தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில் Empty இரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்

Fri Jan 26, 2018 3:01 pm
ஒரு தேவமனிதன் இரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில் பல கோழைகளின் தொடை நடுக்கம் இருக்கிறது.
முதலாவதாக சாத்தான் என்கிற தொடைநடுங்கி, தேவனுடைய மனிதர்களைக் கண்டு மட்டுமல்ல அவர்களுடைய வித்தைக் கண்டுகூட நடுங்குகிறவன். எகிப்திலே யூத குழந்தைகள் கொல்லப்பட்டது, ஆண்டவராகிய இயேசு பிறப்பின்போது யூதேயாவின் குழந்தைகள் அழிக்கப்பட்டது, இப்படி கிரகாம் ஸ்டெயின்ஸின் பிஞ்சுப் புதல்வர்கள் பொசுக்கப்பட்டது வரை சரித்திரம் நீள்கிறது. தனது அதிகாரத்தை ஆட்டங்காணச் செய்யும் வல்லமை தேவனோடு இணைந்த ஒரே ஒரு சாதாரண தனி மனிதனுக்குக்கூட உண்டு என்பதை அவன் அறிந்திருக்கிறான். அந்த பயம் இருக்கட்டும்!
அடுத்ததாக மிருகம் போட்ட அதிகாரப் பிச்சையில் கோலோச்சிக்கொண்டிருக்கும் ஏரோது போன்ற கோழைகள். அதிகாரம் பறிபோய்விடுமோ என்று தங்கள் எஜமானனுக்கு இருக்கும் அதே பயம்! தேவமனிதன் பேசும் சத்தியத்துக்கு நிகரான ஆயுதம் ஏதுமற்ற வெறுங்கையர்கள். இவர்களுக்கு சத்தியம் புரிகிறதோ இல்லையோ ஆனால் தங்கள் ஆளுகைக்கு முற்றிலும் முரணான இறையரசின் தொனி இது என்பது மட்டும் அவர்களுக்குப் புரியும். தனக்கு ஆளுகையைத் தந்த மத அதிகாரத்துக்கு முரணாக இருக்கும் விசுவாசத்தை வளரவிட்டால் தனது அரியணை பறிபோகும் என்ற பயம்! அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கொலை செய்வது மாத்திரமே! கோழைத்தனத்தின் உச்சம்!
அடுத்ததாக கொலையை நிகழ்த்தும் ஏவலாளிகள், தங்கள் எஜமானனின் கையசைவுக்கு கட்டுப்பட்டு ஓடிப்போய் எதிரியை குதறிவிட்டு வரும் வேட்டை நாய்கள். அதிகார யெசெபேல்கள் கண்ணசைத்தால் அப்பாவி நாபோத்தின் குடும்பத்தைக்கூட பீறிப்போடுவார்கள். இது பிழைப்பிற்கான வழி, இல்லாவிட்டால் அடுத்த வேளை அப்பம் கிடைக்காதோவென்ற பயம்! நேர்மையான வழியில் வாழ்க்கையை சந்திக்க துணிவற்றவர்கள்! கேடுகெட்ட பிழைப்பு!
பயமற்றவன் தேவமனிதன்! 
பிழைப்பைக் குறித்து பயமில்லை, போஷிக்கிறவர் கர்த்தர்
இழப்பைக் குறித்து பயமில்லை, மீட்டுத் தருகிறவர் கர்த்தர்
ரணத்தைக் குறித்து பயமில்லை, குணமாக்குகிறவர் கர்த்தர்
மரணத்தைக் குறித்தும் பயமில்லை, உயிர்ப்பிக்கிறவர் கர்த்தர்
இவனை பயமுறுத்தவோ, பிடித்து வைக்கவோ எதுவுமில்லை!
பயம் இவ்வுலகுக்குரியது, இவன் உலகுக்குரியவனில்லை!
ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum