எது ஆவிக்குரிய சபை?
Sat Apr 16, 2016 3:47 pm
இன்றைக்கு பொதுவாக எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி, நீங்கள் போவது ஆவிக்குரிய சபையா, என்பதுதான், அப்படியானால் ஆவிக்குரிய சபை என்றால் என்ன என்பதை வேதத்திலிருந்தே கற்றுக்கொள்வது சாலச்சிறந்தது.
ஆவிக்குரிய சபை என்பது கட்டிடத்தில் அல்ல விசுவாசிகளைக்கொண்டே பார்க்கப்படுகிறது, எந்த சபையில் ஆவிக்குரியவர்கள் இருக்கிறார்களோ அந்த சபையே ஆவிக்குரிய சபையாகும். அப்படியானால் யார் ஆவிக்குரியவர்கள்?
ஆவிக்குரியவர்கள் யார் என்பதே இன்றைக்கு நாம் கேட்கவேண்டிய கேள்வி, இதற்கு பதில் காண ஆவிக்குரியர் என்ற பதத்திற்கு எதிர்பதம் என்ன என்பதை ஆராய்வதுமூலம் காணலாம். “ஆவிக்குரியவர்” என்பதின் எதிர்பதம் “மாம்சத்துக்குரியவர்”, இதை கொண்டு ஆவிக்குரியவர்கள் யார் என்பதை அறிவோம், இதற்கு 1கொரி 3:1-3 வசன்ங்களைப் பார்ப்போம்
“மேலும் சகோதரகளே உங்களை ஆவிக்குரியவர்கள் என்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல் , மாம்சத்துக்குரியவர்கள் என்று எண்ணி பேசவேண்டியதாயிற்று.
பொறாமையும், வாக்குவாதங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்கள் அல்லவா!”
இந்த வசனத்தின் அடிப்படையில் மாம்சத்துக்குரியவர்கள் யார் என்றால், மாம்சீக குணாதிசயத்தை பிரதிபலிப்பவர்கள், அப்படிப்போல ஆவிக்குரியவர்கள் யார் என்றால், ஆவியின் “குணாதிசயத்தை” பிரதிபலிப்பவர்கள் என்பது புலப்படுகிறதல்லவா!
இன்னும் விஷயம் இருக்கிறது, கொரிந்து சபையாரை பார்த்து பவுல் நீங்கள் ஆவிக்குரியவர்கள் அல்ல மாம்சத்துக்குரியவர்கள் என்று சொன்னார், ஆனால் பாருங்கள் கொரிந்திய சபையில் ஆவிக்குரிய எல்லா வரங்களும் இருந்தன, அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள், அந்நியபாஷை பேசினார்கள், அற்புதம் அடையாளங்கள் செய்தார்கள், இப்படி அவர்களிடத்தில் இல்லாத வரங்களே இல்லை எனலாம், ஆதாரம், 1கொரி 1:7ல்,
“நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதிருக்கிறீர்கள்” என்று பவுல் சொல்லுகிறார். ஆனாலும் கொரிந்தியர்களுக்கு கிடைத்த பட்டம் மாம்சத்துக்குரியவர்களே!
ஆக வரத்தை பெற்றவர்கள் எல்லாம் ஆவிக்குரியவர்கள் இல்லை, ஆவியின் சுபாவத்தை பெற்றவர்களே ஆவிக்குரியவர்கள் என்பது தெளிவாகிறது. இந்த சத்தியம் தெரியாமல் சபையில் அந்நியபாஷை பேசுவதையும், தீர்க்கதரிசனம் சொல்லுவதையும், அற்புத அடையாளம் நடப்பதையும், இன்னும் எவ்வளவு உற்சாகமாய் பாடல் பாடினோம், ஆவியிலே நிறைந்து கைதட்டி ஆட்டம் ஆடினோம் என்பதையும், அளவுகோலாய் வைத்து இதுதான் ஆவிக்குரிய சபை என்று தீர்ப்பளிப்பது வேதனையளிக்கிறது, இத்தனை அம்சங்களிருந்த கொரிந்து சபையை வேதம் ஆவிக்குரிய சபையாக அங்கீகரிக்கவில்லை என்பதை சீர்தூக்கிப்பார்க்க வேண்டுகிறேன். (1 Cor 3:1...)
ஆக ஆவியானவரின் சுபாவத்தை வெளிப்படுத்தாத எந்த சபையும் ஆவிக்குரிய சபை இல்லை, ஆவியானவரின் சுபாவம் என்பது ஆவியின் கனியே! கள்ள தீர்க்கதரிசிகளை மட்டும் "கனி"யினால் கண்டறியச் சொல்லவில்லை, நல்ல சபைகளையும் "கனி"யினால் தான் அறியவேண்டும், அறியமுடியும் ....!
சாலமன் திருப்பூர்.....
THEOS’ GOSPEL HALL MINISTRIES

Permissions in this forum:
You cannot reply to topics in this forum