வீட்டில் யாரேனும் சர்க்கரை நோயினால் அவஸ்த்தையா?
Tue Sep 10, 2013 7:46 am
வீட்டில் யாரேனும் சர்க்கரை நோயினால் அவஸ்த்தையா?
எப்படி விரட்டி அடிப்பது என்பதை பார்க்கலாம்.....தொடர்ந்து படியுங்கள்.
1. காலையில் எழுந்ததும் ஆயில் புல்லிங் (நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்) 15 நிமிடங்கள் செய்து விட்டு, ஒரு நெல்லிக்காய், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஜூஸ் எடுத்து குடிக்க வேண்டும்...
2. ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து அதை காலையில் மென்று சாப்பிட்டு அந்த நீரை குடிக்க வேண்டும். (வயதானவர்கள் வெந்தயம் முளை கட்டி காய வைத்து பவுடராக்கி வைத்து கொண்டு 1 ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம்.)
3. சிறுகுறிஞ்சான் பொடி, சீந்தில்கொடி பொடி, நாவல் பொடி, நெல்லி பொடி, ஆவாரம்பூ பொடி இதை முறையே 5௦ கிராம் அளவு வாங்கி கலந்து வைத்துக்கொண்டு மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு 15 நிமிடங்கள் முன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
4. காலை உணவாக ஓட்ஸ், சிவப்பு அவல், கோதுமை ரவை, மக்காச்சோள ரவை, கம்பு இட்லி (கம்பு, வரகரிசி, கைக்குத்தல் அரிசி, கருப்பு உளுந்து ஆகியவற்றை 4 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்) அரிசி மாவால் ஆன இட்லி, தோசையை தவிர்த்து மேற்சொன்னவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
5. காலை 11 மணி, மாலை 3 மணி இந்த நேரங்களில் (பசித்தால் மட்டுமே) மா, பலா, வாழை தவிர்த்து கொய்யா, மாதுளை, அன்னாசி, பப்பாளி, வெள்ளரி, சாத்துக்குடி, நாவல் என பழங்களையும், முளை கட்டிய தானியங்களான சோளம், காராமணி, நிலக்கடலை, கொள்ளு, கருப்பு சுண்டல், பச்சைப்பயறு என பழங்களையும், முளை கட்டிய தானிய வகைகளையும் அளவோடு உண்ணலாம். பால் கலந்த காபி, டீக்கு பதில் சுக்கு காபி, கிரீன் டீ குடிக்கலாம்.
6. மதிய உணவாக ஒரு கப் சாதம், பிஞ்சு அவரை, பீர்க்கங்காய், வாழைக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், நூல்கோல், வாழைப்பூ, கீரைவைகைகள் இதில் செய்யப்பட குழம்பு, பொரியல், ரசம், மோர் என்று இருக்க வேண்டும்.
7. இரவு உணவாக கோதுமை கலவை மாவில் (கோதுமை, கொள்ளு, பச்சைபயறு, கருப்புச்சுண்டல் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைத்து காய வைத்து அரைத்த மாவு) செய்த தோசை (அ) சப்பாத்தி இரண்டு சாப்பிடலாம்..
8. தாகம் எடுக்கும் போது எல்லாம் சீரகம் (அ) வெந்தய நீர் அருந்தலாம்..
9. எந்த காரணத்தைக் கொண்டும் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சத்துணவு மாவோ (அ) குந்தைகளுக்கு என வீட்டில் அரைக்கும் சத்து மாவிலோ பால் கலந்து கஞ்சியாக குடிக்கவே கூடாது. பால், சர்க்கரை, மைதா உணவு அறவே கூடாது. இதனால் நோயின் தன்மை அதிகமாகுமே தவிர குறையாது....
வாழ்க்கை முறையை மேற்கண்டவாறு சிறிது மாற்றி அமைத்தால் சர்க்கரை என்னும் இந்த நோய் அறவே ஒழியும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.
நன்றி:Dr.Gayatri Senthilkumar, B.S.M.S.,Pondicherry

Permissions in this forum:
You cannot reply to topics in this forum