ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான். நீதி. 13:20
Fri Jun 06, 2014 7:41 am
கர்த்தருக்கு பயப்படுகிற தேவப்பிள்ளைகள் நல்ல குணாதிசயங்கள் உள்ள தேவப்பிள்ளைகளோடு தான் ஐக்கியம் வைத்துக்கொள்வார்கள் என்று சாலோமோன் ஞானி கூறுகிறார். ஒரு மனிதனுடைய குணாதிசயம், அவன் எப்படிப்பட்ட குணாதிசயமுள்ளவர்களோடு பழகி, ஐக்கியம் வைத்துக்கொள்கிறானோ அதைபொறுத்துதான் அவனுடைய குணாதிசயம் அமையும் என்றும் சாலோமோன் கூறுகிறார்.
கர்த்தருக்கு பயந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, நடப்பவர்களுடைய சம்பாஷனை எப்போதும், எல்லா இடங்களிலேயும் ஆவிக்குரியதாகவே இருக்கும். கர்த்தருடையக் கற்பனைகளைக்குறித்து அவர்கள் தியானித்து, ஆவிக்குரிய அறிவில் வளர்ந்து பெருகி, ஞானவான்களாக மாறுவார்கள்.
பிரியமானவர்களே, ஆதலால் நீ நல்லவர்களின் வழிகளிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக என்ற நீதி. 2:20 வார்த்தையின்படியும், சங் 119:63ன்படி, உமக்குப் பயந்து, உமது கட்ளைகளைக் கைகொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன் என்று சங்கீதக்காரன் சொன்ன வாக்கியத்தின்படியும் ஞானவான்களோடு ஐக்கியம் பாராட்டுவோம். அப்பொழுது கர்த்தருக்கு பயந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார் (மல்கியா 3:14) என்ற வார்த்தையின்படியும், அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் அனுதினமும் தேவாலயத்தில் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு, மகிழ்ச்சியோடும், கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணி என்ற அப்.2:46ன்படியும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும், கர்த்தருடைய பிள்ளைகளோடு மாத்திரம் ஐக்கியம் வைத்துக்கொள்வோம் என்றால், ஞானமடைவோம். மாறாக நம்மைச் சுற்றியுள்ள வஞ்சனையான இந்த பார்தலத்தில் 1கொரி.15:33-34ன்படி மோசம் போகாமலும், 2 கொரி 6:14-18ன்படி அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் சம்பந்தமும், ஐக்கியமும் வைத்துக்கொள்ளாமலும் எச்சரிக்கையாயிருப்போம்.
ஞானத்தின் ஆவியானவர் தாமே நம்மோடிருந்து, இந்நாளில் நம்மை ஆசீர்வதித்து, நடத்துவாராக.
நன்றி: சகோ.மேரி அகலிசியா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum