பகிரங்க வருகை
Thu May 22, 2014 6:22 pm
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் கிறிஸ்துவின் இரண்டாம் (பகிரங்க) வருகையைப் பற்றி அறிந்திருந்தனரா?
ஆம். அறிந்திருந்தனர். மனசாட்சி காலப் பரிசுத்தவான்கள், மற்றும் நியாயப்பிரமாண காலத்துப் பரிசுத்தவான்களும் ஆண்டவர் இயேசு உலகத்தையும், அதிலுள்ள பாவிகளையும், அவர்களை மோசம் போக்கின சாத்தான், மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி ஆகிய யாவரையும் நியாயத்தீர்க்க பூமியின் கடைசி நாளில் மேகத்தில் தோன்றுவார் என்பதை அறிந்திருந்தார்கள்.
1. ஏனோக்கு: " ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். (யூதா.14,15).
2. யோபு: "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்." (யோபு.19:25). " பட்டயத்துக்குப் பயப்படுங்கள். நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான். (யோபு.19:29)
3. தாவீது: "அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்." (சங்.98:9)
" அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். (சங்.96:13)
4. தானியேல்: " உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதாரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும். அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்." (தானி.12:2)
5. ஏசாயா: " அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்." (ஏசா.13:6)
" இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜூவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார். கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார், கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்." (ஏசா.66:16)
6. ஏரேமியா: " யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர், அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன."(எரே.32:19).
7. யோவேல்: " அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது, அது சங்காரம்போலச் சர்வ வல்லவரிடத்திலிருந்து வருகிறது. (யோவே.1:15).
8.நாகூம்: " அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்து போகும். அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்." (நாகூ.1:5).
மேற்கூறப்பட்ட கர்த்தருடைய சத்திய வசனங்களின்படி, அன்பின் ஆண்டவர் தம்முடைய இரண்டாம் வருகையென்ற பகிரங்க வருகையைக் குறித்து பழைய ஏற்பாட்டு பரிசுத்த தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களைக் கொண்டு, தெளிவாய் முன்னறிவித்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.
ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையானது மனுக்குலத்திற்கு "சங்காரம் போல வருகிறது" (யோவேல்.1:15) என்று யோவேல் தீர்க்கரைக் கொண்டு அறிவித்துள்ளார்."அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்." (நாகூ.1:5). என்று நாகூம் தீர்க்கரைக் கொண்டு தெளிவாக உரைத்துள்ளார்.
" அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்."(ஏசா13:6) என்று ஏசாயா தீர்க்கரைக் கொண்டு எச்சரிக்கிறார். " "அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்." (சங்.98:9) என்று சங்கீதக்காரன் தாவீதைக் கொண்டு கூறியுள்ளார்.
பழைய ஏற்பாட்டு காலத்து ஜனங்கள் நியாயப்பிரமாணத்தை உண்மையாய் கைக்கொண்டு சுத்திகரிப்பின் மூலம் பரிசுத்தமடைய விரும்பாதபடியால் அவர்கள் பூமியின் இறுதிநாளில் தம்முடைய இரண்டாம் வருகையென்ற பகிரங்க வருகையின் மூலம் நியாயந்தீர்க்கப்பட இருக்கிறார்கள் என்பதை தம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலாக எச்சரிக்கிறார்.
நன்றி: இரகசிய வருகை

- கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கும், பகிரங்க வருகைக்கும் உள்ள வேறுபாடுகளின் குறிப்புகள்:-
- இரகசிய வருகை:
- பொய்யான இயேசுவின் வருகை நடக்கப்போகிறது!!!
- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை எத்தனை உள்ளது..?
- பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதலை ஏன் கர்த்தருடைய "இரகசிய வருகை" என்று அழைக்கப்படுகிறது:
Permissions in this forum:
You cannot reply to topics in this forum