திரிபுரா நிலத்தில் ஓடிய ரத்த வெள்ளம்
Wed Feb 11, 2015 8:38 pm
நிலத்தில் விழுந்த கோதுமை மணி
திரிபுரா நிலத்தில் ஓடிய ரத்த வெள்ளம்
அதிகாலை 3 மணி, தூங்கி கொண்டிருந்த போதகர் லேத்தங் கங்க்டே, மனைவி, 10 வயது மகன் மற்றும் 7 வயது மகள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது களிமண்ணினால் செய்யப்பட இவர்கள் குடிசைக்குள் நுழைந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் நால்வரையும் கடுமையாக தாக்கினர். சுதாரித்து கொண்ட போதகர் அவர்களோடு போராட ஆரம்பித்தார். கடுமையான புயல் காரணமாக சிறிது சுதாரித்து ஊருக்குள் ஓடினார். பின்னர் சிலரை அழைத்து வந்தார். அதற்குள் அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கடுமையாக தாக்கி இருந்தனர்.
இதில் அதிக கத்தி குத்து போதகர் உடம்பில் இருந்தது. அவரின் தலை மற்றும் முதுகு பகுதிகளில் கத்தியால் கிளித்திருன்தனர். அவரின் வயிற்று பகுதியின் உள்ளே வரை பெரிய கத்தி ஒன்று பாய்ந்திருந்ததால் ரத்தம் அதிகமாய் வெளியேறினது. உடனே மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது காவல் துறையில் முறையிட எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
இவைகளுக்கு பிறகு இவரை தாங்கி வந்த "Evangelical Congregational Church of India" என்ற நிறுவனம் இவரை திரும்ப அழைத்து கொள்ள முடிவு செய்தது. ஆனால் வர மறுத்துவிட்ட இவர் குடும்பம் நாங்கள் கிறிஸ்துவுக்காக இந்த நுகத்தை சுமக்கிறோம். என்னையும் என் குடும்பத்தை கொன்று போட்டாலும் நாங்கள் இங்கே இருந்து வர மாட்டோம் என்று தீர்க்கமாக கூறிவிட்டனர்.
இப்போது இவருக்கு செங்களினால் செய்யப்பட்ட வீடு ஒன்று கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் ஓர் பகுதியில் தொடர்ந்து வசித்து வருகிறார். இவரின் சுவிசேஷ அக்கினியை அணைப்பது மிகவும் கடினமே. இப்போது தான் இயேசு சிந்தின ரத்தத்தின் மதிப்பை அதிகமாய் புரிந்து கொண்டதாக கூறி வருகிறார்.
இந்த குடும்பத்திற்காக தொடர்ந்து ஜெபித்து கொள்ளுங்கள். உங்கள் வீடுகளின் அருகில் இருக்கும் உத்தம வைராக்கிய ஊழியர்களை அழைத்து குடும்ப அன்பை செலுத்துங்கள். அவர்களோடு ஒரு மதத்திற்கு ஒரு முறையாவது பேசுங்கள். அவர்களும் நம்மை போன்று சாதாரண மனிதர்கள் தான். ஆனால் அவர்கள் அர்ப்பணிப்போ விலை உயர்ந்தது.
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum