ஆயுள் காலம் ...
Tue Mar 19, 2013 6:06 am
பெரியவர்
ஒருவர் ஒரு கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற அழைக்கப்படிருந்தார்.
கல்லூரிக்கு சென்ற அவர் ''ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?''என்று
கேட்டார்.ஒரு மாணவன் எழுபது என்றார், இன்னொருவர் அறுபது என்றார், மற்றொரு
மாணவி ஐம்பது என்றார்.
அனைத்துமே தவறு என்று பெரியவர்
சொல்ல,சரியான விடையை அவரே சொல்லும்படி அனைத்து மாணவ, மாணவியரும் வேண்டினர்.
பெரியவர் புன் முறுவலுடன் சொன்னார்,''ஒரு மனிதனின் ஆயுட்காலம் ஒரு மூச்சு
விடும் நேரம்,'' என்று.
அனைவரும் வியப்படைந்தனர்.''மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?'' என்றனர். ''உண்மை
மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான். ஆனால் வாழ்வு என்பது மூச்சு
விடுவதில்தான் உள்ளது. ஆகவே ஒவ்வொரு கணப்பொழுதும் வாழ வேண்டும். அந்தக்
கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்.''என்றார் அந்த பெரியவர்.
ஆம்
நண்பர்களே! பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே
மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,
கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது. அதை
முழுமையாக வாழ வேண்டும்.
"...... நீங்கள் உயிர்வாழத் தேவையான
உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும்
கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும்
முக்கியமானது சரீரம். பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைப்பதோ அறுவடை
செய்வதோ களஞ்சியங்களில் சேமித்து வைப்பதோ இல்லை. ஆனால் உங்கள் பரலோகப் பிதா
அவைகளுக்கு உணவளிக்கிறார். பறவைகளை காட்டிலும் நீங்கள் மிகுந்த
முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என நீங்கள் அறிவீர்கள். கவலைப்படுவதினால்
உங்களால் உங்கள் வாழ்நாளைக் கூட்ட இயலாது." மத்தேயு 6:25,26,27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum