கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
Fri Sep 23, 2016 8:02 am
ஓணம் ஸ்பெஷல் - பருப்பு குழம்பு
ஓணம் சத்ய என்றால் என்னவென்று தெரியுமா? ஓணம் சத்ய என்றால், வாழை இலையில் கேரளாவில் மிகவும் பிரபலமான சில உணவுகளை சமைத்து விருந்து செய்வது தான். அந்த வகையில் கேரளாவில் பருப்பு குழம்பும் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் எண்ணெய் - 1
டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்ழுன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, கெட்டியாக மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டுஇ தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மூடி 3 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
குக்கரானது குளிர்ந்ததும், அதனை திறந்து, பாசிப்பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை வாணலியில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு வதக்கி, பின் அதனைப் பருப்புக் கலவையில் ஊற்றி கிளறி, இறக்க வேண்டும்.
இப்போது அருமையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு ரெடி!!!
ஓணம் சத்ய என்றால் என்னவென்று தெரியுமா? ஓணம் சத்ய என்றால், வாழை இலையில் கேரளாவில் மிகவும் பிரபலமான சில உணவுகளை சமைத்து விருந்து செய்வது தான். அந்த வகையில் கேரளாவில் பருப்பு குழம்பும் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
தேங்காய் எண்ணெய் - 1
டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்ழுன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் தேங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போட்டு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, கெட்டியாக மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டுஇ தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மூடி 3 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
குக்கரானது குளிர்ந்ததும், அதனை திறந்து, பாசிப்பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை வாணலியில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு வதக்கி, பின் அதனைப் பருப்புக் கலவையில் ஊற்றி கிளறி, இறக்க வேண்டும்.
இப்போது அருமையான கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு ரெடி!!!
Re: கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
Fri Sep 23, 2016 8:02 am
ஓணம் ஸ்பெஷல் மிளகாய் அவியல்
கறிகாய் இல்லாமல் செய்யும் அவியல் இது புன்னகை
தேவையானவை:
துவரம் பருப்பு – 1/2 கப்
மிளகாய் வற்றல் – 10
தக்காளி – 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
பருப்பு, மிளகாய், தக்காளி மூன்றையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலி இல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த பருப்பை ஊற்றி உப்பு போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Re: கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
Fri Sep 23, 2016 8:03 am
ஓணம் ஸ்பெஷல் பரங்கிக்காய் புளிக் குழம்பு
தேவையானவை :பரங்கிக்காய் – 2 பத்தை
சின்ன வெங்காயம் – 10 (உரித்தது)
பூண்டு – 4 பல்
தக்காளி – 1
புளி – எலுமிச்சையளவு அல்லது புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
குழம்பு மிளகாய் பொடி – 3 ஸ்பூன்
வெந்தயப்பொடி 1/2 ஸ்பூன் (வறுத்து அரைத்தது )
தாளிக்க:
கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், மிளகு, சீரகம், எல்லாம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணை கொஞ்சம்
செய்முறை:
பரங்கிக்காயை துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டைஉரித்து தட்டி வைக்கவும்.
தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு பரங்கிக்காய் துண்டங்களை போட்டு வதக்கி, அதில் குழம்பு பொடி போட்டு புளிக் கரைத்ததையும் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.
பரங்கிக்காய் நல்லா வெந்து பச்சை வாசனை போனவுடன், வெந்தயப்பொடி போட்டு ஒரு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.
Re: கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
Fri Sep 23, 2016 8:04 am
ஓணம் ஸ்பெஷல் பால் பாயசம்
தேவையானவை :
அரிசி – 1 கப்
பால் – 4 கப்
சர்க்கரை – 2 கப்
முந்திரி – 12
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
நெய் – 2 மேஜைக் கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் விட்டு, அதில் அரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலி இல் ஒரு கப் அரிசிக்கு, ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து வேக விடவும்.
பால் ,தண்ணீர் கலவையில் அரிசி நன்கு வெந்து குழைய வேண்டும்.
அடிக்கடி கிளறிவிடவும்.
அரிசி நன்கு வெந்ததும், மீதமிருக்கும் பாலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.
பால் சுண்டி வரும்போது தீயை மிதமாக வைத்துவிட்டு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
பால் பாயசம் தயார்.
Re: கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
Fri Sep 23, 2016 8:04 am
ஓணம் ஸ்பெஷல் ஓலன்
தேவையானவை:
பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் 1 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு
செய்முறை:
தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.
வெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.
கடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்
Re: கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
Fri Sep 23, 2016 8:07 am
ஓணம் ஸ்பெஷல் கூட்டு கறி
கேரளாவின் மலபாரில் உள்ள ஒரு ஸ்பெஷலான ரெசிபி தான் கூட்டு கறி. இதனை சாத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
கூட்டு கறி என்பது மலாபார் ஸ்டைல் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமானது. பொதுவாக இந்த கூட்டு கறியை ஓணம் பண்டிகையன்று செய்வார்கள். இது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட். அதிலும் இதனை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஓணம் ஸ்பெஷல் மலபார் ஸ்டைல் கூட்டு கறியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சுண்டல் - 1 கப் (வேக வைத்தது) பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது) வாழைக்காய் - 1 (தோல் சீவி, வேக வைத்தது) சேனைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது) கேரட் - 1/2 கப் (நறுக்கியது) பூசணிக்காய் - 1/2 கப் (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1/2 கப் (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மசாலாவிற்கு... தேங்காய் - 1 கப் (துருவியது) வரமிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் தாளிப்பதற்கு... கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை வாணலியில் போட்டு, லேசாக வறுத்து, நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அனைத்து காய்கறிகளையும் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின் விசிலானது போனதும், மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து, 10-15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறுதியில் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் உள்ள கலவையில் ஊற்றி கிளறிவிட்டால், சூப்பரான கேரளா ஸ்டைல் கூட்டு கறி ரெடி!!!
Re: கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
Fri Sep 23, 2016 8:08 am
ஓணம் ஸ்பெஷல் எரிசேரி
தேவையானவை:
வாழை காய் 1
சேனைக்கிழங்கு 1 துண்டு ( வாழை காய் இன் அளவு இருக்கணும் )
அரைக்க :
தேங்காய் 1 பெரிய முடி
மிளகாய் வற்றல் 10
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தேங்காய் என்னை 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
சேனைக்கிழங்கு , வாழை காய் இரண்டையும் நறுக்கி துளி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவைக்கக்வும்.
வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெந்த காய்களை போட்டு நன்கு கிளறவும்.
அறைக்க குடுத்துள்ள பொருட்களை மசிய அறைக்கவும்.
வெந்த காயுடன் கோட்டவும்.
வேண்டுமானால் உப்பு போடவும்.
நன்கு கலந்து, மீதமுள்ள தேங்காய் எண்ணையும் விட்டு, கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நல்ல மணமான ‘எரிசேரி’ தயார்.
சாதத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம், அப்பளாம் பொரித்தால் தொட்டுக்கொள நல்லா இருக்கும் புன்னகை
Re: கேரளா ஸ்டைல் பருப்பு குழம்பு
Fri Sep 23, 2016 8:10 am
ஓணத்திற்கு ஏற்ற இனிப்பான... அடை பாயாசம்!!!
தேவையான பொருட்கள்: இலை அடை - 8 துண்டுகள் வெல்லம் - 500 கிராம் நெய் - 200 கிராம் ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன் தேங்காய் பால் - 2 கப் உலர் திராட்சை - 10 முந்திரி - 10 நறுக்கிய தேங்காய் - 50 கிராம் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரைவதற்கு ஏற்றளவு தண்ணீரை ஊற்றி கரைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் இலை அடை செய்து நீண்ட நேரம் ஆகியிருந்தால், அதனை மறுபடியும் இட்லி பாத்திரத்தில் போட்டு, 20 நிமிடம் வைத்து எடுக்கவும். இதனால் அடை சற்று மென்மையாக இருக்கும். பிறகு சூடேற்றிய அந்த அடையை, குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும். பின் கரைத்து வைத்திருக்கும் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடையை அதில் போட்டு, 10 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்கவும். பிறகு தேங்காய் பாலை அதில் ஊற்றி, ஏலக்காய் தூளை சேர்த்து, சற்று கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, முந்திரி, தேங்காய், உலர் திராட்சை ஆகியவற்றை வறுத்து, இறக்கி வைத்திருக்கும் கலவையில் போடவும். இப்போது அருமையான அடை பாயாசம் ரெடி!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum