துதியின் புத்தகம் – சங்கீதம்
Sat Feb 13, 2016 9:16 am
புத்தகம்” மற்றும் “சங்கீத பிரிவுகள்” ஆகிய முன்னைய பதிவுகளைக்காட்டிலும் சற்று அதிகமான தகவல்கள் தேடித் தொகுக்கப்பட்டுள்ளது.₹₹₹ ☀ எபிரேய மொழியில் “தெஹில்லீம்” (Tehillim) என்று அழைப்பர். இதன் பொருள் “துதியின் பாடல்கள்” என்பதாகும்.
☀ கிரேக்க மொழிப்பெயர்ப்பான செப்தஜ்வெந்தில் இதனை “ப்சால்மொய்” (Psalmoi) என்று அழைப்பர். இதன் பொருள் “இசைக் கருவிகளுடன் பாடப்பட்ட பாடல்” என்பதாகும். ☀ இலத்தீன் மொழியில் இதன் தலைப்பு “லிபெர் ப் சால் மோரம்” (Liber Psalmorum) என்பதாகும். இதன் பொருள் சங்கீதங்களின் புத்தகம் என்பதே.
☀ சங்கீதங்கள் ஏறக்குறைய கி.மு 1500 முதல் கி.மு.450 வரை உள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டதாகும். ☀ இவைகள் எழுதப்பட்ட இடம், இஸ்ரவேல், பாலஸ்தீணா மற்றும் பாபிலோன் ஆகும். ☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 19-வது புத்தகமாக வருகிறது. ☀ சங்கீத புத்தகத்தில் அடங்கியுள்ள அதிகாரங்களை வரிசைப்படுத்துவதில் சில வேறுபாடுகள் உள்ளன. மூல மொழியாகிய எபிரேய வேதாகம வரிசை முறையிலிருந்து கிரேக்க மொழிபெயர்ப்பு வரிசை முறை மாறுபடுகின்றது. நம்முடைய வேதாகமத்திலே பெரும்பாலும் எபிரேய வரிசைமுறையையே கடைப்பிடித்துள்ளன.
☀ சங்கீதப் புத்தகம் ஐந்து பாகங்கள் அல்லது பிரிவுகளாக காணப்படுகின்றது. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஸ்தோத்திர வாழ்த்தோடு ஆமென், ஆமென் என்ற வார்த்தைகள் வருவதைப் பார்க்கலாம். ☀ ஒவ்வொரு பிரிவிலுமுள்ள கடைசி சங்கீதத்தின் இரண்டு வசனங்களை எடுத்து படியுங்கள். இந்த 5 பாகங்களும் வேதாகமத்தின் முதல் 5 புத்தகங்களை போல காணப்படுகின்றன. »1 - 41 (படைப்பு) »42 - 72 (மீட்பு) »73 - 89 (பரிசுத்தம்) »90 - 106 (அலைந்து திரிதல்) »107 - 150 (தேவனைப் போற்றுதல்) ☀ தமிழ் வேதத்தில் 150 சங்கீதங்களும் 2026 வசனங்களும் உள்ளன.
☀ 119-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும் 117-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது. ☀ “கர்த்தர்” என்று சங்கீத புத்தகத்தில் மட்டும் 650-க்கும் மேலதிகமாக வருகின்றது. ☀ சங்கீத புத்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களைக் கொண்டுள்ளது – சங் 15,70,93,100,125. ☀ தாவீது 73 சங்கீதங்களையும், மோசே 1-ம், சாலமோன் 2-ம், ஆகசாப் 12-ம், ஏமான் 1-ம், ஏத்தான் 1-ம், கோராகின் புத்திரர்கள் 10 சங்கீதங்களையும் எழுதி உள்ளனர். மீதமுள்ள 50 சங்கீதங்களின் ஆசிரியர்கள் யாரென்று தெரியவில்லை.
☀ சங்கீதங்கள் 2 மற்றும் 95 தாவீதால் எழுதப்பட்டதாக இருக்கும் என்கிற (அப் 4:25, எபி 4:7, ஆகிய வசனங்களின் அடிப்படையில்) கருத்து வெகு நாளாகவே உள்ளது. ☀ “சேலா” என்கிற வார்த்தை சங்கீத புத்தகத்தில் 71 முறையும் ஆபகூக் புத்தகத்தில் 3 முறையும் வருகிறது. ☀ “சேலா” என்கிற வார்த்தை, வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியை மறுபடியும் ஒரு முறை பாடவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
☀ சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம். ☀ சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன. ☀ சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன. ☀ புதிய ஏற்பாட்டில் மட்டும் 36 தடவை சங்கீதங்களை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
☀ சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும். ☀ தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும். ☀ சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் உள்ளன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum