சிறு நீரகக்கல் பிரச்சனையா? சிறு பீளைச்செடி........
Tue Jun 23, 2015 8:53 am
சிறு நீரகக்கல் பிரச்சனையா?
கவலை வேண்டாம்.
சிறு நீரகக்கல் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் டாக்டர் இடம் சென்றிருப்பீர்கள் ! அவரும் எல்லா சோதனைகளும் முடித்து மருந்துகள் கொடுப்பார் பிறகு மீண்டும் வலி வரும் மீண்டும் சோதித்து ஆபரேஷன் தான் வழி என்றும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு வைப்பார்.
நீங்களும் வேறு வழியின்றி வலி தாங்காமல் ஆபரேஷன் செய்து பணத்தை கட்டி அழுவீர்கள்!
ஆனால் சிறு நீரகக்கல் பிரச்சனை மீண்டும் மீண்டும் வரும் எத்தனை முறை டாக்டர் இடம் பணத்தை கொட்டி அழுவது?
சரி இனி விசயத்திற்கு வருகிறேன்,
சிறு பீளைச்செடி........
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்:
சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.
மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை:
இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.
மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
இதை உட்கொள்ளும் போது மருந்து வேளை செய்தால் சிலருக்கு வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம். நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள் ஆபரேஷன் செய்திருப்பினும் மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum