வரகரிசி பருப்பு அடை
Fri Sep 26, 2014 8:29 am
தேவைப்படும் பொருட்கள் :
வரகு அரிசி - 1 கப்
து.பருப்பு - கால் கப்
கடலை பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
பச்சை பயிறு - 1 கைப்பிடி
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 5
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
செய்முறை :
வரகு அரிசி, பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்து அதனுடன் கடைசியாக பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாயை போட்டு அரைத்து கொள்ளவும். வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, பெருங்காயத்தூள், துருவிய தேங்காய் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கலக்கவும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சிறிய அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum