தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்  Empty ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்

Thu Apr 18, 2013 7:08 pm
ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்  545921_361623003942390_395239430_n


இவர்கள் ஏகோவா மட்டும் தான் தெய்வம், இயேசு கிறிஸ்து ஓர் மனிதன், பரிசுத்த ஆவியானவரும் தெய்வம் இல்லை என்று கூவிவரும்
இவர்கள் குறிபார்ப்பது கிறிஸ்தவர்களை மட்டும் தான். அதுவும் CSI ,
லுத்தரன், methodist சபைக்கு போகும் கிறிஸ்தவர்களை குறிபார்ப்பது தான்
இவர்கள் வேலை. இவர்கள் கிராமபுரங்களில் அதிகமாக பெருகி வருகிறார்கள்.
குறிப்பாக கோவை மாவட்டம், ஊட்டி, கொடைகானல், மதுரை, சென்னை போன்ற
பகுதிகளில் அதிகமாக வளர்ந்துவருகிறார்கள். நான் ஓர் CSI சபையில் தேவனுடைய
வார்த்தையை பகிர்ந்து விட்டு கடைசியாக ஏகோவா சாட்சிகளை குறித்து
எச்சரிக்கையாய் இருக்க சொன்னேன். ஆலயம் முடிந்ததும் பலர் என்னிடம் வந்து
ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். பிறகு சபை
ஆயரோடு அவர்களின் இல்லங்களுக்கு அன்றே சென்று அவர்களுக்கு விளக்கினோம்.

அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் ஏகோவா சாட்சிகளை வீட்டில்
அனுமதிப்பதில்லை. நீங்கள் எப்படி? 1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில்
அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா
ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று
சோதித்தறியுங்கள்.

எப்படி சோதித்தறிவது? இங்கே தான் கிறிஸ்தவர்கள்
தவறுகிறார்கள். எங்கே? வேதத்தை படிப்பதோடு மட்டுமல்ல... ஒருவர் கடவுளை
பற்றி கூறும்போது அதை மனதில் எடுத்துகொள்ளும் முன்பாக வேதத்தோடு ஒப்பிட்டு
பாருங்கள். சிலர் வேதவசங்களை சொல்லமலேயே செய்தியை முடித்துவிடுகிறார்கள்.
அல்லது ஆரம்பித்தில் ஒன்றை ஆரம்பித்து முடிவில் ஒன்றை சொல்லுவார்கள். சிலர்
நம் உணர்வை தூண்டும் விதமாக மனதை பாதிக்கும் விஷயத்தை சொல்லி கவனத்தை
ஈர்க்க பார்பார்கள். சிலர் சம்பந்தமில்லாத வேதவசனத்தை கோர்த்துவிடுவார்கள்.


நீங்கள் வேதவசனத்தை ஆராய அழைக்கிறேன். அதற்கு உங்கள் சபை போதகரை
வேத ஆராய்ச்சி கூடங்களை உங்கள் இல்லத்திலோ, ஆலயத்திலோ நடத்த சொல்லுங்கள்.
அவரிடம் உங்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை கேளுங்கள். தெளிவடையுங்கள்.
இல்லையென்றால் இப்படிப்பட்ட கும்பல்களிடம் ஒரு வேலை நீங்கள் தப்பிக்கலாம்.
ஆனால் உங்கள் பிள்ளைகள் தப்பிபார்களா?

இப்படிப்பட்டவர்கள்
உங்களிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். உங்களை தர்க்கம் பேச வைத்து
உங்கள் வேத அறிவை தெரிந்து கொள்வார்கள். பிறகு உங்கள் அறிவிற்கேற்ப குழப்ப
பார்பார்கள். வேதத்தை முழுவதும் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் பேச்சில்
மயங்கி விடுவர். 1 திமோத்தேயு 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும்
சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று
எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும்
பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

1 திமோத்தேயு 6:1
ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே
மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற
ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து,
விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

என்று வேதம் எச்சரிக்கிறது.
ஜாக்கிரதையாய் இருங்கள். உங்கள் ஆலயங்களிலோ, போதனைகளிலோ வேதவசனம் சரியாய்
கோர்க்கப்படவில்லை என்றால் அதை விட்டு விலகுங்கள். பரிசுத்த வேதாகமத்தில்
சொல்லபட்டிருக்கிற எல்லாவற்றிக்கும் பதில் பரிசுத்த வேதாகமத்தில் உண்டு.
உங்கள் சபை ஆயரை, போதகரை அணுகி விடை வேதத்தின் அடிப்படையில் விடை
தேடுங்கள். அல்லது மிஷனரி ஸ்தாபனங்கள் மூலமாக நடக்கும் முகாமில் கலந்து
கொள்ளுங்கள். (நண்பர் சுவிஷேச ஜெபக்குழு, விஸ்வவாணி, IMS , இந்திய
நற்செய்தி மாணவர் மன்றம் (UESI _TN ), Scripture Union , என்று பல நல்ல
ஊழிய ஸ்தாபனங்கள் உண்டு. அணுகவும்.

தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்  Empty Re: ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்

Thu Apr 18, 2013 7:16 pm
Message reputation : 100% (1 vote)

ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்  Jehova+witness

யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?




முதலில்
இது எவ்வாறு ஆரம்பித்தது என்று
பார்ப்பது அவசியம். இவர்கள் பொதுவாக வாட்ச்
டவர் வேத,
துண்டுப்பிரசுர நிறுவனம்
(Watch Tower Bible and Tract Society) என்ற
பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ்ரசல் (Charles Taze Russell)
என்ற மனிதனின் போதனைகளை யே இக்கூட்டம் சத்தியமாக
பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல்
1870 இல் தனது பதினெட்டாம் வயதில்
ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின்
வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து
அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப்
பரப்பினார்.இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து
வந்தார் ரசல். 1916 இல் இறந்தரசலின் வாழ்க்கை
ஒழுங்காக அமைந்திருக்கவில்லை.



அவரது மனைவி, ரசல் ஆணவம்
பிடித்த மனிதன் என்றும்
எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றம் சாட்டி
அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள்
சொத்து க்களை தனக்குக் கொடுத்து
விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின்
பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரசல்
நீதி மன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார்.
ரசல் இறந்த பின் ஜோசப்
பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin
Rutherford) இந்நிறுவனத்தின்
தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன்
ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட்
ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்குயெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின்புதிய
உலக மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது.
இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை
மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து
பரப்பி வருகின்றது.







இவர்கள்
போதிப்பதென்ன?




யெகோவாவின்
சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம்
கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1. காலங்களுக்கெல்லாம்
அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண
முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும்
உருவா க்கினார் என்று போதிக்கும் இக்கூட்டம்
வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது.
திரித்துவப்போதனை கிறிஸ்தவ த்தின்
அடிப்படைப் போதனை.

2. கிறிஸ்து
கடவுளால் ஆரம்பத்தில் படைக்க ப்பட்டவர். இயேசு
கிறிஸ்து நித்திய த்திலிருந்து கடவுளின்
குமாரன் அல்ல என்று இக்கூட்டம்
விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும்,
அவரே மைக்கல் என்ற தலைமைத்
தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள்.
கிறிஸ்து ஒருவிதத்தில் கடவுள்தான் ஆனால், யெகோவா போன்ற
கடவுள் இல்லை என்பது இவர்களின்
விசுவாசம். கிறிஸ்து தேவ குமாரனேயொழிய
கடவுள் இல்லை. கிறிஸ்து மனிதனாக உலகில் தோன்றியபோது
அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும்
இருக்கவில்லை என்றும் ஆனால் முழு
மனிதனாக மட்டும் இருந்தார் என்றும்
இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனித னின் பாவநிவாரணத்திற்காக
கொடூரமான மரணத் தை சந்தித்தார்
என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.




இதிலிருந்து
யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும்
எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து,
கடவுள் என்பதை மறுக்கும் எவரும்
வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியா கமம்
முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு
இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து
நித்தியத்தி லிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was
eternally the Son of God) என்று
வேதம் தெளி வாகப்போதிக்கின்றது.
கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு
தனதுதெய்வீகத்
தன்மையில் எதையும் இழக்கவில்லை.

3. பரிசுத்த
ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும்
வல்லமையே தவிர அவர் கடவுளல்ல.
அவர் ஒரு நபருமல்ல என்று
யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய
சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா
பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்லமையே பரிசுத்த ஆவி
என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த
ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத்தன்மை பொருந்திய வரோ அல்லது திரித்துவத்தின்
ஓர் அங்கத்தவரோ இல்லை.




இது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த
ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத் தவராக, ஓர்
நபராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள்
என்றும் வேதம் போதிக்கின்றது.

4. மனிதனுக்கு
அழிவற்ற நித்திய ஆத்துமா(Immortal soul) இல்லை. ஆகவே
அவன் இறந்தபின் காற்றோடு கலந்து
இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள்
போதிக்கின்றது. ஆனால் மனிதன்
அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான்
என்று வேதம் போதிக்கின்றது.

5. நித்திய
நரகம் என்று ஒன்றில்லை என்றும்,
நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள்
போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை
அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான்
என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு
மாறாக பாவியான மனிதன் இறந்தபின்
நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான்என்றுதெளிவாகப்போதிக்கின்றது.




நன்றி: hichristians
avatar
jacobarulraj
புதியவர்
புதியவர்
Posts : 1
Join date : 17/09/2013

ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்  Empty Re: ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்

Thu Sep 19, 2013 3:23 pm
thank you for your explanation. it is very useful for me
Sponsored content

ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்  Empty Re: ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum