வீட்டில் உள்ள தரை பளிச்சிட! ! ! !
Sat Sep 14, 2013 6:31 pm
கீறல்கள் மறைய...
தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.
* வினைல் தளம்...
வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.
* காங்கிரீட் தளம்...
சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு,ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.
* மார்பிள் தளம்...
பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.
* எண்ணை பிசுக்குளை நீக்க...
சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்.
நன்றி: முக்கிய செய்திகள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum