நீதி கதைகள்
Fri Jul 03, 2015 1:44 am
நீதி கதை
ஒரு அரசனுக்கு தீடிரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது..
அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவிலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..
அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால் தான் முடியும்..
அந்த அரசனுக்கு மூன்று மகன்கள்..
அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்..
தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..
”நான் உன்பின்னால் வருவேன்.. நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம் திரும்பவேண்டும். வலதுபக்கம் திரும்ப வேண்டும்… நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.. நடந்து கொண்டே இருக்கவேண்டும்.. எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.” எனகிறது..
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது..
தீடிரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை ..
என்னாயிற்று.. என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..
கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.
தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்.. அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்..
மூன்றாமவன் அடுத்து வருகிறான்.
இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்.. பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பெற்று தன் தந்தையையும் குணபடுத்திவிடுகிறான்.
முற்றும்....
★══════════════════★
கதையின் நீதி:
பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது.
★══════════════════★
Permissions in this forum:
You cannot reply to topics in this forum