பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதலை ஏன் கர்த்தருடைய "இரகசிய வருகை" என்று அழைக்கப்படுகிறது:
Thu May 22, 2014 6:08 pm
முதற்பலன்களாகிய பரிசுத்தவான்களின் எடுத்துகொள்ளபடுதல் பின்வரும் குறிப்புகளிலுள்ளபடி இரகசியமாயிருக்கும்
1) "திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார், ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்." (மத்.24:43,44)
அன்பான தேவனுடைய பிள்ளைகளே, மேற்கூறும் சத்திய வசனங்கள் பூரணமாக்கப்பட்ட சபையாகிய, மணவாட்டியான பரிசுத்தவான்களான தம்முடைய பொக்கிஷத்தைத் திருடிக்கொண்டு போகும்படியாக இயேசுவாகிய மணவாளன் "திருடனைப் போல" வருவார். (மத்தேயு.24:43) எந்த திருடனும் தன் திட்டங்களையோ அல்லது தான் வருகிற நேரத்தையோ முன்னதாக ஒரு போதும் வெளிப்படுவதில்லை. அப்படியே இயேசுவும் செய்வார். அந்தகாரத்தின் பிள்ளைகளும், இராத்திரியிலே வெறிகொள்ளுகிறவர்களும் அல்லது தூங்குகிறவர்களும், அக்கிரமங்களிலும் பாவங்களிலும் உலகத்தின் சிற்றின்பங்களிலும் மரித்தவர்களுமாயிருக்கும் உலக மக்களுக்கு என்ன சம்பவிக்கப்போகிறது என்னும் யோசனை கொஞ்சமும் காணப்படாது.
ஆண்டவர் இயேசுவின் வருகை அதாவது பூரணமாக்கப்பட்டவர்களின் எடுத்துக் கொள்ளப்படுதல் என்பதை குறித்த ஆவிக்குரிய உணர்வே அவர்களுக்கு இருக்காது. "சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று" பறைசாற்றிக் கொண்டிருப்பவர்கள் இவர்களே;
ஆனாலும் இயேசுவின் இரகசிய வருகை, "இரவிலே திருடன் வருகிற விதமாய்" அவர்கள் மேல் வந்துவிடும் அது சம்பவிக்கும் போது, "கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறது போல் "வேகமாக அவர்கள் மேல் வந்திறங்குகிற 'சடிதியான அழிவைக்" குறித்து இவர்கள் ஆச்சரியப்படுவார்கள். பூரணமான பரிசுத்தவான்கள் பூமியிலிருந்து மறைந்து போனதைக் குறித்துஅவர்கள் ஒரு தெளிவற்ற அறிவுடையவர்களாயிருப்பார்கள். ஆனாலும் இந்நிகழ்ச்சியைக் குறித்த கலக்கம் இவர்களுக்கு முற்றிலும் மறைபொருளாகவே இருக்கும்.
2. "அப்படியே நீங்களும் விழித்திருங்கள்: ஏனெனில், வீட்டெஜமான் சாயங் காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத்திலோ, காலையிலோ,எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்." (மாற்.13:35-37).
" அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்." (லூக்.19:41-44)
கர்த்தருடைய அன்பான பரிசுத்த சகோதரே, நம் இயேசுவின் வருகை நாமக் கிறிஸ்தவர்கள், பண்டிகை கிறிஸ்தவர்கள், இரட்சிக்கப்பட்டு பூரண பரிசுத்தத்தை அடையாத எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அறியக்கூடாத வருகையாகவே அதாவது இரகசியமாகவே இருக்கும்.
நம் நேசர் இயேசு கட்டளையிட்டது போல, "விழித்திருப்பவர்கள்" மட்டுமே அதைக் குறித்து அறிந்து கொண்டவர்களாக இருப்பார்கள்.
"அப்படியே நீங்களும் விழித்திருங்கள்: ஏனெனில், வீட்டெஜமான் சாயங் காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத்திலோ, காலையிலோ,எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்." (மாற்.13:35-37).
ஆகவே யாவரும், தேவனுடைய ஊழியக்காரரானாலும் விசுவாசிகளானாலும் விழித்திருக்கும்படி எச்சரிக்கப்படுகின்றனர். கிறிஸ்தவர்களும் விழித்திராதவர்களும் அவரைச் சந்திக்க ஆயத்தமுள்ளவர்களாயிராமல், இயேசு வந்து தம்முடையவர்களைச் சேர்த்துக் கொண்டு போய்விட்டார் என்பதையும் மிகவும் காலந்தாழ்த்தியே அறிந்து கொள்வார்கள்.
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum