நீதி நிஜமானதே
Sat Feb 21, 2015 8:54 pm
கட்டுக்கதையானாலும் கருத்துள்ள கற்பனைக் கதை ஒன்றை நம் பிரசங்கிமார்கள் விசுவாசிகளை உற்சாகப்படுத்த கூறுவதுண்டு.
அதாவது, ஒரு சபையின் விசுவாசி இப்படியாக எண்ணினாராம், எங்கள் சபை போதகர் எப்போதும பரிசுத்தத்தைப்பற்றியே போதிக்கிறார். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லுகிறார், ஒருவேளை அவர் மரிக்க நேர்ந்தால், கண்டிப்பாக பரலோகத்தில்தான் சேர்க்கப்படுவார் என்று உறுதியாக இருந்தாராம்.
திடீரென ஒருநாள் அந்த போதகர் மரித்துப்போக இந்த விசுவாசி எல்லாரிடமும் சொன்னாராம், யாரும் நம் போதகருக்காக துக்கிக்க வேண்டாம், அவர் பரலோகத்தில் சந்தோஷமாக இருப்பார் என்றாராம்.
அன்று இரவு, தேவன் அந்த விசுவாசியை ஆவியில் நிரப்பி, பரலோகம் அழைத்துச் சென்றாராம், அந்த விசுவாசியும் ஆவியில் அவரது போதகரை பரலோகத்தில் தேடு தேடென்று தேடினாராம் அங்கே அவர் இல்லை.
உடனே தேவதூதனானவர், நரகத்திற்கு போய் பார்க்கலாமா? என்று கேட்க, அந்த விசுவாசி இல்லை இல்லை, எங்கள் போதகர் எப்போதும் பரிசுத்தத்தைக்குறித்தே போதிப்பார், அவர் நரகம் செல்ல வாய்ப்பே இல்லை என்றாராம்.
தேவதூதன் அவரிடம் ஒரு மனிதன் மரித்துப் போனால் அவனது ஆவி ஒன்று பரலோகம் அல்லது நரகம் இந்த இரண்டு இடங்கள் தவிர வேறெங்கும் போக முடியாது என்றாராம.
அவ் விசுவாசியும் அரைகுறை மனதோடு நரகத்தில் எட்டிப் பார்த்தாராம்,
அங்கே தண்ணீர் தண்ணீர் என்று தவிப்பவர்களில் அந்த விசுவாசி தேடிய போதகரும் இருக்க அந்த விசவாசி அதிர்ந்துப்போய், போதிப்பது சுலபம், போதிப்பதைப்போல் வாழ்ந்து பரலோக வாழ்வைப் பெறுவதே அவசியம் என்பதை அறிந்து கொண்டாராம்.

கதை கற்பனைதான். ஆனால் நீதி நிஜமானதே
Re: நீதி நிஜமானதே
Sat Feb 21, 2015 9:29 pm
வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார் என்பது வேதவார்த்தை (எபி:10:37). என்ன உன்னதமான எதிர்பார்ப்பு அது. ஒரு போதகரின் கல்லறையிலே இப்படியாக ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.
"எச்சரிக்கை: இரகசிய வருகையின் போது இங்கே நிற்பீர்களானால் இக்கல்லறையினின்று நன்கு விலகி நிற்கவும்."
கிறிஸ்துவின் இரகசிய வருகையை நம்புகிறவர்களா நீங்கள்? பவுல் அப்போஸ்தலன் சொல்லுகிறார்,"இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்." Iகொரி:15:51,52
Permissions in this forum:
You cannot reply to topics in this forum