கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்
Mon Dec 15, 2014 4:19 pm
கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்
போலோ பாராத மாதாவிற்கு ஊ...!! ஊ ....!!!
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபா தலைவர் மதன்மோகன் மல்வியா ஆகியோரின் பிறந்த நாளை ‘‘சிறந்த ஆளுமை’’ தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
25–ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் மத்திய அரசின் நவோதயா, கேந்த்ர வித்யாலயா பள்ளிகளில் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. தலைவர்களின் பிறந்த நாளை சிறந்த ஆளுமை தினமாக கொண்டாடும் நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
25–ந் தேதி அன்று 1 முதல் 5–ம் வகுப்பு, 6 முதல் 8–ம் வகுப்பு, 9 முதல் 10–ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டுரைப்போட்டி, வினா – விடை போட்டி, குறும்படங்கள் திரையிட்டு மாணவர்களுக்கு ஆளுமை தினம், பண்டிகளை பற்றி விளக்கி கூற வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் மத்திய அரசு பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் அந்த பள்ளி குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்ததாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இது பற்றி மற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று பள்ளி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் சிறந்த ஆளுமை தினம் கொண்டாட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ மற்றும் கேந்த்ர வித்யாலயா பள்ளிகளுக்கு சுற்றறிக்கை எதுவும் அனுப்பப்பட்டு உள்ளதா என சி.பி.எஸ்.இ சென்னை மண்டல அதிகாரி சுதர்சன ராவ்விடம் கேட்டதற்கு அது பற்றி எந்த தகவலும் வரவில்லை என்றார்.
பொதுவாக குளிர்கால விடுமுறை டிசம்பர் 23 அல்லது 24–ந் தேதியில் இருந்து விடுவது வழக்கம். அந்த விடுமுறை காலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை அரையாண்டு தேர்வு 23–ந் தேதி முடிவடைகிறது. 24–ந் தேதி முதல் ஜனவரி 1–ந் தேதி வரை அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஜனவரி 2–ந் தேதி தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
நன்றி: விடுதலை ஈ பேப்பர் முகநூல்
Re: கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து : மத்திய இந்துத்துவ ஆரிய அரசு முடிவு - விரைவில் அமல்
Mon Dec 15, 2014 4:25 pm
அமைச்சர் ஸ்மிருதி இராணி | கோப்புப் படம்
சில ஊடகங்களில் திட்டமிட்டே மக்களை திசை திருப்பும் வகையில், செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் சாடியுள்ளார்.
டிசம்பர் 25-ம் தேதியன்று நல்லாட்சி தினமாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் அன்றைய தினம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கட்டுரைப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்செய்தி தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ள ஸ்மிருதி இராணி, டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசு பள்ளிகளுக்கு வழக்கம்போல் கிறிஸ்துமஸ் விடுமுறை அளிக்கப்படும் என நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது விளக்கமளித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, "பரபரப்பான தலைப்புச் செய்தி வேண்டுமென்பதற்காக, தவறான செய்தி திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. தகவல் திரித்து செய்தியாக்கப்பட்டுள்ளதால் நான் விளக்கமளிக்கிறேன். டிசம்பர் 25-ம் தேதியன்று மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளில் நடைபெறவுள்ள கட்டுரைப் போட்டியில் பங்கேற்பது மாணவர்கள் விருப்பமே, யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. மேலும், இப்போட்டி ஆன்லைனில் நடத்தப்படவுள்ளது" என்றார்.
இது தவிர தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்மிருதி வெளியிட்டிருக்கும் தகவலில், "கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை. கட்டுரைப் போட்டி ஆன்லைனில் நடத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளார்
நன்றி: தி இந்து
Permissions in this forum:
You cannot reply to topics in this forum