ஆவிக்குரிய புத்தகம் எழுதுவோர் கவனிக்க...
Fri Aug 02, 2013 11:02 pm
அன்னை தெரேசா, ஜார்ஜ் முல்லர் வாழ்க்கை வரலாறுகளை தமிழில் அடுத்தடுத்து புத்தகங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்னை தெரேசா புத்தகத்தை எழுதியவர் அஜயன்பாலா என்ற கிறிஸ்தவரல்லாத எழுத்தாளர். ஜார்ஜ் முல்லர் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பவர் ஒரு கிறிஸ்தவர். அன்னை தெரேசாவின் வாழ்க்கை, தேவனோடும் மக்களோடும் அவருக்கிருந்த உறவு, அவரது குணாதிசயங்கள், செய்த ஊழியம் ஆகியவை அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அன்னையை அருகிலிருந்து பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. அந்த நூலைப் படிக்கும் யாவரும் உலுக்கப்படுவது உறுதி.
ஆனால் ஜார்ஜ் முல்லர் வாழ்க்கை வரலாற்றுப். புத்தகத்தை படிக்கத் துவங்கிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முழுக்க முழுக்க புள்ளி விவரங்கள், எந்தெந்த புராஜெக்டுக்கு எவ்வளவு பணம் எங்கிருந்து அற்புதவிதமாக வந்தது என்ற விவரங்களைத் தவிர வேறெதுவும் உருப்படியாக இல்லை. ஆயிரக்கணக்கான ஆதரவற்ற பிள்ளைகளை காக்கும் பாரம் அவருக்கு எப்படி உருவானது, அந்தப் பிள்ளைகளுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன? ஒரு கிறிஸ்தவன் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய குணாதிசயங்கள் என்ன (விசுவாசம் தவிர) போன்ற எதுவுமே இல்லை. ஜார்ஜ் முல்லருடைய ஆடிட்டிங் ரிப்போர்ட் மாதிரியிருந்தது. பாதிக்குமேல் என்னால் படிக்க முடியவில்லை.
ஊழியத்துக்கான பொருளாதார தேவைகளை தேவன் சந்திப்பார் என்பதைத் தவிர ஆயிரக்கணக்கான அநாதைகளுக்கு தகப்பனாக விளங்கிய அந்த மாமனிதரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது வேறெதுவுமே இல்லையா? பொருளாதார ஆசீர்வாதங்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைவிட அவ்வளவு மேன்மையானவைகளா என்ன?
மிஷினரிகளின் வாழ்க்கை வரலாறுகளை எழுதும் கிறிஸ்தவ எழுத்தாளர்கள் தங்கள் அணுகுமுறைகளை சற்று மாற்றிக்கொண்டால் நலமாக இருக்கும். புள்ளிவிவரங்களையும் வாய்க்குள் நுழையாது பெயர்களையும் விட அவர்கள் கடந்து போன பாதையின் அனுபவங்களை வாசிப்பவர் மனதில் பதியச்செய்வதே முதன்மையானது. புள்ளிவிவரங்களைப் படிச்சு நாங்க என்ன பரீட்சையா எழுதப்போறோம்?
நன்றி: விஜயகுமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum