வீட்டில் இருந்தே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்
Mon Sep 16, 2013 8:14 pm
தற்போது இளம் தலைமுறையினருக்கும் இரத்த அழுத்தம் அதிகம் பாதிக்கிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இரத்த அழுத்தம் பலரின் வாழ்வில் குடிகொண்டுள்ளது.
வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை கொண்டு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
* 100 கிராம் முலாம்பழ விதைகளுடன், 100 கிராம் கசகசாவை சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 1 தேக்கரண்டி பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிராம்பை மென்று தின்று, வாயைக் கழுவ வேண்டும். மென்று தின்ன முடியாதவர்கள் தண்ணீர் சேர்த்து விழுங்கலாம்.
* 25-30 கறிவேப்பிலையுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, சாறெடுத்து, வடிகட்டி காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். சுவை பிடிக்காதவர்கள் சிறிது எலுமிச்சை சாறையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
* கொத்தமல்லி அல்லது வெந்தய இலைகளையும் சாறெடுத்துப் பருகலாம். ஒருவர் தன் உடலுக்கு எது ஏற்றது என்று பரிசோதித்துப் பார்த்துப் பருக வேண்டும்.
* 1 தேக்கரண்டி தேனுடன், 1 தேக்கரண்டி இஞ்சி சாறு, 1 தேக்கரண்டி சீரகப்பொடி ஆகியவயற்றைக் கலந்து, காலை, மாலை இருவேளைகளில் அருந்தலாம்.
தன்னுடைய உடலுக்கு எது ஏற்றதென்று தெரிந்து கொண்டு அதை தினமும் பயன்படுத்தி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
நன்றி: ரசிகன்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum