சமையலுக்கு சிறு குறிப்புகள்
Mon Dec 31, 2012 2:06 pm
பண்டிகை காலங்களில் மீந்து போன பொரியல், சாம்பார், ரசம் இவைகளுடன் தேவையான
அளவு மிளகு, சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் ருசியான சுண்டக்
குழம்பு தயார். மிளகு, சீரகத்தூள் சேர்ப்பதால் பழைய குழம்பின் வாடை வராது.
* புளியும் மிளகாயும் புதியதாக "பளிச்' நிறத்தோடு இருந்தால் செய்யும் ஊறுகாறும் நல்ல நிறத்தில் வரும். எளிதில் கெட்டுப் போகாது.
*
போளி தயாரிக்கும்போது மேல் மாவுக்கு மைதா மாவு பிசையும்போது சிறிது பால்
பவுடரும் சேர்த்துப் பிசைந்தால் போளி மிருதுவாக இருக்கும்.
*
பாசிப்பருப்பை குக்கரில் வைத்தால் குழைந்துவிடும். இதைத் தவிர்க்க மூடி
போட்ட ஒரு டப்பாவில் பருப்பைப் போட்டு, திட்டமாக தண்ணீர் ஊற்றி சிறிது
உப்பு சேர்த்து மூடி குக்கரில் வைத்து எடுத்தால் பருப்பு குழையாது.
*
ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து அதில் வேப்பிலை போட்டு வைத்துவிட்டு
மாலையில் அந்த நீரைச் செடிகளுக்கு ஊற்றினால் செடிகளில் பூச்சி அரிப்பு
ஏதும் இல்லாமல் இருக்கும்.
* வெள்ளரிக்காய் கசக்கிறதா? இரு
முனைகளையும் நறுக்கி விட்டு சிறிது உப்புத் தூளை நறுக்கிய பகுதியில்
தேய்த்தால் நுரை வரும். இந்த நுரையைக் கழுவிவிட்டால் கசப்புத்தன்மை
நீங்கிவிடும்.
* தேங்கா துருவல், தனியா, பெருங்காயம், உப்பு, புளி,
கறிவேப்பிலை, கடுகு ஆகியவற்றை நல்லெண்ணெய்விட்டு வதக்கி மிக்ஸியில்
பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை இட்லி, தோசை, தயிர்
சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
* வெறும்
தோசையையே சாப்பிட்டு சாப்பிட்டு பிடிக்காமல் போனவர்களுக்கு தோசை மாவில்
இஞ்சி, பச்சைமிளகாய் விழுதை சேர்க்கலாம். அல்லது கறிவேப்பிலை,
கொத்துமல்லித் தழையை சிறிது மிளகு, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துச்
சேர்த்து தோசை வார்க்கலாம்.
* மிக்சரில் கறிவேப்பிலையை நன்கு பொடியாக நறுக்கிய பின் பொரித்துக் கலந்தால் மிக்சர் வாசனை ஊரைத் தூக்கும்.
* பாகற்காய் குழம்பு வைக்கும்போது ஒரு தேக்கரண்டி மாங்காய் பொடியைச் சேர்த்துக் கிளறினால் பாகற்காயின் கசப்பு தெரியாது.
*
பண்டிகை நாள்களில் எந்தப் பாயாசம் செய்வதானாலும் அதில் கொஞ்சம் பாதாம்
பவுடர் சேர்த்தால் பாயாசம் கெட்டியாகவும், வாசனையாகவும் சுவை தூக்கலாகவும்
இருக்கும்.
* நிறைய ஐஸ் தேவைப்படும் சமயத்தில் ஐஸ் ட்ரேயில்
வைத்தால் போதாது. சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் தண்ணீர் நிரப்பி இறுக்கமாக
ரப்பர் பாண்ட் போட்டு செங்குத்தாக எல்லா ஐஸ் ட்ரேயிலும் நிறுத்தி வைத்தால்
உறைந்தவுடன் அப்படியே பையுடன் எடுக்கச் சுலபமாக இருக்கும்.
* வடாம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாக இருந்தால்தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.
*
பாகற்காய் மலிவாகக் கிடைக்கும்போது நிறைய வாங்கி மெல்லிய வட்டங்களாக
அரிந்து உப்புப்போட்டுக் குலுக்கி 2,3 நாள்கள் வைத்திருந்து பின் வெயிலில்
காய வைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையானபோது எண்ணெயில் பொரித்து உப்பு,
காரம் சேர்த்துச் சாப்பிடலாம்.
* மீந்து போன இட்லிகளை உப்புத்
தண்ணீரில் நனைத்து பிழிந்து, உதிர்த்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயில்
மிளகு, சீரகத்தூளைப் பொரித்து அத்துடன் உதிர்த்த இட்லியைச் சேர்த்தால்
சுவையான மசாலா இட்லி ரெடி.
கீதா ஹரிஹரன், கொச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum