கர்நாடக சங்கீதம் - சுருதி, நாதம், ஒலி
Mon Mar 16, 2015 10:33 am
சுருதி
பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலி சுருதியெனப்படும். ஒரு இராகத்திற்கு இருக்க வேண்டிய சுரஸ்தானங்களில் எவையேனும் வேண்டிய பிராமணத்திற்கு அமையாது கூடியோ, குறைந்தோ வேறாக நிற்குமாயின் சுருதி சேராத பாடல் என்கின்றோம். இப்பாடலில் கேட்பவர்களுக்கு வெறுப்பையும்,விரக்தியையும் உண்டு பண்ணும். சுருதி, சட்சமம், பஞ்சமம் ஆகிய சுரங்களில் செயற்கையில் உண்டு பண்ணப்படுகிறது. றீட்ஸ் (Reeds) வாத்தியங்களில் ஆதார சட்சமம், மத்தியஸ்தாய் பஞ்சமம், மேல் ஸ்தாய் சட்சமம் ஆகிய ஸ்வரங்களையே சுருதிக்கு வைக்கப்படும். இதனையே பஞ்சம் சுருதி என்பர்.
இசை உலகில் சுருதிக்கு தாயகமாம் தன்மை அளிக்கப்பட்டுள்ளது. ‘சுருதி மாதா’ ‘லயம் பிதா’ என்னும் வாக்கியம் வெளிப்படுத்துகிறது. தாய் இல்லாமல் எப்படி சேய் பிறப்பதில்லையோ, அப்படியே சுருதி இல்லாமல் இசை பிறப்பதில்லை. அப்பியாச கானம் எனப்படும் ஆரம்பப் பாடகாலம் தொட்டு சுருதியுடன் சேர்ந்து பாடிப்டிழகுவோர் சிறந்த இசை ஞானிகளாவர் என்பதில் சற்று ஐயமுமில்லை.
சுருதிக்குச் சுருதி வாத்தியங்கள் பல உபயோகிக்ப்பட்டபோதிலும் தம்புராச் சுருதியே மிகச் சிறந்ததாகும். சுத்தமாக சுருதிச் சேர்க்கப்பட்ட தம்புராவை மீட்டிக் கொண்டே இருந்தால் இவ்வுலகில் வேறெதுவுமே வேண்டியதில்லை என்பது போன்ற ஒருவகை உணர்வு உண்டாகும்.
ஹார்மோனியம் (Harmoniam) த்திலுள்ள வெள்ளைக்கட்டைகளை முறையே 1,2,3,4,5,6 கட்டைச் சுருதிகள் எனவும், கறுப்புக் கட்டைகளை முறையே 1½ , 2½ , 3½ , 4½ , 5½ , 6½ எனவும் கொள்ளவும். முதலாவது வெள்ளைக் கட்டையைச் சட்சமமாக வைத்துப் பாடுவோமானால் ஒரு கட்டைச் சுருதியெனவும், இரண்டாவது வெள்ளைக் கட்டையைச் சட்சமமாக வைத்துப் பாடுவோமானால் இரண்டு கட்டைச் சுருதி எனவும் கொள்ளவும்.
சிறுவர்களும், பெண்களும் சாதாரணமாக 4 தொடக்கம் 5½ , 6 கட்டை வரையில் பாடக்கூடியவாறு குரல் வளம் அமைந்திருக்கும். வளர்ந்த ஆண்களில் சிலரால் மட்டுமே இச்சுருதியால் பாடமுடியும். இவர்களின் சாதாரண சுருதி ஒரு கட்டை தொடக்கம் 2, 2½ வரையிலாகும்.
ஒரு கட்டைக்கு குறைந்த சாரீர வளம் உள்ளவர்களும் உளர். கூடிய சுருதியிற் பாடுபவர்கள் திறமை மிக்கவர்களென்றோ, குறைந்த சுருதியில் பாடுபவர்கள் திறமை அற்றவர்களென்றோ பொருள் கொள்ளலாகாது. இது அவரவர் குரல் வளத்தின் இயற்கை அமைப்பையும், உடல் நிலையையும் பொறுத்ததாகும்.
சுருதியில் கட்டை என்னும் சொல் ஹார்மோனியத்தில் உள்ள கட்டைக ளையே குறிக்கும்.
நாதம்:
இசைக் கலைக்கு மூலாதாரமாய் விளங்குவது நாதமாகும். நாதம், ஒலி, சப்தம் ஆகிய பதங்கள் ஒன்றிற்கொன்று பொருள் நிலையில் வேறுபாடுடையன வாகும்.
ஓலிக்கு காரணமாய் இருக்கும் துடிப்புக்கள் ஒழுங்குப்படுத்தப்படுமானால் அத்துடிப்புக்கள் செவிக்கு இனிமையைக் கொடுக்கும். இவ்வினிமையான ஒலிகளையே நாதமென்பர். ஓலி அலைகள் ஒழுங்கீனமாக எழுமானால் அவை வெறும் “சப்தம்” எனப்படும். ஓலி அலைகள் ஒழுங்குபடுத்தப்படுவதனாலேயே இசை பிறக்கின்றது. எனக் கூறின் அது மிகையாகாது. நமது வாழ்க்கையில் பழக்கவழக்கங்களும், கருமங்களும் ஒழுங்குபடுத்தமானால்வாழ்க்கையே சிறப்படையும். இவ்வாறே ஒலித்துடிப்பக்கள் ஒழுங்குபடுத்தப்படுமானால் அது வெறும் ஒலியாகவோ, சப்தமாகவோ இராது. நாதமெனும் பெயரைப் பெற்று விடும்.
இந்த நாதம் ஆகநாதம், அனாக நாதம் என இரு வகைப்படுமென்பர். ஆகநாதம் சாதாரண மககளால் உணரக்கூடியதென்றும், அனாகநாதம் யோகிகளால் மட்டும் உணரக்கூடியது என்றும் நாத ஆராய்வினர் கூறி வைத்தனர்.
ஒலி
[size]
நம் வாழ்வில் அன்றாடம் பல வகையான ஒலிகளைக் கேட்கின்றோம். அவற்றுள் சில கேட்பதற்கு இனிமையாகவும், சில கேட்பதற்கு இனிமையற்றதாகவும் உள்ளன. ஒலியின் நயம், நயமற்ற தன்மை, ஒலி எழுங்காரணம், அவை பரவும் வகை ஆகியவற்றைச் சிறிது ஆராய்வோம்.
[/size][size]
நாம் வானவெளியில் விடும் பட்டடங்கள் சிலவற்றிற்கு விண்பூட்டுகின்றோம். விண்ணுடன் பொருத்தப்பட்டுள்ள அதன் ஒரு பகுதியாகிய நாரிலே காற்றினால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. அவ்வதிர்வுகளே ஒலிக்குக் காரணமாய் அமைகின்றன. பட்டத்தை இறக்கிக் காற்று வீசாத இடத்தில் வைப்போமானால் விண்ணிலிருந்து ஒலி உண்டாகாமையையும் கான்கின்றோம். விண்ணில் காற்று உரமாகப் பிடிக்க வைத்து அதில் எழும் துடிப்புக்களே சப்தத்திற்கு காரணம் என்பதையும், துடிப்புக்களை கைவிரல்களினால் தடுத்து நிறுத்தியவிடத்து சப்தம் எழாதிருத்தலையும் நாம் கண்டுணரலாம்.
[/size][size]
துவிச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட மணியினை அடித்தததும் அதிலிருந்து எழும் அதிர்வுகளே ஒலிக்கு மூலாதாரம் என்பதனை நாம் அனுபவத்தால் உணர்ந்து கொள்ள முடியும்.
[/size]
இசைக்கலை
" ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாளென் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்."
இப்பாடலில் இருந்து நம் முன்னோர் கலைகளை அறுபத்துநான்கெனப் பகுத்துள்ளனர் என்பதனை அறிகின்றோம். இக்கலைகளை சாதாரண கலைகள் என்றும், நுண்கலைகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம் அவற்றுள் சங்கீதம், நடனம், சித்திரம், சிற்பம் போன்றவை நுண்கலைகளுள் அடங்கும். இக்கலைகள் உள்ளத்தில் ஒருவகை உணர்வை உண்டுபண்ணி இன்பமளிக்க வல்லவையாகும்.
இக்கலைகளுள் இசைக்கலை மிக உன்னதமமான உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. கேட்பவரின் உள்ளத்தை இசைவிப்பதால் இக்கலைக்கு இசைக்கலையெனப் பண்டையோர் பெயர் வைத்தமை சாலவும் பொருந்தும். ஏனைய கலைகளை கற்றறிந்தவர்களும் இசையை கண்டும், கேட்டும் அனுபவிக்க முடியும். இசைக்கலை ஒன்றினையே கற்றோர், கல்லாதோர் என எவ்வித வேறுபாடுமின்றி அனுபவிக்க முடியும்.
மானிடரல்லாத பல உயிரினங்களும் பச்சிளம் பாலகர்களும் பாட்டின் பொருள் உணர்ந்து நயப்பதில்லை. பாடலின் ஒலி நயத்தைக் கேட்டே நயக்கின்றனர். மொழி எதுவாக இருந்தபோதிலும் அம்மொழியினரின் இசை கேட்டு நயக்க முடியும். இதற்கு எடுத்துக் காட்டாக தியாகராஜஸ்வாமிகளின் தெலுங்கு உருப்படிகள் யாவற்றையும் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் தென்னிந்திய மக்கள் எல்லோரும் கேட்டு மகிழ்கின்றனர். இருந்தும் இசை கற்கும் சிறுவர்களாகிய நாம் முதலில் சிறிய பாடல், நாட்டுப்பாடல், வர்ணம் ஆகிய பாடல்களை தழிழ் பாடல்களாக கற்றுக் கொள்வது இலகுவாகவும், நன்மை தருவதாகவும் இருக்கும்.
இக்கலைகளுள் இசைக்கலை மிக உன்னதமமான உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. கேட்பவரின் உள்ளத்தை இசைவிப்பதால் இக்கலைக்கு இசைக்கலையெனப் பண்டையோர் பெயர் வைத்தமை சாலவும் பொருந்தும். ஏனைய கலைகளை கற்றறிந்தவர்களும் இசையை கண்டும், கேட்டும் அனுபவிக்க முடியும். இசைக்கலை ஒன்றினையே கற்றோர், கல்லாதோர் என எவ்வித வேறுபாடுமின்றி அனுபவிக்க முடியும்.
மானிடரல்லாத பல உயிரினங்களும் பச்சிளம் பாலகர்களும் பாட்டின் பொருள் உணர்ந்து நயப்பதில்லை. பாடலின் ஒலி நயத்தைக் கேட்டே நயக்கின்றனர். மொழி எதுவாக இருந்தபோதிலும் அம்மொழியினரின் இசை கேட்டு நயக்க முடியும். இதற்கு எடுத்துக் காட்டாக தியாகராஜஸ்வாமிகளின் தெலுங்கு உருப்படிகள் யாவற்றையும் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் தென்னிந்திய மக்கள் எல்லோரும் கேட்டு மகிழ்கின்றனர். இருந்தும் இசை கற்கும் சிறுவர்களாகிய நாம் முதலில் சிறிய பாடல், நாட்டுப்பாடல், வர்ணம் ஆகிய பாடல்களை தழிழ் பாடல்களாக கற்றுக் கொள்வது இலகுவாகவும், நன்மை தருவதாகவும் இருக்கும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum