ஆயில் குறைத்தால் ஆயுள் கூடும்!
Wed Aug 28, 2013 8:39 am
மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூலகாரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., - 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும்.
எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 - 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.
அதிக எடை, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன.
பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய், கடலெண்ணெய் போன்றவற்றை 15 - 20 மி.லி., வரை பயன்படுத்தலாம்.
திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும். உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில் படிகிறது. இதுதான் தொந்தி, உடல் எடை கூடுவதற்கு முன் தொந்தி வரும். தொந்தியிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது.
வளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. கலோரி சாப்பிட்டால் ஒரு கி. மீ., நடக்க வேண்டும். 500 கலோரி சாப்பிட்டால், 10 கி.மீ., நடக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளில் கலோரி அதிகம் (400 - 600).
எனவே நடை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக கலோரி உணவுகளை உண்பது பிரச்னை. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாயும், ரத்தமும் பாதித்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.
சைவ உணவு உண்பவர்கள் தேங்காய் பால், தயிர் அதிகம் பயன்படுத்தக் கூடாது.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் கலோரிகள்:
இரண்டு சமோசா 256,
இரண்டு போண்டா 283,
மிக்ஷர் 100 கிராம் 520,
பகோடா 100 கிராம் 474,
இரண்டு வறுத்த மீன் 256,
இரண்டு வடை 243,
முறுக்கு 100 கிராம் 529,
உருளை சிப்ஸ் 100 கிராம் 569, சில்லி சிக்கன் 100 கிராம் 589 கலோரிகள்.
நமது ரத்தத்தில் கொழுப்பு 200 மி.கி., கீழ், டி.ஜி.எல்., கொலஸ்ட்ரால் 150, எல்.டி.எல்., 100க்கு கீழ், எச்.டி.எல்.,(நல்ல கொலஸ்ட்ரால்) ஆண்களுக்கு 40, பெண்களுக்கு 50க்கு மேல், வி.எல்.டி.எல்., கொழுப்பு 30க்கு கீழ்.
மேலும் யாருக்கு கொலஸ்ட்ரால் இருக்குமென, உருவத்தை வைத்து கூற முடியாது. சாதாரணமாக பலர் வாகனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை கூட உடலுக்கு கொடுப்பது இல்லை. இதில் சர்க்கரை உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியம்.
கோவை டயபடிஸ் பவுண்டேஷனில் வருடத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தி, ஒரு வருடம் சிகிச்சை பெற்று செலவை குறைக்கலாம். உணவு முறை உடற்பயிற்சியை முதன்மைப்படுத்திய சிகிச்சை சி.டி.எப்., ரிசர்ட் மருத்துவமனையில் செய்யப்படுகிறது. சர்க்கரையை நீக்க மூன்று முதல் ஐந்து நாள் அனுபவ பயிற்சி வழங்கப்படுகிறது.
- டாக்டர் சேகர்,
கோயமுத்தூர் டயபடிஸ் பவுண்டேஷன்,
ரிசர்ட் மருத்துவமனை, மருதமலை, கோவை.
செல்: 93626-22728, 93626-22722.
source: dinamalar

Permissions in this forum:
You cannot reply to topics in this forum