நிலத்தில் விழுந்த கோதுமை மணி
Mon Jun 23, 2014 8:35 am
நிலத்தில் விழுந்த கோதுமை மணி
ஈரான் நாட்டில் வளர்ந்து வரும் கிறிஸ்தவம்
ஒரே நாளில் 246 பேருக்கு ஞானஸ்தானம் பெற்ற அதிசய நிகழ்வு
ஈரான் நாட்டில் பல்வேறு ஊழியங்கள் நடைபெற்று வருகின்றன. பல ஆயிரங்கள் கிறிஸ்துவை ஏற்று கொண்டு வருவதால் மத்திய நாடுகளில் ஈரான் வேகமாக கிறிஸ்துவை முன்னின்று அறிவிப்பதில் வளர்ந்து வருகிறது. இதில் பலரும் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொண்டு ஊழியர்களாக மாறி கிராமம் கிராமமாக சென்று தைரியமாக ஊழியம் செய்கின்றனர். ஏற்று கொள்ளும் பலரும் பெயில் இஸ்லாமியர்களை வாழ்ந்தாலும் வீடுகளில் வேதாகமம் படித்து ஜெபித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் உலகிற்கு தங்களில் மனமாற்றத்தை குறித்து அறிவிக்கு 246 இரானியர்கள் முடிவு செய்திருந்தனர். இவர்களில் வாலிபர்கள், வாலிப பெண்கள், குடும்பங்களாக கலந்து கொண்டு சந்தோசத்தோடு மனம்திரும்புதளுக்கு ஏற்ற ஞானஸ்தானத்தை எடுத்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்களில் சாட்சிகள் சில:
அலி மற்றும் யடா - இருவரும் கணவன் மனைவியாய் வாழ்ந்து வந்தவர்கள். பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம், குடி, போராட்டம் என்று மாறி விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்தனர். இயேசுவின் அன்பை பற்றி புடிந்து கொண்ட இவர்கள் இருவரும் மனமாறி இயேசுவை தெய்வமாக ஏற்று கொண்டு இனைந்து வாழ முடிவெடுத்தனர். இன்று சபைக்கு முன்பாக இருவரும் ஞானஸ்தானம் எடுத்து கொண்டனர்.
ஹாஜா ஷான் என்பவர் தான் கடந்து வந்த பாதை மிகவும் கொடுமையாக இருந்ததாகவும், இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்ட பின்னர் சந்தோசமாக மாறியுள்ளதாகவும் நடனமாடுகிறார். ஆமென்.
ஹஷான் என்பவர் தான் இயேசுவை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியாய் உள்ளதாக கூறினார். ஹுசைன் என்பவர் தான் இஸ்லாமியரை இருந்து கிறிஸ்துவை ஏற்று கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது என்று உற்சாகமாக கூறினார்.
மரியம் என்ற பெண் தன்னை இயேசு தீரா வியாதியில் இருந்து குனமாக்கினதாக சந்தோசாமாக கூறினார். இப்படி சாட்சிகளை நாம் அடுக்கி கொண்டே போகலாம்.
ஈரான் தேசத்தில் இப்படிப்பட்ட நிகழ்சிகளுக்கு கடுமையான விதிமுறைகள் இருப்பதால் ஈரான் நாட்டின் எல்லைகொட்டின் அருகில் உள்ள ஓர் விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் இந்த ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பலரும் இயேசுவை ஏற்று கொண்டு வருகின்றனர். ஆபத்துக்கள் நிறைந்திருந்தாலும் தைரியமாக இயேசுவை எடுத்து செல்கின்றனர். தொடர்ந்து ஈரான் தேச மக்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள். தேவன் உங்களை பெலப்படுத்துவாராக. ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum