கடன், இ.எம்.ஐ பற்றிய விபரங்கள்
Wed Apr 17, 2013 2:08 am
வீட்டுக்
கடன், கார் கடன் அல்லது தனி நபர் கடன் போன்றவற்றை வாங்கும் போது அவற்றை
மாதாந்திர தவணையில் திருப்பி செலுத்த வேண்டும். கடன் தொகை, வட்டி விகிதம்
மற்றும் அதனைத் திருப்பிச் செலுத்தும் காலம் போன்றவற்றை கணக்கில் கொண்டு
நிர்ணயிக்கப்படும் தொகை தான் மாதாந்திர கட்டணமாக செலுத்தச் சொல்கிறார்கள்.
இதைத் தான் இ.எம்.ஐ (EMI) அல்லது சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை என்பர்.
சரி, ஒரு வங்கியில் கடன் வாங்குகிறோம். அவர்கள் ஒரு மாதாந்திர தவணைத்
தொகையை செலுத்துமாறு அறிவுறுத்துகின்றனர். அந்த தொகை எப்படி வந்தது, எப்படி
கணக்கிடப்படுகிறது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
இஎம்ஐ எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?
கடன் தொகை மற்றும் வட்டி தொகை கலந்து இருப்பது தான் மாதாந்திர தவணைத்
தொகை. கடன் பெற்ற ஆரம்பத்தில் வட்டித் தொகை அதிகமாகவும், கடன் தொகை
குறைவாகவும் கலந்து இருக்கும். மாதாந்திர தவணையை கணக்கிடும் முறையை இங்கே
பார்ப்போம். மிகவும் எளிதான ஒரு கணக்கு தான்.
இ.எம்.ஐ = ( (கடன் தொகை X வட்டி) X (1+வட்டி) ^ மாதங்கள் ) diveded by ( (1+வட்டி)^ மாதங்கள் - 1 )
உதாரணமாக, நாம் பத்து லட்சம் ரூபாய், 11% வட்டி விகிதத்தில், 15 வருட கடன் காலத்துக்கு வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
கடன் தொகை = 10,00,000
வருட வட்டி விகிதம் = 11%
அப்போ ஒரு மாத வட்டி விகிதம் = 11/12 % =0.0091 %
ஆக மாத வட்டி = 0.91667%
விகிதத்தை(%) நீக்க 100 ஆல் வகுக்கவும்
ஆக மாத வட்டி = 0.91667 / 100 =0.0092
கடன் காலம் = 15 வருடம்
மாதக் கணக்கில் = 15 x 12 = 180 மாதங்கள்
சரி..இப்போது நம் ஃபார்முலா படி மாதாந்திர தவணையை கணக்கிடுவோம்.
இ.எம்.ஐ = (10,00,000 X 0.0091667) x (1+0.0091667) ^ 180
----------------------------------------------------
( (1+0.0091667) ^ 180- 1 )
= 9166.667 x 5.16829
------------------------
4.16823
= 47375.99
-----------
4.16823
இ.எம்.ஐ = 11,365.97
மாதாந்திர தவணை = ரூ. 11,365.97
நிரந்தர வட்டி விகிதம், ப்ளோட்டிங் வட்டி விகிதம் என வட்டி விகிதங்கள் இரண்டு வகைப்படும்.
நிரந்த வட்டி விகிதம்:
கடன் காலம் முழுவதும் ஒரு வட்டி நிர்ணையித்து, அதற்கேற்றார் போல மாதாந்திர
தவணை கணக்கு செய்யப்படும். வட்டி விகிதம் மாறாத காரணத்தால் மாதாந்திர
தவணையும் மாறாமல் இருப்பது தான் நிரந்தர வட்டி விகிதம். இனிவரும்
காலங்களில் வட்டி விகிதம், இப்போது இருப்பதை விட உயரத்தான் செய்யும் என்ற
நம்பிக்கை கொண்டவர்கள் நிரந்தர வட்டி விகிதத்திற்கு செல்வார்கள்.
ப்ளோட்டிங் வட்டி விகிதம்:
சந்தைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடுகிறது. அதற்கேற்ப ஆர்.பி.ஐ வட்டி
விகிதங்களை அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாம் வாங்கிய
கடனுக்கான வட்டி விகிதங்களும் மாறும். இதனால், நாம் செலுத்த வேண்டிய
மாதாந்திரத் தவணையோ அல்லது கடன் செலுத்தும் காலமோ மாறலாம். இதனைத் தான்
ப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பர்.
தேவையறிந்து கணக்கிட்டு, நமக்கு ஏற்ற மாதாந்திர தவணையை முடிவு செய்த பிறகு, கடன் வாங்குவது அனைவருக்கும் நல்லது!
நன்றி: என் இனிய ...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum