புத்தகம் - சிறு கதை
Mon Dec 28, 2015 10:42 pm
''என்ன லைப்ரேரியன் சார்! உங்ககிட்டே 'குழந்தை வளர்ப்பது எப்படி?' என்கிற புத்தகம் இருக்கா?''
''ஓ, இருக்கே! குமாரசாமி எழுதின புத்தகம் இருக்கு. தரவா? இந்தப் புத்தகத்திலே விசேஷம் என்னவென்றால், அகிம்ஸா முறையிலே... அதாவது, குழந்தைகளை அடிக்காமல் எப்படி வளர்ப் பது என்பதைப் பற்றி விவரமா எழுதியிருக்கு!''
''கொடுங்க, கொடுங்க! இந்த மாதிரி புத்தகம்தான் வேணும்! சாதாரண ஐந்தா வது கிளாஸ் பெயிலான துக்கே எங்கப்பா என்னைப் போட்டு அடிச்சிட்டார். முன்னே அந்த பெரியசாமி எழுதின புஸ்தகத்தைக் கொண்டு போய்க் கொடுத் தேன். பலன் இல்லே! இதைப் படிச்ச பிறகாவது, அப்பா என்னை அடிக்கி றதை விடறாரா, பார்ப் போம்!''

Re: புத்தகம் - சிறு கதை
Mon Dec 28, 2015 10:42 pm
கீதாவின் பாசம்!
ரங்கனைப் படிப் புக்காக வெளியூருக்கு அனுப்பும் திட்டத்தை வீட்டில் உள்ள அனை வரும் வரவேற்றார்கள். ஏனென்றால், ரங்கன் வீட்டில் எல்லோருக் கும் அதிக தொந்தரவு கொடுப்பான். அவ னைக் கண்டாலே வீட் டில் எல்லோருக்கும் ஒரு பயம். அதனால் அவனை வெளியூர்ப் பள்ளியன்றில் சேர்த்து, அங்கேயே தங்கியிருந்து படிக்கும் படி செய்ய உத்தேசித் தார் அவன் தந்தை.
பாட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ரங்கனைக் கண்டாலே சிம்ம சொப்பனம். அவன் எந்த நேரத்தில் என்ன தொந்தரவு தருவானே என்று சதா சர்வ காலமும் பயந்துகொண்டு இருப்பாள். தாத்தாவுக்கும் ரங்கன் வீட்டை விட்டுப் போவதில் வெகு சந்தோஷம். ஏனென்றால், அவரது மூக்குக் கண்ணாடியும் பொடி டப்பியும் திடீர் திடீ ரென்று மாயமாக மறைந்துவிடும்போதெல் லாம், ரங்கனுக்கு லஞ்சமாக சாக்லெட் வாங்கித் தந்தால்தான் அவை திரும்பும்.
எல்லோரும் இப்படி ரங்கன் வெளியூர் போவது குறித்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில், சிறுமி கீதா மட்டும் வருத்தப்பட்டாள். மற்றவர்களுக்கு அது வியப்பாக இருந்தது. ரங்கன் என்ன, அவளி டம் மட்டும் அன்பாகவா இருந்தான்? இல்லையே? எடுத்ததற்கெல்லாம் வீம்பு பிடித்து, அவளை அழ வைத்து வேடிக்கை பார்ப்பானே!
அம்மாவுக்கு கீதாவின் சகோதர வாஞ்சையைக் காணப் பெருமையாக இருந்தது.அவளைத் தன் இரு கைகளாலும் வாரி அணைத்து, ''அழாதே கண்ணே! அண்ணன் நன்றாகப் படிக்க வேண்டாமா? உன்னைப் பார்த்துக்கொள்ள நாங்கள் எல்லாம் இருக்கி றோமே! உனக்கு என்ன குறை?'' என்று தேற்றினாள்.
''எல்லாம் சரி அம்மா! ரங்கன் போய்விட் டால், அலமாரியிலிருக்கும் பட்சணங்களை எடுத்துத் தின்றுவிட்டு இனி யார் மேல் பழி போடுவேன்?'' என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் கீதா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum