பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஆவிக்குரிய ஜீவியம்:-
Thu May 22, 2014 6:05 pm
1. பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஆவிக்குரிய ஜீவியம்:-
அன்பான தேவனுடைய பிள்ளைகளே, சியோனாகிய நித்தியத்தை நாம் சுதந்தரித்துக்கொள்ள, இவ்வுலகத்தில் நமக்கு உண்டான யாவற்றையும் வெறுத்து விடுகிறபோது கிறிஸ்துவினுடைய சீஷனும், அவருடைய சுதந்திரவாளியுமாகி மறுமையில் சியோனின் நித்தியவாசியாகி விடுகிறார்கள்."உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.(லூக்14:33) "நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்."
(அப்.7:3; மத. 19:29; யோவான். 12:25; 1யோவான்.2:15; யாக்.4:4; லூக்.12:33, 34; மாற்கு.10:21)
2. மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்கப்பட்டவர்கள்:-
அன்பான தேவனுடைய பிள்ளைகளே, இவர்கள் யார்? "அவர் (பிதா) சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்." (யாக்.1:18). " நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்.அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்." (யோவா.17:6-11) "
தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க," (யோவா.10:35; ரோமர்.8:28-30; யோவான்.15:19; யோவான்.10:27-29; 2தீமோ.1:9; 1கொரி.8:6; எபேசி.2:10; 2தெச.2:13; 1பேதுரு. 5:10; ஏசாயா.43:7, 21; ரோமர்.8:23; எபேசி.1:6; எபிரேயர்.2:11-13; எபிரேயர்.12:23) இவ்வசனங்களுக்குட்பட்டவர்கள் தேவனால் தேவனுக்கென்றும், கிறிஸ்துவுக்கு சகோதரர்களாகவும், ஆவியின் முதற்பலனானவர்களாகிய தாங்கள் தேவசாயல், தேவரூபம், தேவ மகிமை, மறுரூபம், ஆகியவைகளை அடைந்து கொண்டவர்களாகவும் பூமியில் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாய் வாழ சத்திய வசனத்தினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள். "பரலோகத்தில் பேரழுதியிருக்கிற முதற்பேறானவர்களாகிய" இவர்களையே பூமியில் சர்வசங்கமாகிய சபையில் (எபிரேயர்.12:23) இரட்சிக்கப்பட்டவர்களாய் ஆவியானவரால் சபையில் சேர்க்கப்படுகிறார்கள். (அப்.2:47) மேற்காணும் உன்னதமான தேவனுக்கடுத்த ஆவிக்குரிய மேன்மையான நிலைகளை அணிந்து கொண்டவர்களே தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலன்களாய் மீட்கப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.
3. ஸ்திரீகளால் தங்களைக்கறைப்படுத்தாதவர்கள் இவர்களே:-
அன்பான தேவனுடைய பிள்ளைகளே, இவர்கள் யார்? சிலர் போதிக்கிறபடி விவாகம் பண்ணாதிருக்கிற விரத்தரானவர்கள் தான் இவர்கள் என்கிறார்கள். அப்படியானால் ஆண்டவர் மனித சிருஷ்டிப்பின் நோக்கமாக " பின்னை ஏன் ஒருவனைப் (ஆதாமை) படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே." (மல்கியா.2:15) என்கிறார். "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்கிறது." (எபிரேயர்.13:4) "கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்." (மல்கியா.2:14) "தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்." (ஆதி.2:22) " விவாகம்பண்ணிக்கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்." (1கொரி.7:38) மேற்காணும் கர்த்தருடைய வசனங்களெல்லாம் மனிதன் விவாகம் செய்து வாழ்பவனாகயிருப்பதையே வலியுறுத்துகிறது. ஏதேனிலும் (ஆதி.2:22-24) கானா ஊரிலும் (யோவான்.2:2-11) நடந்த விவாகங்களில் பங்கடைந்து அவர்களை ஆசீர்வதித்து கனப்படுத்தினார் என்பதை அன்பின் ஆவியானவர் எழுதிவைத்துள்ளார்.
கர்த்தருடைய வேதம் இப்படியாய் போதித்துக் கொண்டிருக்க, " பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யர்கள்... விவாகம் பண்ணாதிருக்கவும் என்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்." (1தீமோ.4:1, 2) என்ற வசனத்தின்படி, விவாகமானது இரட்சிக்கப்பட்டவர்களை கறைப்படுத்துகிறதாய் உள்ளது என்று கூறுகிறார்கள்.
கர்த்தருடைய ஆவியானவர் "ஸ்திரீகளால்" என்றே எழுதியுள்ளார். ஸதிரீ என்று கூறாமல் ஸ்திரீகளால் என்று கூறுவதால், பல ஸ்திரீகளை விவாகம் பண்ணுவது, பல பெண்களோடு மாம்ச இச்சையின்படியான தொடர்புடையவர்களாய் விபசார, அசுசியான நிலைகளை உடையவர்களே கறைப்படுத்தப்பட்டவர்கள் என்றே ஆவியானவர் போதிக்கிறார். "விவாகமஞ்சம் (விவாக வாழ்க்கை) அசுசிப்படாததாயுமிருப்பதாக;வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.(எபி13:4) என்ற வேதவசனம் மேற்காணும் தேவனுடைய எச்சரிப்பை உணர்த்துகிறது.
"வேசி மார்க்கத்தார், விபச்சாரகாரர்... தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." (1கொரி.6:9,10) "விபச்சாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாது." (1கொரி.5:9, 10,11; வெளி.22:15; மத்தேயு.5:28, 32; மத்தேயு.19:9) வேசித்தனம், விபச்சாரத்தனம் ஆகியவைகளை செய்பவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள் என்பதினால், இவைகளுக்கு விலகி தங்களை ஸ்திரீகளால் கறைப்படுத்திக் கொள்ளாதவர்கள் மட்டுமே சீயோனாகிய நித்தியத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள்.
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum