ஜிமெயில், யாஹூ மெயிலுக்கு தடை: மத்திய அரசு அதிரடி!
Sat Feb 28, 2015 7:27 pm
புதுடெல்லி: மத்திய அரசு அலுவலகங்களில் கூகுளின் ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் வசதியை பயன்படுத்த தடைவிதிக்கப் பட்டுள்ளது.
தடையை மீறி பயன்படுத்தினால் பயன்பாட்டு தகவல்களை ரெக்கவர் செய்து ஈ-மெயில்களை அழிக்கவும் செய்ய மத்திய அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.
கடந்த 18 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.
அதாவது, இந்திய அரசுக்கான ஈ-மெயில் பாலிசியும், தகவல் தொழில்நுட்ப வசதியை இந்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் விதிமுறைகளும் வெளியிடப்பட்டன.
அதில் கூகுள், யாஹூ-வை பயன்படுத்தக்கூடாது என்றும், அரசு அலுவலங்களில் அதிகாரபூர்வ பணிகளுக்கு இந்திய அரசு பரிந்துரைத்துள்ள NIC மின்னஞ்சல் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். வெளிநாட்டு சர்வர்களான கூகுள், யாஹூவை பயன்படுத்துவதால் அமெரிக்க உளவு நிறுவனங்கள் ரகசிய தகவல்களை திருடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- அரசு வேலைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆட்களை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம்
- திருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- மாணவர்களுக்கான விசா விதிமுறைகளில் மாற்றம்: பிரான்ஸ் அரசு அதிரடி
- ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மத்திய அரசு பணிகளில் சேரலாமாம்
- சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட்டது
Permissions in this forum:
You cannot reply to topics in this forum