங்கள் என உலகையே கலக்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய போதனைகள் எல்லாம் வேதத்திற்கு விரோதமாகவே இருந்தன. அவருடைய போதனைகளில் சில
1. ஏவாளும் சாத்தானும் உடலுறவு கொண்டனர்
2. நோவா வஸ்திரம் விலகி படுத்திருந்த போது நோவாவின் மகன் காம் நோவாவோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட்டிருந்தான்
இந்த மாதிரியான உபதேசத்தை இவர் எதன் அடிப்படையில் சொன்னார் என்று பார்த்தால், அவர் சொன்னது “நான் இவற்றை வேதத்தில் வாசிக்கவில்லை ஆனால் ஆண்டவர் எனக்கு தரிசனத்தில் காண்பித்தார் என்றார்”.
கொஞ்சம் நிதானித்துப் பாருங்கள் இந்த அடிப்படையில் வேதத்தை விளக்கினால் யார்வேண்டுமானாலும் எனக்கு தேவன் இந்த தரிசனத்தைத் தந்தார் ஆதலால் இந்த வசனத்திற்கு அர்த்தம் இதுதான், அதுதான் என்று மாற்றி மாற்றி சொல்லலாமே! கவனமாயிருங்கள் வேதத்தில் எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம் என்று எழுதியிருக்கிறது (1கொரி4:6)
இன்றைக்குள்ள கள்ள உபதேசங்கள் உருவாக மூலக்காரணமே சொப்பனங்களுக்கும், தரிசனங்களுக்கும் வேதத்தைவிட அதிக முக்கியத்துவம் தந்ததே!
உதாரணத்திற்கு ...
மர்மோன் சபையினரை எடுத்துக்கொள்ளுங்கள், கிபி 18ஆம் நூற்றாண்டில் அந்த சபையின் ஸ்தாபகரான ஜோசப்ஸ்மித் என்பவரை மர்மோனி என்ற தேவதை சந்தித்து வேதத்தில் தேவன் எழுதாமல் விட்ட எல்லாவற்றையும் அறிவிக்கிறேன் என்று சொல்லி ஒரு தகட்டைக் கொடுத்ததாக அறியலாம். மர்மோன் சபையினர் இன்றும் அந்த புத்தகத்தை வேதத்தைவிட முக்கியமாகக் கருதி பயன்படுத்துகின்றனர்.
யெகோவா சாட்சியினரின் பத்திரிக்கையான வாட்ச்டவர் கிபி 1925ல் மரித்த பரிசுத்தவான்களான ஆபிரகாம், ஈசாக்கு போன்றோர், இந்த பூமிக்கு வரப்போகிறார்கள் என்று தரிசனத்தில் கண்டதாகச் சொல்லி முன்னறிவித்தது, ஆனால் இன்றைவரைக்கும் அது நடக்கவில்லை.
அதுமாத்திரமா, முகமதுநபியை எடுத்துக்கொள்ளுங்களேன், அவரும் கூட தன்னை காபிரியேல் தூதன் சந்தித்து குர்ஆனை கொடுத்தார் என்று சொல்லியிருக்கிறார், அந்த தரிசனத்தால் ஒரு இஸ்லாம் மார்க்கமே தேவனை விட்டு விலகிப்போயுள்ளது. இதெல்லாம் எதனால்?
தரிசனத்தால், அதுவும் வேதத்தை முழுமையான அதிகாரமாக எடுத்துக்கொள்ளாமல் தரிசனத்தை அதிகாரமாக எடுத்துக்கொண்டதே காரணம். இதைக்குறித்து அப்போஸ்தலன் பவுல் இப்படியாக எழுதுகிறார்... (அப் 20:29-32)
29. நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்.
30. உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.
31. ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.
32. இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
இந்த வசனத்தை சற்று ஆராய்ந்துபாருங்கள், அதாவது சபையை தப்பவிடாத ஓநாய்கள் சபைக்குள் வரும் என்றும், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள அப்போஸ்தலன் பவுல் சபை மூப்பர்களைக் கிருபையுள்ள வசனத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார் என்றும் தெரிகிறது... ஏன் தெரியுமா? அநேகக் கள்ளப்போதகர்கள் வந்து அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன், இதைக் கனவில் பார்த்தேன் என்று சொல்லும்போது நாம் வசனத்தை பிடித்துக்கொள்ளவேண்டும் என்று பவுல் சொல்லுகிறார். வசனத்தில் இல்லாத ஒன்றை, நாமே தரிசனமாகக் கண்டாலும் அதை நாம் நம்பத்தேவையில்லை.
(கலா:1: நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை(வசனத்தை) உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
தேவன் எவற்றை வெளிப்படுத்தவேண்டுமோ அவற்றை தெளிவாக வேளிப்படுத்திவிட்டார், அதற்கு மேல் நாம் தெரியவேண்டுமென விரும்பினால் தவறான சத்தியத்திற்கு அதுவே நம்மை நடத்திவிடும் ஜாக்கிரதை...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum