கர்த்தருடைய வருகையின் பயங்கர காலம் – யோவேல்
Sat Feb 13, 2016 9:01 am
☀ இப்புத்தகம் மூல மொழியாகிய எபிரேயத்தில் “யோஹ்யேல் (Yohel)” என்றழைக்கப்படுகிறது. ☀ யோவேல் என்பதற்கு “கர்த்தரே ஆண்டவர் (Yahweh is God)” என்று அர்த்தம். ☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 29-வது புத்தகமாக வருகிறது. ☀ யூதேயாவில் ராஜாவே இல்லாத போதுதான் யோவேலின் புத்தகம் எழுதப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
☀ யோவேலைப் பற்றி நமக்கு மிகச்சிறிய அளவே தெரியும். அவர், “யோவேல், பெத்துவேலின் குமாரன்” என்று மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். ☀ “யோவேல்” என்னும் தீர்க்கதரிசியின் பெயர் ஒரே ஒரு முறை மட்டும் வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிறது. அவர் பெயரால் வழங்கப்படுகின்ற இப்புத்தகத்தில் முதல் வசனம் அவர் பெயரைக் கொண்டிருக்கிறது: “பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.” (யோவே 1:1) ☀ யூதாவின் ராஜாவாக உசியா அரியணையேறி ஒன்பது வருடங்களுக்குப் பிறகு, சுமார் கி.மு. 820-ல் யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
☀ எருசலேம், அதன் ஆலயம், ஆலய சேவையின் நுட்ப விவரங்கள் ஆகியவற்றை யோவேல் நன்றாக அறிந்திருந்ததானது அவர் இப்புத்தகத்தை எருசலேமிலிருந்து அல்லது யூதாவிலிருந்து எழுதியிருக்க வேண்டும் என காட்டுகின்றன. ☀ வெட்டுக்கிளிகளால் வரும் அழிவை ஒரு அடையாளமாக எடுத்துக்காட்டி ஜெருசலேமில் வரப்போகும் நியாயத்தீர்ப்பை இப்புத்தகம் விபரிக்கிறது. ☀ வெட்டுக்கிளிகள் நாட்டைத் தின்று அழித்ததுபோலவே இஸ்ரவேலரும் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களது நாடும் பகைவர்களின் படைகளால் அழிக்கப்படும். ☀ இதில் காணப்படும் செய்தி அக்காலத்திற்கும் அப்பால் சென்று, மனிதர் எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவரை கர்த்தர் வரச்செய்வார் என்று கூறுகிறது. இது பெந்தெகோஸ்தே நாளில் நிறைவேறியது. ☀ ஆகாய், சகரியா, மல்கியா போன்றோர் யோவேலின் காலத்துக்கு சிறிது முன்னால் வாழ்ந்த தீர்க்கதரிசிகள்.
☀ கர்த்தருடைய ஆலயம் யோவேலின் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது (யோவேல் 1:14; 2:17). 520-ஆம் வருடத்துக்குப்பின் ஆகாயும் சகரியாவும் ஆலயத்தைக்கட்டி முடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ☀ மொத்தம் 3 அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்கும் இப்புத்தகம் 73 வசனங்களை கொண்டுள்ளது. ☀ 2-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது. ☀ யோவேலின் எழுத்துநடை தெள்ளத்தெளிவாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் உள்ளது. வலியுறுத்துவதற்காக மீண்டும் மீண்டும் கூறுகிறார், கவனத்தைக் கவரும் உவமைகளைப் பயன்படுத்துகிறார். ☀ வெட்டுக்கிளிகள் ஒரு தேசமாக, ஒரு ஜனமாக, ஒரு சேனையாக வருணிக்கப்படுகின்றன. அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களைப் போலவும் அவற்றின் தோற்றம் குதிரைகளைப் போலவும், அவற்றின் இரைச்சல் போருக்கு அணிவகுத்து செல்லும் இரதங்களின் இரைச்சல் போலவும் உள்ளது.
☀ வெட்டுக்கிளி கட்டுப்பாடு பற்றிய ஒரு புத்தகம் பின்வருமாறு கூறுவதாக தி இன் டெர்பிரட்டர்ஸ் பைபிள் மேற்கோள் காட்டுகிறது: “வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பற்றி யோவேல் விவரிக்கும் அளவுக்கு நுட்பமான விதத்தில் இதுவரை வேறு யாருமே விவரித்ததில்லை.” ☀ பெந்தெகொஸ்தே நாளில் ‘தீர்க்கதரிசியாகிய யோவேலை’ குறிப்பிட்டு அவருடைய தீர்க்கதரிசனங்களில் ஒன்றை பேதுரு பொருத்தினார். பவுல் அதே தீர்க்கதரிசனத்தை மேற்கோள்காட்டி அது யூதர்களிடத்திலும் யூதரல்லாதவர்களிடத்திலும் நிறைவேறியதை விளக்கினார். (யோவே.2:28-32; அப். 2:16-21; ரோ. 10:13) ☀ அண்டை தேசங்களுக்கு எதிரான யோவேலின் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறின. மாபெரும் நகரமான தீருவை நேபுகாத்நேச்சார் முற்றுகையிட்டார். பிறகு மகா அலெக்ஸாந்தர் அந்தத் தீவுநகரத்தை முழுமையாக அழித்துப்போட்டார். அதைப்போலவே பெலிஸ்தியாவும் அழிந்தது. ஏதோமும் வனாந்தரமாயிற்று. (யோவே.3:4,19)
☀ அலையலையாய் திரண்டு வரும் பூச்சிகள் தேசத்தைப் பாழாக்குகின்றன. அவற்றிற்கு முன்னே செல்லும் அக்கினியும் அவற்றைப்பின் தொடரும் தீக்கொழுந்தும் இன்னும் முழுமையாய் அழித்துப் போடுகின்றன. எங்கும் பஞ்சம் நிலவுகிறது. சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறுகின்றன, ஏனெனில் கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் சமீபித்திருக்கிறது. அரிவாளை நீட்டி அழிவுக்காக தேசங்களைக் கூட்டிச் சேர்க்கும்படி அவர் கட்டளையிடுகிறார். எனினும், சிலர் ‘பத்திரமாய் தப்புவர்.’ (யோவே.2:32) உணர்ச்சியைக் கிளறும் இந்தச் சம்பவங்களை ஆழ்ந்து சிந்திப்பது யோவேலின் தீர்க்கதரிசனத்தை ஆர்வம் மிகுந்ததாகவும் வெகு பயனுள்ளதாகவும் ஆக்குகின்றன. ☀ கர்த்தருடைய திகிலூட்டும் நாளைப்பற்றி யோவேல் தீர்க்கதரிசனம் உரைக்கையில் கவனித்துக் கேளுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum